மத்தியபிரதேசம்: 3 போலீசாரை சுட்டுக் கொன்ற மான் வேட்டைக்காரர்கள்
மத்தியப் பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் இன்று அதிகாலை 3 காவலர்கள் மான் வேட்டையாடுபவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக பேசிய குணா மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜீவ் மிஸ்ரா, “துப்பாக்கியுடன் இருந்த மான் வேட்டைக்காரர்களை பிடிக்க காவல்துறை அதிகாரிகள் முயன்றபோது, தங்கள் மோட்டார் சைக்கிளில் இருந்து போலீசாரை நோக்கி வேட்டைக்காரர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதற்கு காவல்துறையினரும் தக்க பதிலடி கொடுத்தனர். ஆனால் அடர்ந்த வனப்பகுதியாக இருந்ததை சாதகமாக பயன்படுத்தி வேட்டைக்காரர்கள் தப்பித்துக்கொண்டனர். … Read more