முதலிடத்தில் டாடா.. அப்போ ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், அதானி குரூப்..!

இந்தியாவை பொருத்தவரை டாடா நிறுவனத்தை ஒரு மதிப்புமிக்க நிறுவனமாகத்தான் அனைத்து இந்தியர்களும் மரியாதை கொடுத்து பார்த்து வருகின்றனர்.

இந்தநிலையில் தற்போது இந்நிறுவனம் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பிராண்ட் பைனான்ஸ் என்ற அமைப்பின் பட்டியலில் டாடா முதலிடத்தை பெற்றுள்ளது.

2022ஆம் ஆண்டில் மதிப்புமிக்க மிகச் சிறந்த 10 இந்திய நிறுவனங்களின் பட்டியலை இந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. இதில் முதலிடத்தில் டாடா, இரண்டாவது இடத்தில் இன்போசிஸ் மற்றும் மூன்றாவது இடத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

1 வாரத்தில் ரூ.720 கோடி லாபம்.. ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவுக்கு அள்ளிக் கொடுத்த டாடா குழும பங்கு.. !

டாடா குழுமம்

டாடா குழுமம்

பிராண்ட் பைனான்ஸ் அமைப்பின் அறிவிப்பின்படி டாடா குழுமம் 24 பில்லியன் டாலர் மதிப்புள்ள பிராண்டாக உருவெடுத்து முதலிடத்தில் கம்பீரமாக உள்ளது. இந்நிறுவனம் இந்த ஆண்டு தனது பிராண்ட் மதிப்பில் 12 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்நிறுவனம் உலகெங்கிலும் உள்ள தனது வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது என்று பிராண்ட் ஃபைனான்ஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

 இன்ஃபோசிஸ்

இன்ஃபோசிஸ்

இன்ஃபோசிஸ் நிறுவனம் தனது பிராண்ட் மதிப்பில் 52 சதவீதம் அதிகரித்து 12.8 பில்லியன் டாலர்களுடன் இரண்டாவது மதிப்புமிக்க நிறுவனம் என்ற பெருமையை பெற்றுள்ளது. கொரோனா வைரஸ் காலத்தின் போதிலும் இன்ஃபோசிஸ் பிராண்ட் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டது என்றும் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

 எல்ஐசி
 

எல்ஐசி

எல்ஐசி தரவரிசையில் சரிவைக் கண்ட போதிலும் இந்த ஆண்டு மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. $11.1 பில்லியன் மதிப்புடன் பிராண்ட் பிராண்ட் மதிப்பில் 28 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் மதிப்பு 5 சதவீதம் அதிகரித்து 8.6 பில்லியன் டாலர் பிராண்ட் மதிப்புடன் நான்காவது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. கொரோனா வைரஸ் காலத்தில் கூட இந்நிறுவனத்தின் மதிப்பு உயர்ந்து கொண்டே தான் இருந்தது.

தாஜ் ஹோட்டல்கள்

தாஜ் ஹோட்டல்கள்

மேலும், தாஜ் ஹோட்டல்கள் அதன் மதிப்பு 6 சதவீதம் அதிகரித்து 314 மில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்து வலுவான பிராண்டாக உருவெடுத்தது. கடந்த இரண்டு ஆண்டுகளில் கோவிட்-19 தாக்கம் காரணமாக விருந்தோம்பல் துறையில் உள்ள பிராண்டுகள் சரிவை சந்தித்தாலும் தாஜ் ஹோட்டல்கள் வளர்ச்சி விகிதம் சிறப்பாக இருந்தது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்.பி.ஐ

எஸ்.பி.ஐ

இந்த ஆண்டு அதிக பிராண்ட் மதிப்பு வளர்ச்சியைக் கண்ட துறைகளில் வங்கி, தகவல் தொழில்நுட்ப சேவைகள் மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் அடங்கும்.
வங்கித் துறையில், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) பிராண்ட் மதிப்பில் 29 சதவீத வளர்ச்சியுடன் தெற்காசியாவின் சிறந்த பிராண்டாக உருவெடுத்தது. இதன் மதிப்பு $7.5 பில்லியன் மற்றும் இந்தியாவில் ஆறாவது மதிப்புமிக்க பிராண்டாகும்.

டிசிஎஸ்

டிசிஎஸ்

தகவல் தொழில்நுட்ப சேவைத் துறையைப் பொறுத்தவரை, 2022 ஆம் ஆண்டு டிசிஎஸ் நிறுவனத்தின் பிராண்ட் மதிப்பு 12 சதவீதம் அதிகரித்து 16.7 பில்லியன் டாலராக உள்ளது. மற்ற ஐடி நிறுவனங்களான அக்சென்ச்சர், விப்ரோ, எச்சிஎல் மற்றும் டெக் மஹிந்திரா ஆகியவற்றின் பிராண்ட் மதிப்பு முறையே 39 சதவீதம், 48 சதவீதம், 10 சதவீதம் மற்றும் 30 சதவீதம் அதிகரித்துள்ளது.

ஏர்டெல்

ஏர்டெல்

தொலைத்தொடர்பு துறையை பொருத்தவரையில் ஏர்டெல் பிராண்ட் மதிப்பு 28 சதவீதம் அதிகரித்து 7.7 பில்லியன் டாலர்கள் மதிப்புடன் உள்ளது. ஏர்டெல் நிறுவனத்தை அடுத்து ஜியோ பிராண்ட் மதிப்பு $5.1 பில்லியன் எனவும் இந்நிறுவனம் 5 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது என்றும் பிராண்ட் பைனான்ஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Tata group retains its top spot as India’s most valuable brand!

Tata group retains its top spot as India’s most valuable brand! | tata, top ten company, Brand Finance, டாடா, ரிலையன்ஸ், டாப் 10 நிறுவனங்கள்,

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.