எல்ஐசி-ன் சீக்ரெட் இது தான்.. ரூ.42,000 கோடி லாபம்.. எங்கிருந்து கிடைத்தது தெரியுமா?

எல்ஐசி என்றாலே நம்மில் பலருக்கும் நினைவுக்கு வருவது இன்சூரன்ஸ். ஆனால் எல்ஐசி சிறந்த முதலீட்டாளரும் கூட. இதற்கு சிறந்த உதாரணம் 2022ம் நிதியாண்டில் பங்கு சந்தையில் இருந்து மட்டும், 42,000 கோடி ரூபாய் லாபத்தினை புக் செய்துள்ளது. இதே கடந்த 2020 – 2021ம் நிதியாண்டில் 36,000 கோடி ரூபாய் லாபத்தினை புக் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. ரூ.1.4 கோடி சம்பளத்தில் கூகுள் நிறுவனத்தில் வேலை.. அசத்தும் ஐஐஐடி மாணவர்..! மிகப்பெரிய அசெட் மேனேஜர் இந்தியாவின் மிகப்பெரிய அசெட் … Read more

அம்மன் அவதாரம் எடுத்த ஷகிலாவின் மகள்… வரவேற்பை பெறும் புதிய போட்டோஷூட்

Actress Shakeela Daughter Milla Amman Getup Viral Photoshoot : நடிகை ஷகிலாவின் வளர்ப்பு மகள் மிலா அம்மன் கெட்டப்பில் போட்டோஷூட் நடத்தி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது. 80-90-களில் தென்னிந்திய சினிமாவின் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஷகிலா. தமிழ் சினிமாவில் சப்போர்ட்டிங் கேரக்டரில் தனது திரைப்பயணத்தை தொடங்கிய ஷகிலா அதன்பிறகு குடும்ப சூழ்நிலை காரணமாக கவர்ச்சிப்படங்களில் நடிக்க தொடங்கினார். இவர் கவர்ச்சி நடிகையாக வலம் வந்த காலத்தில், … Read more

கோயம்புத்தூர் : பேருந்தில் இருந்து தவறி விழுந்து இளம்பெண் உயிரிழப்பு.!

பேருந்தில் இருந்து தவறி விழுந்து இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குமரன் நகர் பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவசக்தி என்ற மனைவியை இருந்துள்ளார். இவர் அழகுக் கலை நிபுணராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் சிவசக்தி ஈரோட்டில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு பல்லடம் சாலையில் பேருந்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது சிவ சக்தி தான் அமர்ந்திருந்த இருக்கையில் இருந்து எழுந்து பேருந்தில் நடக்க முயற்சி செய்துள்ளார். … Read more

Rafael Nadal: உங்கள் இதயத்தை சீராக்க நடாலின் சடங்குகள் தேவை!

இரவு 1 மணி. தண்ணீர் பிடித்து பாட்டிலை மெத்தையின் அருகில் வைத்துவிட்டு படுத்தேன். நடால் vs ஜோகோவிச் போட்டி தொடங்கப்போகிறது. ஒவ்வொரு திசையிலும் தலையை வைத்து படுத்துப் பார்த்துக்கொண்டிருந்தேன். எந்தத் திசையில் ஆட்டம் நமக்குச் சாதகமாகச் செல்கிறது என்று தெரியவேண்டுமே. ஒரு பொசிஷனை முடிவு செய்து போட்டியைத் தொடர்ந்தால், சில சொதப்பல்கள். இப்போது எழுந்து அமர்ந்து, மீண்டும் ஒவ்வொரு பொசிஷனாக சோதித்துப் பார்க்கிறேன். லேப்டாப்பை வைக்கும் திசை, செல்போன் இருக்கும் தூரம், தலையணை இருக்கும் கோணம் எல்லாம் … Read more

தஞ்சையில் 9 பேர் கொண்ட கும்பல் நகை வியாபாரியின் பையை பறித்துச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியீடு

தஞ்சையில் தங்க நகை வியாபாரியிடம் இருந்து சுமார் ஆறரை கிலோ தங்கம், 14 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில், வெள்ளை சட்டை அணிந்த 9 பேர் கொண்ட கும்பல் நகை வியாபாரியின் பையை பறித்துச் சென்ற காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது. நகை வியாபாரியான மணி என்பவர் ஆர்டர் எடுத்த நகைகளை கொடுப்பதற்காக நகைகளையும் பணத்தையும் கருப்பு நிற பையில் வைத்து கொண்டு சென்றார். இதை நோட்டமிட்டு பின் தொடர்ந்த கும்பல், பேருந்து நிலையம் அருகே மணி … Read more

திருவண்ணாமலை கிரிவல பாதையில் கருணாநிதி சிலை அமைப்பதை எதிர்த்து வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு 

சென்னை: திருவண்ணாமலையில் கிரிவல பாதையையும், மாநில நெடுஞ்சாலையையும் இணைக்கும் இடத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை அமைப்பதை எதிர்த்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம், தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் வேளச்சேரியைச் சேர்ந்த ஜி.கார்த்திக் என்பவர் தாக்கல் செய்த மனுவில், திருவண்ணாமலை கிரிவல பாதையும், மாநில நெடுஞ்சாலையும் இணையும் வேங்கைக்கால் பகுதியில் ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான 92.5 அடி நிலத்தை வாங்கிய ஜீவா கல்வி அறக்கட்டளை, அருகில் உள்ள நிலத்தையும் ஆக்கிரமித்து … Read more

நேஷனல் ஹெரால்டு வழக்கு: ராகுல், சோனியா காந்திக்கு அமலாக்கத் துறை சம்மன்

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, எம்.பி. ராகுல் காந்திக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது. ராகுல் காந்தி ஜூன் 2 ஆம் தேதியும், சோனியா காந்தி ஜூன் 8 ஆம் தேதியும் ஆஜராகும்படி நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜூன் 5 ஆம் தேதிக்குப் பின்னர் தான் வெளிநாடு செல்வதால் கால அவகாசம் வேண்டும் என்று கோரியுள்ளார். எதற்காக சம்மன்: அசோசியேட்டடு ஜர்னல்ஸ் நிறுவனத்தை (ஏஜெஎல்) சுதந்திரத்துக்கு முன்பு ஜவஹர்லால் நேரு தொடங்கினார். இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட … Read more

National Herald Case: சோனியா, ராகுலுக்கு 'சம்மன்!' – அமலாக்க துறை கிடுக்கிப்பிடி!

நேஷனல் ஹெரால்டு வழக்கில், வரும் 8 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கு, அமலாக்கத் துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பி உள்ளனர். நாடு விடுதலைக்கு முன்னர், அசோசியேட்டடு ஜர்னல்ஸ் நிறுவனம், ஜவஹர்லால் நேருவால் தொடங்கப்பட்டது. இந்நிறுவனத்தின் சார்பில் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வெளியாகி வந்தது. இப்பத்திரிகை நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி 90 கோடி ரூபாய் கடன் கொடுத்தது. ஆனாலும் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிறுத்தப்பட்டது. பின் 2010 ஆம் … Read more

தெற்கு மற்றும் கிழக்கு ஆஸ்திரேலியாவில் கடும் பனிப்பொழிவு.. பனிச்சறுக்கு விளையாடி மகிழும் ஆஸ்திரேலியர்கள்!

தெற்கு மற்றும் கிழக்கு ஆஸ்திரேலியாவின் பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. அந்நாட்டில் குளிர்காலம் தொடங்கிய நிலையில், கடந்த சில நாட்களாக பலத்த காற்றுடன் கூடிய பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் விக்டோரியா, டாஸ்மேனியா உள்ளிட்ட மாகாணங்களில் சாலைகளிலும் குடியிருப்புகளிலும் பனிபடர்ந்து வெண்போர்வை போர்த்தியது போன்று காட்சியளிக்கின்றன. வரும் நாட்களில் பனிப்பொழிவு இன்னும் அதிகரிக்கக் கூடும் என வானிலை மையம் கணித்துள்ள நிலையில், ஆஸ்திரேலிய மக்கள் பனிச்சறுக்கு விளையாடி மகிழ்கின்றனர். Source link

பாடகர் கே.கே உடலுக்கு மம்தா பானர்ஜி நேரில் அஞ்சலி

பாடகர் கே.கே உடலுக்கு மம்தா பானர்ஜி நேரில் அஞ்சலி துப்பாக்கி குண்டுகள் முழங்க கே.கே உடலுக்கு மரியாதை கொல்கத்தாவில், பாடகர் கே.கே. உடலுக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேரில் அஞ்சலி முதல்வர் மம்தா அறிவித்தபடி, பாடகர் கே.கே உடலுக்கு, மேற்குவங்க அரசு சார்பில் துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை ரவீந்திர சதன் கலாச்சார மையத்தில் வைக்கப்பட்ட உடலுக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி Source link