புதுடில்லி: இன்று (ஜூலை 23-ம் தேதி) ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கு பிரிவு உபசார விழா நடைபெற உள்ளதை தொடர்ந்து நேற்று, பிரதமர் மோடி ராம்நாத் கோவிந்திற்கு விருந்தளித்தார்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 2017, ஜூலை 25ல் பதவி ஏற்றார். அவருடைய பதவிக்காலம் வரும் 25ம் தேதியுடன் நிறைவடைகிறது.
கடந்த 18-ல் நடந்த ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ., கூட்டணி வேட்பாளராக போட்டியிட்ட ஒடிசாவைச் சேர்ந்த திரவுபதி முர்மு வெற்றி பெற்றார். வரும் 25-ல் ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளார்.
![]() |
![]() |
![]() |
![]() |
இந்நிலையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கு இன்று பிரிவு உபசார விழா பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெறகிறது.
முன்னதாக நேற்று பிரதமர் மோடி ராம்நாத் கோவிந்திற்கு விருந்தளித்தார். இதில் புதிதாக ஜனாதிபதியாக பொறுப்பேற்க உள்ள திரவுபதி முர்மு, மத்திய அமைச்சர்கள், பார்லி. லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா, மற்றும் பத்ம விருது பெற்றவர்கள், மற்றும் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement



