சென்னை தினம்: எஸ்.பி.பிக்கு அஞ்சலி- முக்கிய நிகழ்ச்சிகள் பட்டியல் இதோ

Chennai Tamil News: மெட்ராஸ் தினத்தில் சென்னையில் நடக்கும் நிகழ்ச்சிகளின் பட்டியல் மக்களுக்காக வழங்கப்படுகிறது.

சென்னை தனது 383வது பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில், சென்னை மாநகராட்சி ஏராளமான நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள் திட்டமிட்டுள்ளது.

மறுபுறம், சென்னை நகரின் வரலாற்றையும் மக்களின் கலாச்சாரத்தையும் போற்றும் வகையில் பல நிகழ்ச்சிகள் 21ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை திருவிழாப் போல திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னையின் புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் மறைந்த எஸ்.முத்தைய்யா, பத்திரிக்கையாளர் சஷி நாயர் மற்றும் வெளியீட்டாளர் வின்சென்ட் டிசோசா ஆகியோரால் 2004இல் கொண்டுவரப்பட்ட இந்த திருவிழா, இன்று வரை தொடரப்பட்டு வருகிறது.

மேலும், இசை உலகின் ஜாம்பவான் என்று அழைக்கப்படும் எஸ்.பி.பி.க்கு அஞ்சலி செலுத்தும் வகையில், நிகழ்ச்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

சென்னைத் தினத்தை கொண்டாடும் வகையில் திட்டமிடப்பட்டிருக்கும் நிகழ்ச்சிகளின் பட்டியல்:

ஆகஸ்ட் 21ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மறைந்த இசைக் கலைஞர் எஸ்.பி.பி.க்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நடிகரும் எழுத்தாளருமான மோகன் வி.ராமன் தி.நகரில் உள்ள ஜி.ஆர்.டி. மாநாட்டு மையத்தில் சொற்பொழிவு ஆற்றவுள்ளார்.

ஆகஸ்ட் 22ஆம் தேதி (திங்கட்கிழமை) சைன்போர்டுகளிலிருந்து கதைகள் பேசுவதற்கு சமூகம் எப்படி மாறியது என்பதைப்பற்றி நீதிபதி பிரபா ஸ்ரீதேவனுடன் எழுத்தாளர் திலீப் குமார் மயிலாப்பூரிலுள்ள அஷ்விதாஸில் உரையாடவுள்ளார்.

ஆகஸ்ட் 23 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) சமூக சேவகி பூனம் நடராஜனுடன் வரலாற்றாசிரியரும் மெட்ராஸ் மியூசிங்ஸ் ஆசிரியருமான வி. ஸ்ரீராம் சென்னை மெரினா கடற்கரைக்கு அருகிலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான அருங்காட்சியகத்தில் உரையாடவுள்ளார்.

ஆகஸ்ட் 24 ஆம் தேதி (புதன்கிழமை) செஸ் லெஜண்ட் மேனுவல் ஆரோனுடன் உரையாடல் ஹோட்டல் மார்ஸ், கதீட்ரல் சாலையில் நடைபெறுகிறது.

ஆகஸ்ட் 25 ஆம் தேதி (வியாழகிழமை) ‘மதராஸிலிருந்து சமையல் குறிப்புகள்’ என்ற நிகழ்ச்சியில், மதராஸ் நகரத்தின் ஒருங்கிணைந்த சமூகங்களின் தாக்கங்களைப் பற்றி ராகேஷ் ரகுநாதன் ஹனு ரெட்டி ரெசிடென்சில் பேசவுள்ளார்.

ஆகஸ்ட் 26 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணி முதல் 6.30 மணி வரை: கல்கியின் பொன்னியின் செல்வன் அரங்கேற்றத்தில் கலைஞரும் இயக்குனருமான பிரவின் கண்ணனூர் ஹோட்டல் சவேரா, மயிலாப்பூரில் பேசவுள்ளார்.

மேலும், அன்று மாலை 6.30 முதல் இரவு 8 மணி வரை – ‘அசிடிவிஸ்ம் இன் தமிழ் சினிமா மியூசிக்’ என்ற தலைப்பில் திரைப்பட தயாரிப்பாளர் கே.ஹரிஹரன் மற்றும் இசை தயாரிப்பாளர் சுபஸ்ரீ தணிகாசலம் 

கோதே இன்ஸ்டிட்யூட் ஆடிட்டோரியம், மேக்ஸ் முல்லர் பவன், ரட்லாண்ட் கேட்டில் தொகுத்து வழங்கவுள்ளனர்.

ஆகஸ்ட் 27 ஆம் தேதி (சனிக்கிழமை): மாலை 4 மணி முதல் 6 மணி வரை – ‘டிஜிட்டல் சென்னை’ என்ற தலைப்பில், சென்னை நிறுவனங்கள் டிஜிட்டல் அலையில் எப்படி பயணம் செய்கின்றன என்பதைப் பற்றி விகாஸ் சாவ்லா (இணை நிறுவனர், சோஷியல் பீட்) மற்றும் ஜகதீஷ் குமார் (இணை நிறுவனர்) ஆகியோரைக் கொண்ட குழு விவாதம், வணிக ஆலோசகர் மற்றும் ஐஐஎம் அகமதாபாத் முன்னாள் மாணவர் சந்து நாயரால் சேமியர்ஸ், ஆர் ஏ புரத்தில் நடத்தப்படுகிறது.

மேலும், அன்று இரவு 8 மணி முதல் இரவு 9 மணி வரை – அஸ்வின் பண்டார்கரின் கிரிப்டிக் சென்னை குய்ஸ் ஆன்லைனில் நடைபெறுகிறது.

ஆகஸ்ட் 28 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை): மாலை 4 மணி முதல் மாலை 6 மணி வரை – ஃபிட்னஸ் நிபுணர்கள் ராஜ் கண்பத் (இணை நிறுவனர் மற்றும் பயிற்சியாளர், தி குவாட்), விக்ரம் மேனன், (இணை நிறுவனர் மற்றும் பயிற்சியாளர், வைல்ட் வாரியர் ரேஸ்), அனுஷா சுவாமி மற்றும் ஐஸ்வர்யா மணிவண்ணன் (சர்வதேச சிலம்பம் சாம்பியன்) ஆகியோர் எப்படி இயக்கம் மக்களின் வாழ்க்கையையும் நகரத்தையும் மாற்றுகிறது என்பதைப் பற்றி தி பார்க், நுங்கம்பாக்கத்தில் பேசுகிறார்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.