வேலைக்குச் சேர்ந்த 10-வது நாளில் பணத்துடன் எஸ்கேப்; போலீஸிடம் வசமாக சிக்கிய அண்ணன், தம்பி – எப்படி?
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், வால்டாக்ஸ் சாலை, ஐசக் தெரு சந்திப்பில் பூக்கடை போலீஸார், 1-ம் தேதி அதிகாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இரண்டு பேர் பெரிய பையுடன் வந்தனர். அவர்களிடம் போலீஸார் விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணான தகவல்களைத் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் மீது போலீஸார் சந்தேகமடைந்து பையை சோதனை செய்தனர். அதற்குள் கட்டுக்கட்டாக பணம், வெள்ளி நாணயங்கள், வெள்ளி சிலை ஆகியவை இருந்தன. அதுதொடர்பாக விசாரித்தபோது, கடையிலிருந்து திருடி வந்தது … Read more