சத்யஜோதி பிலிம்ஸ் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை

சென்னை: சத்யஜோதி பிலிம்ஸ் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர். சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தியாகராஜன் அலுவலகத்தில் ரெய்டு நடக்கிறது. ஏற்கெனவே அன்புசெழியன், கலைப்புலி தாணு, எஸ்.ஆர்.பிரபு, ஞானவேல்ராஜா ஆகியோரது இடங்களிலும் வருமானவரி சோதனை நடக்கிறது.

சோனியா காந்தி, ராகுல் காந்தி தொடர்புடைய நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை..!!

டெல்லி: சோனியா காந்தி, ராகுல் காந்தி தொடர்புடைய நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். நேஷனல் ஹெரால்டு பணமோசடி புகாரில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரித்த நிலையில் சோதனை நடைபெற்று வருகிறது. நேஷனல் ஹெரால்டு அலுவலகம் உட்பட 10 இடங்களில் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆடிப்பெருக்கு: மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்கள் விலை கிடுகிடு உயர்வு

ஆடிப்பெருக்கையொட்டி மதுரை மாட்டுதாவனி மலர் சந்தையில் ஒரு கிலோ மல்லிகை பூ ரூ. 1200-க்கு விற்பனையாகி வருகிறது. ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஒவ்வொருவரும் தங்களது குலதெய்வ வழிபாடு நடத்துவது வழக்கம். அந்த வகையில் நாளை நடைபெறும் ஆடிப்பெருக்கை முன்னிட்டு மதுரை மாட்டுதாவனி மலர் சந்தையில் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. ஆனால், தொடர் கனமழை காரணமாக பூக்களின் வரத்து குறைவு காரணமாக பூக்களின் விலை உயர்ந்துள்ளது. 500 ரூபாய்க்கு விற்பனையாகி வந்த ஒரு கிலோ மல்லிகை பூ 700 ரூபாய் … Read more

சமூக வலைதளங்களில் தேசியக்கொடியை புரொபைல் பிச்சராக மாற்றிய பிரதமர்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக பிரதமர் மோடி தனது சமூக வலைதள கணக்குகளின் ‘புரொபைல் பிச்சர்’ எனப்படும் சுயவிபர படமாக, மூவர்ணக் கொடியை மாற்றியுள்ளார். நம் நாட்டின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடி வருகிறோம். இதற்காக பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, சிறப்பாக நடந்து வருகிறது. ஒவ்வொரு வீட்டிலும் தேசியக் கொடி என்ற திட்டத்தின்படி, ஆக.,13 முதல் 15ம் தேதி வரை அனைத்து வீடுகளிலும் மூவர்ண … Read more

'துருவ நட்சத்திரம்' விரைவில் ஒளி வீசுமா ?

கவுதம் மேனன் இயக்கத்தில், விக்ரம், ரித்து வர்மா, சிம்ரன், பார்த்திபன், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பலர் நடிப்பில் 2017ல் ஆரம்பமான படம் 'துருவ நட்சத்திரம்'. படம் ஆரம்பமாவதற்கு முன்பே டீசரை எல்லாம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்கள். ஆனால், படம் ஆரம்பமாகி ஐந்து வருடங்களாகியும் இன்னும் முடியாமல் இழுத்துக் கொண்டே இருக்கிறார்கள். இப்படத்தை வெளியிட தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சம்மதித்துள்ளதாகவும் தகவல் வெளியானது. இதனிடையே இயக்குனர் கவுதம் மேனன், விக்ரம் இருவரும் சந்தித்துப் பேசியுள்ளார்கள். இது தொடர்பான புகைப்படங்களை … Read more

எகிறிய தங்கம் விலை.. சாமானியர்கள் இனி கனவில் தான் நினைக்கணும் போல..!

தங்கம் விலையானது கடந்த சில அமர்வுகளாகவே மீண்டும் தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகின்றது. இது இன்னும் ஏற்றம் காணலாமோ என்ற எதிர்பார்ப்பும் இருந்து வருகின்றது. தொடர்ந்து பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தினை தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. இது மேற்கொண்டு பொருளாதார வளர்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது. இதனால் ரெசசன் அச்சமும் எழுந்துள்ளது. குறிப்பாக வேலையின்மை அதிகரிக்கலாம். வறுமை அதிகரிக்கலாம். மக்கள் கையில் பணப்புழக்கம் குறையலாம். இது எல்லாம் பாதுகாப்பு … Read more

சென்னை: ஏன் தற்கொலை செய்து கொண்டார் நர்சிங் மாணவி? – அதிர்ச்சி தகவல்கள்

சென்னை மேடவாக்கம், நெசவாளர் நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார். எலக்ட்ரீசியனாகப் பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி செல்வி. இந்தத் தம்பதியினருக்கு இரண்டு மகள்கள். மூத்த மகளுக்கு திருமணமாகிவிட்டது. இரண்டாவது மகளுக்கு 19 வயது. இவர், சென்னை திருவேற்காடு மாதிரிவேடு பகுதியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் பி.எஸ்.சி இரண்டாமாண்டு படித்து வந்தார். மாணவி கல்லூரி விடுதியில் தங்கியிருந்த மாணவி, கடந்த 30-ம் தேதி திடீரென விடுதி அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து திருவேற்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் … Read more

காரப்பட்டு – கதவணிபுதூர் சாலை பாம்பாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்ட கோரிக்கை

ஊத்தங்கரை அருகே காரப்பட்டு-கதவணிபுதூர் செல்லும் சாலையில் பாம்பாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஊத்தங்கரை தாலுகா காரப்பட்டு அருகே உள்ள கதவணிபுதூர் கிராமத்தைச் சுற்றி மயிலாடுபாறை, எம்ஜிஆர் நகர், அண்ணா நகர் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில், ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் பிரதானத் தொழிலாக விவசாயம் இருந்து வருகிறது. 15 கிமீ சுற்றிச் செல்லும் நிலை இப்பகுதி மக்கள் தங்களது … Read more

சமூக ஊடக முகப்பு புகைப்படத்தில் தேசியக் கொடியை வைத்த பிரதமர் மோடி: பொதுமக்களுக்கும் அழைப்பு

நாட்டின் 75-வது சுதந்திர தின நிறைவையொட்டி ஆகஸ்ட் 2-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை அனைத்து இந்தியர்களும் சமூக ஊடக முகப்பு புகைப்படமாக தேசிய கொடியை பதிவிட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி ஆகஸ்ட் 2ஆம் தேதியான இன்று அவர் தனது சமூக ஊடக முகப்பு புகைப்படமாக இந்திய தேசியக் கொடியை மாற்றியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், இன்று ஆகஸ்ட் 2 ஆம் தேதி சிறப்பான … Read more

பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்கப்படுமா? அமைச்சர் அளித்த பதில்!

அலுவலகங்களில் வேலை பார்க்கும் பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்குவது தொடர்பாக மக்களவையில் ரவிக்குமார் எம்.பி கேள்வி எழுப்பினார். மாதவிடாய் சலுகைகள் மசோதா, 2018 இல் வழங்கப்பட்ட மாதவிடாய் விடுப்பு போன்ற விதிகளை அரசாங்கம் செயல்படுத்துகிறதா, தனியார் அலுவலகங்களில் இந்தக் கொள்கைகள் செயல்படுத்தப்படுவதை அரசாங்கம் சோதிக்கிறதா? பொது அலுவலகங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு சானிட்டரி நாப்கின்கள் மற்றும் மருந்துகள் வழங்கப்படுகிறதா ? வேலை செய்யும் பெண்களுக்கு சிறந்த ஓய்வு வசதிகளை வழங்குவதற்காக அத்தகைய ஏற்பாடுகளை அரசு தொடங்க திட்டமிட்டுள்ளதா … Read more