ரூ.88,078 கோடி கொடுத்து 5ஜி ஏலத்தை கைப்பற்றியது ஜியோ நிறுவனம்..!

5ஜி அலைக்கற்றை ஏலத்தில் 88 ஆயிரம் கோடி ரூபாயுடன் ரிலையன்ஸ் ஜியோ முதலிடம் பிடித்துள்ளது. நேற்றுடன் நிறைவு பெற்ற ஏலத்தில் மொத்தம் ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 173 கோடி ரூபாய்க்கு 5ஜி அலைக்கற்றை ஏலம் விடப்பட்டுள்ளது. இது கடந்தாண்டு 4ஜி அலைக்கற்றை விற்பனையான தொகையைக் காட்டிலும் இரு மடங்கு அதிகமாகும். 10 அலைவரிசைகளில் வழங்கப்பட்ட 72,098 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றைகளில் 71 சதவீதம் விற்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.  Source link

குளியலறை மற்றும் கழிவறையில் மறந்தும் கூட இந்த தவறுகளை செய்யாதீங்க! மீறினால் வரும் விளைவுகள்

குளியலறை மற்றும் கழிவறையின் மூலம் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு நோய்த்தொற்றுகள் ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது. அதற்காகவே வீட்டு குளியலறையை சுத்தமாக வைத்துக் கொள்வோம். இருப்பினும் நாம் இன்னும் தவறுகளை செய்து கொண்டிருக்கிறோம். அந்த தவறுகளின் மூலம் நோய்த்தொற்றுகளானது மிகவும் வேகமாக பரவுகிறது. குளியலறை மற்றும் கழிவறையில் செய்யக்கூடாத தவறுகள் குறித்து காண்போம் செல்போன் செல்போனை கழிவறைக்கு எடுத்து செல்லும் பழக்கம் பலருக்கு உள்ளது. இப்படி கழிவறைக்கெல்லாம் மொபைல் போனை எடுத்துச் சென்றால், அதனை அங்குள்ள பலகையில் வைக்கும் … Read more

02/08/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 13,734 பேருக்கு கொரோனா பாதிப்பு

டெல்லி: இந்தியாவில்  நேற்று ஒரே நாளில் 13,734 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. சிகிச்சை பலனின்றி  34 பேர் பலியாகி உள்ளனர். மத்திய சுகாதார அமைச்சகம்  இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு குறித்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, கடந்த 24மணி நேரத்தில் மேலும்  13,734 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,40,50,009 ஆக உயர்ந்தது. தற்போது நாடு முழுவதும் … Read more

நெடுஞ்சாலை டெண்டர் முறைகேடு புகார்!: ஈபிஎஸ் தொடர்ந்த வழக்கில் அறப்போர் இயக்கத்திற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு..!!

சென்னை: நெடுஞ்சாலை டெண்டர் முறைகேடு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மீது அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு கூற தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அறப்போர் இயக்கம் அவதூறாக செய்தி வெளியிடுவதாக எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். ஒரு கோடியே பத்தாயிரம் ரூபாய் கேட்டு அறப்போர் இயக்கத்துக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது.

நீங்கள் ஒரு டெக்னாலஜி சீனியர் என பாராட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த இயக்குனர் பார்த்திபன்!!

சென்னை : திரைப்பட இயக்குநர் பார்த்திபன் ஒரு டெக்னாலஜி சீனியர் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்த இரவின் நிழல் திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சிங்கிள் ஷாட்டில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பார்த்து திரையுலகினர், ரசிகர்கள் பாராட்டுக்களை தெரிவித்து வந்தனர். ஒத்த செருப்பு திரைப்படத்தில் தனி ஒருவராக நடித்து அசத்தி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்த பார்த்திபன் இந்த படத்தை எந்த வெட்டும் இல்லாமல் இயக்கியுள்ளார்.இந்நிலையில் இயக்குநர் பார்த்திபனுடன் … Read more

நீ கழுதை மேய்க்கத்தான் லாயக்கு: அப்படியெல்லாம் இனி சொல்ல முடியாது – என்ன காரணம்?

கழுதை பண்ணை அமைத்து மாதம் லட்சக்கணக்கில் வருமானம் ஈட்டும் பட்டதாரி இளைஞர். படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு வழி காட்டுகிறார். கழுதை மேய்க்கத்தான் லாயக்கு என இனி வருங்காலத்தில் யாரையும் திட்ட முடியாது. பட்டதாரி இளைஞர் ஒருவர் முசிரி அருகே கழுதை பண்ணை அமைத்து அதன் மூலம் மாதந்தோறும் லட்சக்கணக்கான ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டி இளைஞர்களுக்கு முன்மாதிரியாக விளங்குகிறார். முசிரி அருகே உள்ள எம்.புதுப்பட்டி பகுதியில் ஐந்திணை பண்ணை அமைந்துள்ளது. இந்த பண்ணையை நிர்வகித்து வருபவர் … Read more

வரி ஏய்ப்பா? – அன்புச்செழியனைத் தொடர்ந்து கலைப்புலி தாணு அலுவலகத்திலும் ஐடி ரெய்டு

சென்னையில் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை டி.நகர் பிரகாசம் சாலையிலுள்ள கலைப்புலி பிலிம்ஸ் பிரைவேட் லிமிடேட் அலுவலகத்தில் சோதனை நடைபெற்று வருகிறது. 12க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இங்குதான் கலைப்புலி தாணுவின் அலுவலகம் கீழ்த்தளத்திலும், வீடு மேல்தளத்திலும் இருக்கிறது. சமீபத்தில் வெளியான படங்களில் கணக்கில் காட்டாமல் பணம் கையாடல் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியானதை அடுத்து, வரி ஏய்ப்பு நடந்திருப்பதாகக் கூறி அதிகாரிகள் சோதனையில் … Read more

இந்தியாவில் சற்று குறைந்த கோவிட் பரவல்; ஒருநாளில் 13 ஆயிரம் பேர் பாதிப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: இந்தியாவில் நேற்று (ஆக.,1) 16,464 ஆக பதிவான கோவிட் பாதிப்பு எண்ணிக்கை, கடந்த 24 மணிநேரத்தில் 13,734 ஆக குறைந்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 13,734 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,40,50,009 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில், 17,897 பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் … Read more

தயாரிப்பாளர்கள் அன்புச் செழியன், தாணு வீடு, அலுவலகங்களில் ஐடி ரெய்டு

சென்னை : தயாரிப்பாளர்கள் அன்புச் செழியன், எஸ். தாணு ஆகியோரின் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடியாக ரெய்டு நடத்தினர். தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் அன்புச் செழியன். கோபுரம் பிலிம்ஸ் என்ற பெயரில் படங்கள் தயாரிப்பு, விநியோகத்திலும் ஈடுபட்டு வருகிறார். இதுதவிர பல படங்களுக்கு பைனான்ஸூம் செய்து வருகிறார். இன்றைக்கு தமிழில் பல படங்கள் உருவாகின்றன. அதில் பல படங்களுக்கு இவரின் பைனான்ஸ் இல்லாமல் இருக்காது. முன்னணி தயாரிப்பாளர்கள் தொடங்கி, நடிகர் வரை இவரிடம் பைனான்ஸ் … Read more

நிர்மலா சீதாராமன்-க்கு பதிலடி கொடுத்த சுப்பிரமணியன் சாமி..!

உலக நாடுகளைப் பயமுறுத்தி வரும் பணவீக்கம் இந்தியாவிலும் அதிகரித்து வரும் வேளையில், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் இந்தியாவில் அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் குறித்துக் கேள்விகளை எழுப்பியனர். இந்திய பொருளாதாரம் மந்தநிலை (Recession) அல்லது தேக்கநிலை (Stagflation) தள்ளப்படுவது குறித்துக் கேள்வி தேவையில்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் கூறினார். மத்திய அரசு பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல், நாட்டின் கடனைத் திறமையாக நிர்வகித்துள்ளது எனக் கூறினார். நிர்மலா சீதாராமன் பதிலுக்குத் தற்போது சுப்பிரமணியன் சாமி தனது டிவிட்டரில் … Read more