ஆக-02: பெட்ரோல் விலை 102.63, டீசல் விலை 94.24க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

5ஜி ஏலம் முடிந்தது ரூ.1.5 லட்சம் கோடிக்கு அலைக்கற்றை விற்பனை: அக்டோபரில் சேவை தொடங்கும்

புதுடெல்லி: 5ஜி அலைக்கற்றை மொத்தம் ரூ.1.5 லட்சம் கோடிக்கு ஏலம் விடப்பட்டது. இதில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதிகபட்சமாக ரூ.88 ஆயிரம் கோடிக்கு அலைவரிசை உரிமம் எடுத்துள்ளது. 5ஜி அலைக்கற்றை ஏலம் கடந்த 26ம் தேதி துவங்கியது. இதில், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடபோன் மற்றும் அதானியின் டேட்டா நெட்வொர்க்ஸ் ஆகிய 4 நிறுவனங்கள் பங்கேற்றன. முதல் நாள் ஏலத்தில் ரூ.1 லட்சத்து 45 ஆயிரம் கோடி வரை ஏலம் கேட்கப்பட்டதாக ஒன்றிய … Read more

ரூ.990 கோடி வரி விதிக்க முடிவு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் இஸ்லாமாபாத்-பாக்., நிதி நெருக்கடியை சமாளிக்க கூடுதலாக, 990 கோடி ரூபாய் அளவிற்கு வரி விதிக்க முடிவு செய்துள்ளது. நம் அண்டை நாடான பாக்., இன்னொரு அண்டை நாடான இலங்கையை போல அன்னியச் செலாவணி பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளில் சிக்கி தவிக்கிறது. வெளிநாட்டு எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச நிதியம் ஆகியவற்றுக்கு தர வேண்டிய நிலுவையை தர முடியாமல், பாக்., திவால் ஆகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த … Read more

கிழக்கு மாகாண விளையாட்டு விழாவில் மட்டக்களப்பு மாவட்டம் சாதனை

2022 ஆண்டிற்கான கிழக்கு மாகாண விளையாட்டு விழா பாசிக்குடா கடற்கரையில் (30)  இடம்பெற்றது. இதில் கடற்கரை கபடிப் போட்டியில் மட்டக்களப்பு மாவட்டம் சார்பாக கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலக பிரிவு  பெண்கள் அணியின் முதலாம் இடத்தினை தம்வசப்படுத்தி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். இப்போட்டித் தொடரானது கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் பணிப்பாளர் என்.எம்.நௌபீஸ் தலைமையில் மட்டக்களப்பு பாசிக்குடாவில் நடைபெற்றுள்ளது. விளையாட்டு விழாவில் மட்டக்களப்பு மாவட்ட ஆண்கள் அணியை பிரதிநிதித்துவப்படுத்திகடற்கரை கபடிப் போட்டியில் பங்கேற்ற மண்முனை வடக்கு மற்றும் … Read more

துப்பாக்கிக்கு பதில் துப்பாக்கிதான்; பேச்சுவார்த்தை இல்லை: ஆளுனர் ஆர்.என் ரவி

கேரள மாநிலத்தில் மனித உரிமைகள் அமைப்பு நடத்திய நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி “ துப்பாக்கிக்கு பதில் துப்பாக்கிதான்; பேச்சுவார்த்தை இல்லை” என்று தெரிவித்துள்ளார். கேரள மாநிலத்தில் உள்ள கொச்சியில், மனித உரிமைகள் அமைப்பு தொடர்பாக நடந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஆர். என். ரவி கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியபோது துப்பாக்கியை பயன்படுத்துபவர்களுக்கு துப்பாக்கியால்தான் பதில் கொடுக்க வேண்டும். கடந்த 8 ஆண்டு கால ஆட்சியில் ஆயுதம் ஏந்திய குழுக்களுடனும் பேச்சுவார்த்தை … Read more

இலவசங்கள் – உயர்த்தவா? உயர்த்திக் கொள்ளவா?

அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் இலவசங்கள் குறித்த அறிவிப்புகள் இடம் பெறலாமா? இதன் மீதான தனது நிலைப்பாட்டை மத்திய அரசு ஆகஸ்ட் 3-ம் தேதி தெரிவிக்குமாறு உச்ச நீதிமன்றம் கோரியுள்ளது. இது தொடர்பாக, நிதிக்குழுவின் ஆலோசனைகளையும் பெறுமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஏற்கெனவே, இலவசங்களுக்கு எதிராகத் தொடரப்பட்ட, ‘சுப்ரமணியம் பாலாஜி எதிர் தமிழக அரசு’ வழக்கில், நீதி அரசர்கள் பி.சதாசிவம் மற்றும் ரஞ்சன் கோகாய் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு 2013, ஜுலை 5-ல் விரிவான ஒரு தீர்ப்பை … Read more

2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் மோடி – மத்திய அமைச்சர் அமித் ஷா அறிவிப்பு

பாட்னா: வரும் 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி முன்நிறுத்தப்படுவார். அவரது தலைமையில் தேர்தலை எதிர்கொள்வோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். பிஹார் தலைநகர் பாட்னாவில் நேற்று முன்தினம் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் அமைச்சர் அமித் ஷா பேசும்போது, ‘‘2024 மக்களவைத் தேர்தலில் பாஜக பிரதமர் … Read more

5ஜி அலைக்கற்றை ஏலம் | ரூ.88 ஆயிரம் கோடியுடன் ரிலையன்ஸ் ஜியோ முதலிடம் – மொத்தம் ரூ.1.5 லட்சம் கோடிக்கு விற்பனை

புதுடெல்லி: கடந்த 7 நாட்களாக நடைபெற்ற 5ஜி அலைக்கற்றை ஏலம் நேற்று முடிவடைந்தது. மொத்தம் ரூ.1.5 லட்சம் கோடிக்கு விற்பனையானது. இதில் ரூ.88 ஆயிரம் கோடியுடன் ரிலையன்ஸ் ஜியோ முதலிடம் பிடித்துள்ளது. தொலைத் தொடர்பு துறையில் இப்போது 4ஜி அலைக்கற்றை சேவை பயன்பாட்டில் உள்ளது. இதன் அடுத்தகட்டமாக 5ஜி அலைக்கற்றை சேவை அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது பயன்பாட்டுக்கு வந்தால் செல்போன்களின் இணையதள வேகம் 10 மடங்கு அதிகமாக இருக்கும். தானாக இயங்கும் கார், செயற்கை நுண்ணறிவு … Read more

காலி முகத்திடலில் கரையொதுங்கிய சடலங்கள் – பொலிஸார் வெளியிட்ட தகவல்

காலி முகத்திடல் கடற்கரையில் நேற்று காலை நபரொருவரின் சடலம் கரையொதுங்கியிருந்த நிலையில், சடலம் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் காலி முகத்திடலில் கடற்கரையில் கரையொதுங்கிய இரண்டாவது சடலம் இதுவென பொலிஸார் தெரிவிக்கின்றனர். நேற்று கண்டெடுக்கப்பட்ட சடலம் 40 வயது மதிக்கத்தக்க நபருடையது என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. காலிமுகத்திடலில் போராட்ட இடத்திற்கு அருகில் உள்ள கடற்கரை பகுதியில் சடலம் கரையொதுங்கியமை குறித்து பல்வேறு தரப்பினர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். நேற்று காலை … Read more

சுறா மீனை சமைத்து சாப்பிட்டவருக்கு 10 ஆண்டுகள் சிறை: சீனாவில் சம்பவம்

சீனாவில் பெரிய வெள்ளை சுறாவை நேரலையில் சட்டவிரோதமாக சமைத்து சாப்பிட்ட உணவு பதிவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் பிரபலமான உணவு பதிவர்களில் ஒருவரான Tizi என்பவரே வெள்ளை சுறாவை சமைத்து சாப்பிட்டு சிறைத்தண்டனையை எதிர்நோக்கியுள்ளார். அவர் வெள்ளை சுறாவை சட்டவிரோதமாக வாங்கியிருக்கலாம் என்றே விசாரணை அதிகாரிகள் நம்புகின்றனர். சமூக ஊடகங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்திய அந்த காணொளியில், இது பார்க்கும் போது கொடூரமாகத் தோன்றலாம், ஆனால் அதன் இறைச்சி உண்மையிலேயே மிகவும் … Read more