காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதி

பிர்மிங்காம்: பிரிட்டனில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதியாகியுள்ளது. பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவில் ஜூடோ போட்டியில் இந்தியாவின் சுஷிலாதேவி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார். சுஷிலாதேவி இறுதி போட்டிக்கு முன்னேறியதன் மூலம் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதியானது.

ஸ்மிருதி இரானியின் மகள் மதுபான ஓனர் கிடையாது: டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி

புதுடெல்லி: ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் மகள் கோவாவில் சட்டவிரோதமாக மதுபான பார் நடத்தி வருவதாக காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டினார்கள். இதற்கு எதிராக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ், பவன் கேரா, நெட்டா டிசோசா ஆகியோர் மீது அமைச்சர் ஸ்மிருதி இரானி அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘‘ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி, அவரது மகள் ஆகியோர் கோவா ரெஸ்டாரண்ட் … Read more

300 மாணவர்களுக்கு இந்தாண்டும் இலவச உயர்கல்வி – பாரிவேந்தர் எம்.பி அறிவிப்பு

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 300 மாணவர்களுக்கு எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் இந்தாண்டும் இலவச உயர்கல்வி வழங்கப்படும் என்று பாரிவேந்தர் எம்.பி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினரும் இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனருமான டாக்டர் பாரிவேந்தர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் 2019 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 3 வருடங்களாக பொறியியல், கலை-அறிவியல், விவசாயன், உணவக மேலாண்மை போன்ற பல்வேறு பாடப்பிரிவுகளில் அவரது தொகுதிக்குட்பட்ட 900 மாணவ-மாணவியர் … Read more

பார்லி.யில் கத்திரிக்காயை பச்சையாக கடித்து காண்பித்த பெண் எம்.பி.,| Dinamalar

புதுடில்லி: சமையல் காஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளு மன்றத்தில் கத்திரிக்காயை பச்சையாக கடித்து காட்டிய மம்தா கட்சி பெண் எம்.பி.யால் சலசலப்பு ஏற்பட்டது. பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரானது, அமளியுடன் நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு வாரங்களாக நீடித்து வரும் நிலையில் நேற்று விலைவாசி உயர்வு குறித்து விவாதம் நடந்தது.தொடக்கம் முதல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசை விமர்சித்து முழக்கங்களை எழுப்பினர். இதனால் அவை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் மீண்டும் கூடிய நிலையில், அமளி … Read more

'என்ஜாய் எஞ்சாமி' பாடல், சந்தோஷ் நாராயணன் – அறிவு முட்டல், மோதல்

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் சந்தோஷ் நாராயணன். அவரது தயாரிப்பில், சந்தோஷ் நாராயணன் மகளான தீ, அறிவு பாடிய 'என்ஜாய் எஞ்சாமி' ஆல்பம் பாடல் கடந்த வருடம் வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்றது. யு டியூபில் 429 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. இந்தப் பாடல் சமீபத்தில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவில் தீ–யால் மேடையில் பாடப்பட்டது. அந்நிகழ்வில் அறிவு பாடவில்லை. இருப்பினும் அவரைப் பற்றி பாடல் பாடுவதற்கு முன்பு எதுவும் சொல்லவில்லை. இது கடந்த … Read more

பாக்.கில் உயரதிகாரிகளுடன் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் மாயம்| Dinamalar

பலுசிஸ்தான்: பாகிஸ்தானில் உயர் அதிகாரிகளுடன் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் திடீரென மாமானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தின் லாஸ்பெல்லாவிலிருந்து சில உயர் அதிகாரிகளுடன் ராணுவ ஹெ லிகாப்டர் புறப்பட்டது. புறப்பட்ட சில நிமிடங்களில் திடீரென மாயமானது. சுமார் 5 மணி நேரமாக தேடியும் ஹெலிகாப்டர் இருக்குமிடத்திற்கான சிக்னல் கிடைக்கவில்லை. ஹெலிகாப்டரில் 6 காமாண்டர்கள் 6 வீரர்கள் என 12 பேர் பயணித்ததாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஹெ லிகாப்டரை தேடும் பணி நடப்பதாக கூறப்படுகிறது. பலுசிஸ்தான்: … Read more

தொடர் நஷ்டத்தில் சோமேட்டோ.. ஆனா ஒரு நல்ல விஷயமும் இருக்கு..!

ஆன்லைன் ஆப் மூலம் உணவு டெலிவரி செய்யும் ஸ்டார்ட் அப் நிறுவனமான சோமேட்டோ ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில் மீண்டும் பெரும் நஷ்டத்தினையே கண்டுள்ளது. அதன் ஒருங்கிணைந்த நஷ்டம் 185.7 கோடி ரூபாயினை கண்டுள்ளது. இது நஷ்டம் கண்டுள்ளது என்றாலும், கடந்த ஆண்டினை காட்டிலும் நஷ்டம் குறைந்துள்ளது நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டில் இதே காலாண்டில் நஷ்டம் 356.2 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. நஷ்டம் குறைந்துள்ளது நல்ல விஷயமாக பார்க்கப்பட்டாலும், இன்னும் தொடர்ந்து … Read more

அரசாங்க விளம்பரங்களில் பிரதமர், ஜனாதிபதி படங்கள்: உச்ச நீதிமன்ற தீர்ப்பு, ஐகோர்ட் விளக்கம்

தமிழ்நாடு பாஜகவின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் தலைவர் அமர் பிரசாத் ரெட்டி, மேலும் இருவருடன் மோடியின் புகைப்படங்களை அரசு விளம்பரப் பலகைகளில் பொருத்தும் வீடியோ கிளிப்பை வெளியிட்டார். அந்த வீடியோவை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சென்னையில் நடைபெற்று வரும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் விளம்பரங்களில் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படங்களைச் சேர்க்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு … Read more

தர்மபுரி || காதலியுடன் ஏற்பட்ட தகராறு, இளைஞர் எடுத்த விபரீத முடிவு..!

தனியார் நிறுவன மேற்பார்வையாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி அப்பாவு நகரை சேர்ந்தவர் லோகேஷ். இவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்தார். இவர் அந்த பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.  இந்நிலையில், காதலர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், மன உளைச்சலில் இருந்த அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் … Read more