இடம்பெயர்ந்த பழங்குடி மக்களின் நிவாரணம் குறித்த விவரம் இல்லை: மத்திய அரசு கைவிரிப்பு  

புதுடெல்லி: இடம்பெயர்ந்த பழங்குடி மக்களுக்களுக்கான நிவாரணம் குறித்த விவரம் மத்திய அரசிடம் இல்லை என்ற தகவலை மத்திய பழங்குடியினர் துறை இணை அமைச்சர் மக்களவையில் வெளியிட்டார். இது குறித்து விழுப்புரம் மக்களவை தொகுதியின் எம்.பியான டி.ரவிக்குமார் எழுப்பியக் கேள்வியில், ”இடம்பெயர்ந்த பழங்குடி மக்களுக்காக அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ள வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் வாழ்வாதாரத் திட்டங்களின் விவரம் என்ன? இந்த வளர்ச்சித் திட்டங்களால் பயனடைந்த பழங்குடியின மக்களின் எண்ணிக்கை எவ்வளவு? இவர்களில் எவ்வளவு பேருக்கு கடந்த பத்து ஆண்டுகளில் மத்திய … Read more

சட்டவிரோதமாகப் பிரான்ஸ் செல்ல முற்பட்ட 47 பேர் வசமாகச் சிக்கினர்

சட்டவிரோதமாகப் படகு மூலம் பிரான்ஸுக்குச் செல்ல முற்பட்ட 47 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். வென்னப்புவ பிரதேசத்தில் கடற்படை மற்றும் வென்னப்புவ பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின்போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடற்படையினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கு கடற்படை கட்டளை மற்றும் வென்னப்புவ பொலிஸாரால் நேற்றிரவு கூட்டுத் தேடுதல் நடவடிக்கை ஆரம்பமானது. 47 பேரும் கைது  இந்நிலையில், வென்னப்புவ நகரில் இன்று அதிகாலை சந்தேகத்துக்கிடமான 3 வான்களைச் சோதனையிட்டதன் பின்னர் கடல் வழியாக பிரான்ஸுக்குச் சட்டவிரோதமாக குடியேற முயற்சித்தனர் எனச் … Read more

அருவிக்கு அழைத்த கணவனுடன் ஆசையாய் சென்ற காதல் மனைவி! பின்னர் நடந்த பயங்கரம்..நீடிக்கும் மர்மம்

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் காதல் மனைவியை அழைத்துச் சென்று கணவனே கத்தியால் குத்திய நிலையில், இளம்பெண் காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பாடியநல்லூர் ஜோதி நகரைச் சேர்ந்தவர் மதன் (22). இவரும் புழல் கதிர்வேடு பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி (19) என்ற பெண்ணும் நான்கு மாதங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அதன் பின்னர் இருவரும் தனிக்குடித்தனம் நடத்தி வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த சூன் மாதம் முதல் தனது மகளை காணவில்லை என … Read more

திருச்செந்தூர் முருகன் கோயில்… அநியாயத்தை தட்டிக்கேட்ட போலீசாரை எதிர்த்து கும்பலாக கூடி தாக்கிய அர்ச்சகர்கள்… வீடியோ

முகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முக்கிய படை வீடுகளான திருச்செந்தூர் மற்றும் பழனி ஆகிய கோயில்களில் காசு வாங்கிக்கொண்டு விரைவாக சாமி தரிசனத்துக்கு அழைத்து செல்வது என்பது அதிகரித்து வருவதாக தொடர் சர்ச்சை எழுந்து வருகிறது. இயற்கை எழில் சூழ்ந்த திருச்செந்தூர் முருகன் கோயிலில் விடுமுறை நாளான நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் முருகனின் அருளுக்காக நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க முடியாத சிலரை 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள் செல்லும் சிறப்பு வழியில் அர்ச்சகர்கள் அழைத்து சென்றுள்ளனர். … Read more

ஆகஸ்ட் 3ல் பஸ் ஊழியர்கள் விடுப்பு எடுக்கக் கூடாது: போக்குவரத்துத்துறை அறிவிப்பு

சென்னை: ஆகஸ்ட் 3ம் தேதி அனைத்து போக்குவரத்துத் தொழிலாளர்கள் பணியில் இருக்க வேண்டும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 3ல் வேலை நிறுத்தம் செய்வதாக சிஐடியூ நோட்டீஸ் அளித்துள்ள நிலையில் போக்குவரத்துத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. ஊதிய உயர்வு உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியூ வேலை நிறுத்த நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அதிவேக இணைய சேவை அளிக்கும் 5ஜி அலைக்கற்றை ரூ.1,50,173 கோடிக்கு ஏலம்: ஜியோ அதிகளவில் ஏலம் எடுத்ததாக தகவல்..!!

டெல்லி: அதிவேக இணைய சேவை அளிக்கும் 5ஜி அலைக்கற்றை ரூ.1,50,173 கோடிக்கு ஏலம் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த பட்ஜெட் தாக்கலின் போது 5ஜி தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. மொத்தம் 72,097.85 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றை மூலம் நான்கரை லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்ட முடிவு செய்யப்பட்டது. இந்த ஏலத்தின் மொத்த காலம் 20 ஆண்டுகளாகும். பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கிய 5ஜி அலைக்கற்றை ஏலம் கடந்த 26ம் தேதி தொடங்கியது. இந்த ஏலத்தில் உலக … Read more

வண்டலூர் பூங்காவில் பசியின்மையால் அவதிப்படும் ஆண் புலி – காரணம் என்ன?

வண்டலூர் பூங்காவில் உள்ள 6 வயது ஆண் புலி, சரிவர உணவு உண்ணாததால் மருத்துவர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள 6 வயது ஆண் புலி நகுலன், கடந்த ஏப்ரல் 4-வது வாரத்திலிருந்து சரியாக உணவு உண்ணவில்லை. வழிகாட்டு நெறிமுறையின்படி புலிக்கு உடனடியாக அறிகுறி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின்னர் புலி நன்றாக இருந்தது. ஆனால், ஜுலை 25 ஆம் தேதி, நகுலன் மீண்டும் பசியின்மை காரணமாக … Read more

20 வயதிலேயே கைம்பெண்!.. தூய்மை பணியாளர் டூ வங்கி அதிகாரி ஆன பெண்ணின் சாதனை கதை!

16 வயதில் திருமணம்! 20 வயதில் கணவன் மரணம்! 10 வகுப்பு கூட படிக்காமல் மும்பை பாரத ஸ்டேட் வங்கி கிளையில் தூய்மைப் பணியாளராக வேலைக்கு சேர்ந்த பிரதிக்‌ஷா, பட்டதாரியாக உருவெடுத்து 37 வருடங்களுக்கு அயராத உழைப்பிற்கு பிறகு அதே எஸ்பிஐ வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். “யாராவது மன அழுத்தத்தில் இருந்தால் அல்லது தளர்ச்சி அடைந்தால், எனது கதை அவர்களைச் சென்றடைந்து ஊக்கப்படுத்த வேண்டும்” என்று கூறி அவர் பகிர்ந்த அவரது வாழ்கைக் கதையை … Read more

தெருக்குரல் அறிவின் குற்றச்சாட்டுக்கு நீண்ட அறிக்கையில் விளக்கம் கொடுத்த சந்தோஷ் நாரயணன்!

‘என்ஜாயி எஞ்சாமி’ பாடல் குறித்து தெருக்குரல் அறிவின் குற்றச்சாட்டு பதிவுக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாரயணன் விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில், கடந்த மாதம் 28-ம் தேதி சர்வதேச 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க விழா கோலாகலமாக நடைபெற்றது. பிரதமர் மோடி மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் அரங்கேறின. அதில் ஒரு பகுதியாக சந்தோஷ் நாரயணன் தயாரிப்பில், தீ மற்றும் தெருக்குரல் அறிவு … Read more

வருமான வரி கணக்கு 5.83 கோடி பேர் தாக்கல்| Dinamalar

புதுடில்லி :கடந்த நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை, 5.83 கோடி பேர் தாக்கல் செய்துள்ளனர்.ஊதியம் பெறுவோர் மற்றும் தனி நபர்கள், 2021 – 22ம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்வது, கடந்த ஜூலை 31-ம் தேதியுடன் முடிவடைந்தது. இதில், 5.83 கோடி பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர். இறுதி நாளான, ஜூலை, 31ல், 72 லட்சம் பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ததாக வருமான வரித் துறை அதிகாரி ஒருவர் … Read more