'ஜிகர்தண்டா 2' அறிவிப்பை வெளியிட்ட கார்த்திக் சுப்பராஜ்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனன் மற்றும் பலர் நடிக்க 2014ம் ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதி வெளிவந்த படம் 'ஜிகர்தண்டா'. இப்படம் வெளிவந்து இன்றுடன் எட்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் அதைப் பற்றிக் குறிப்பிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டு படத்தின் இரண்டாம் பாகம் பற்றி அறிவித்துள்ளார் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ். 'ஜிகர்தண்டா' படத்திற்குப் பிறகு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், 'இறைவி, மெர்க்குரி, பேட்ட, ஜகமே தந்திரம், மஹான்' … Read more

அதிர்ஷ்டம்ன்னா இது தான்.. 2வது முறையும் கொட்டிய பணமழை.. ரொம்ப ராசியான கடை போல..!

என்னதான் கஷ்டப்பட்டு உழைத்தாலும் அதிர்ஷ்டம்கிறது வேணும். ஓடி ஓடி உழைச்சாலும் கொஞ்சம் கூட சேமிக்க முடியல. எண்ணெயை தடவிக்கிட்டு உருண்டாலும் ஒட்டுற மண்ணுதானே ஒட்டும் என பலவாறு நம்மூர்களில் தாத்தா பாட்டிகள் சொல்வதை கேட்டிருக்கலாம். ஆனால் இந்த சம்பவம் அதெல்லாம் உண்மையோ என்று எண்ணத் தோன்றுகின்றது.அமெரிக்காவினை சேர்ந்த ஒருவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு 8 கோடி ரூபாய் லாட்டரியில் பரிசாக விழுந்துள்ளது. இதுவே மறக்க முடியா சம்பவம் எனில், அதே நபருக்கு மீண்டும் 19 லட்சம் ரூபாய் … Read more

`பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டால் இலவச சோளா பூரி!’ – தெருவோர வியாபாரியின் முயற்சி

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தி, அரசாங்கம், மக்களிடையே பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறது. தொண்டு நிறுவனங்களும், அந்தந்த ஏரியா அரசியல் பிரமுகர்களும் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் சண்டிகரில் தெருவோரம் உணவுக்கடை நடத்தும் வியாபாரி ஒருவர், கொரோனா பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு இலவசமாக சோளா பூரி வழங்குவதாக வெளியிட்டுள்ள விளம்பரம் அப்பகுதி மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. பூரி பூஸ்டர் டோஸ் தடுப்பூசி FAQ: உங்கள் எல்லா கேள்விகளுக்குமான விடைகள் இங்கே! சண்டிகரில் 20 ஆண்டுகளுக்கு … Read more

மழையை  சமாளிக்க முடியாமல் தடுமாறும் திமுக அரசு: இபிஎஸ் விமர்சனம்

சென்னை: திமுக அரசு தற்போது தமிழகத்தில் பெய்து வரும் மழை சமாளிக்க முடியாமல் தடுமாறுவதாக அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தின் பல மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று கடந்த வியாழன் (28.7.2022) அன்றே, சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்திருந்தது. அதே போல், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மாவட்டங்கள் மற்றும் தென்மாவட்டங்களில் மழை பெய்திருக்கிறது. நான் பலமுறை சுட்டிக்காட்டிய பிறகும், … Read more

“பாஜகவுடன் போட்டியிடும் அளவிற்கு எந்த தேசிய கட்சிக்கும் வலுவில்லை” – ஜே.பி.நட்டா

பாட்னா: “தற்போதைய நிலையில் பாஜக ஒன்றுதான் இந்தியாவின் ஒரே தேசிய கட்சி. அதனுடன் போட்டியிடும் அளவிற்கு மற்ற கட்சிகளுக்கு வலுவில்லை” என்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கருத்து தெரிவித்துள்ளார். இரண்டு நாட்கள் நடந்த பாஜகவின் தேசிய நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ஜே.பி.நட்டா கூறியது: “காங்கிரஸ் கட்சி சகோதரன் மற்றும் சகோதரியின் கட்சியாக மாறிவிட்டது. மாநிலக் கட்சிகளான பிஹாரில் லாலு பிரசாத்தின் ஆர்ஜேடி, உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி, மகாராஷ்டிராவின் … Read more

ரஷ்யப் பொருளாதாரம் எதிர்பார்த்ததைவிடச் சிறப்பாக உள்ளது – ஐஎம்எப்

ரஷ்யப் பொருளாதாரம் எதிர்பார்த்ததை விடச் சிறப்பாகச் செயல்படுவதாகப் பன்னாட்டுப் பண நிதியம் தெரிவித்துள்ளது. உக்ரைன் போரையடுத்து மேலை நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதிப்பதன் மூலம் ரஷ்யாவைத் தண்டிக்கவும் தனிமைப்படுத்தவும் முயன்றதாகக் குறிப்பிட்டுள்ளது. அதன் விளைவு நேர்மாறாக அமைந்துவிட இப்போது மேலைநாடுகள் பணவீக்கத்துடன் போராடிப் பொருளாதார மந்த நிலையை எதிர்நோக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. மறுபுறம் ரஷ்யா புதிய வணிகக் கூட்டாளிகளை உருவாக்கி வருவதுடன் பொருளாதார ரீதியிலும் அரசியல் ரீதியிலும் வெற்றிபெற்றுள்ளதாகப் பன்னாட்டுப் பண நிதியம் தெரிவித்துள்ளது.  Source link

லைக்குகள் பெறுவதற்காக காட்டுப்பன்றிகள் இருந்த கூண்டுக்குள் குதித்த 3 இளைஞர்கள்..

சமூக வலைத்தளங்களில் லைக்குகள் பெறுவதற்காக காட்டுப்பன்றிகள் அடைக்கப்பட்டிருந்த கூண்டுக்குள் உயிரை பணையம் வைத்து குதித்து வீடியோ வெளியிட்ட 3 இளைஞர்களை ஆந்திர மாநில போலீசார் கைது செய்துள்ளனர். விசாகப்பட்டினம் இந்திரா காந்தி மிருகக்காட்சிசாலையில் காட்டுப்பன்றிகள் இருந்த கூண்டுக்குள் குதித்த 3 இளைஞர்களை விரட்டி வந்த காட்டுப்பன்றி அவர்களுள் ஒருவரை முட்டி கீழே தள்ளியது. இந்த காணொளி இணையத்தில் வைரல் ஆனது. மிருகக்காட்சி சாலை கண்காணிப்பாளர் அளித்த புகாரின் பேரில் மூவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு 6 ஆண்டுகள் … Read more

திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு! சென்னை வானிலை மையம் தகவல்…

சென்னை: தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அதிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்ப தாக சென்னை வானிலை ஆய்வு மையம்  எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல  சுழற்சி காரணமாக, 01.08.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் … Read more

கனமழை காரணமாக வால்பாறையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

கோவை: கனமழை காரணமாக வால்பாறை வட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.மழையின் காரணமாக வால்பாறை வட்டத்திற்கு மட்டும் நாளை ஒருநாள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல் தெரிவித்துள்ளார்.

ம.பி., மருத்துவமனை தீ விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம்: முதல்வர் சிவராஜ் சிங் செளகான் அறிவிப்பு

ஜபல்பூர்: மத்தியப்பிரதேச மாநிலம் ஜபல்பூரில் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். ஜபல்பூரில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் திடீரென தீவிர சிகிச்சை பிரிவில் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடி வந்தனர். அப்போது அதிஷ்டவசமாக தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். 3 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் பல நோயாளிகள் … Read more