பாகிஸ்தானில் பயங்கர வெள்ளம்: சீனாவில் வரலாறு காணா வறட்சி: இந்தியாவில் சீரான பருவநிலை| Dinamalar

புதுடில்லி: இந்தியாவின் பொது எதிரிகளாக கருதப்படும் அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் சீனாவில் காலநிலை இருவேறு விதமாக மோசமான நிலையில் உள்ளது. நமது அண்டை நாடான சீனாவில் வழக்கத்திற்கு மாறாக வெயில் அதிகரித்து வருவதுடன் வறட்சி ஏற்பட்டுள்ளது. அங்கு பல இடங்களில் குடிநீருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதுடன், விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது. முக்கிய நீர்நிலைகள் தண்ணீர் இல்லாமல் வறண்டு போயுள்ளன. அங்குள்ள சோங்குயிங் மாகாணத்தின் சில கிராமங்களில், குடிநீருக்காகவும், விவசாய பணிகளுக்காகவும் தீயணைப்பு வாகனங்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. … Read more

நான் சொல்றது பொய்யா இருந்தா செருப்பால அடிங்க.. லைகர் படத்துக்காக ஆவேசமடைந்த கூல் சுரேஷ்!

சென்னை: எந்தவொரு புதிய படங்கள் வெளியானாலும் முதல் ஆளாக தியேட்டரில் படம் பார்த்து விட்டு பேட்டி கொடுத்து வருகிறார் காமெடி நடிகர் கூல் சுரேஷ். சிம்புவின் ரசிகரான கூல் சுரேஷ் அதிதி ஷங்கருக்கு லவ் லெட்டர் கொடுத்து பின்னர் மன்னிப்பு கேட்ட நிலையில், அடுத்ததாக லைகர் படத்துக்கு இப்படியொரு புரமோஷன் செய்து பரபரப்பை கிளப்பி உள்ளார். தான் சொல்வது பொய்யா இருந்தா தன்னை செருப்பால் அடிக்கவும் என ஆவேசமடைந்து அவர் பேசிய வீடியோ டிரெண்டாகி வருகிறது. நெகட்டிவ் … Read more

ஹீரோ ஃபியூச்சர் எனர்ஜிஸ் நிறுவனத்தில் முதலீடு செய்யும் KKR!

ஹீரோ ஃபியூச்சர் எனர்ஜிஸ் நிறுவனத்தில் KKR நிறுவனம் மிகப்பெரிய தொகையை முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த முதலீடு கடனைக் குறைப்பதற்கும் வணிகத்தை வளர்ப்பதற்கும் ஹீரோ ஃபியூச்சர் எனர்ஜிஸ் நிறுவனத்திற்கு உதவிகரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிதிக்காக KKR அதன் உள்கட்டமைப்பு நிதியை பயன்படுத்தக்கூடும் என்று கூறப்பட்டு வருகிறது. திவாலாகும் பியூச்சர் குரூப்.. கண்ணீருடன் கிஷோர் பியானி.. ரிலையன்ஸ், அமேசான் கைவிட்டது..! ஹீரோ ஃபியூச்சர் எனர்ஜிஸ் ஹீரோ குழுமத்தின் ஆற்றல் மிக்க நிறுவனங்களில் ஒன்றான ஹீரோ … Read more

பெட்ரோல் , டீசல் விநியோகம் குறித்து….

வங்கி அனுமதிகள் தாமதம் காரணமாக சுப்பர் டீசலை இறக்குமதி செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று (26)தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் கூறியுள்ளார். அமைச்சர் கஞ்சன விஜேசேகர மேலும் தெரிவிக்கையில்இ பெரும்பாலான எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு டீசல் கையிருப்புடன் பெற்றோல் விநியோகிக்கப்படுகிறது என்றார். Auto Diesel இன்று இரவு நாட்டை வந்தடையவுள்ளது.. பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் Ceylon Petroleum Storage Terminals Limited (CPSTL) நிறுவனம் தொடரும் காலதாமதத்தை சரி செய்வதற்காக இன்று இரவு … Read more

அதிகரிக்கும் காய்ச்சல் நோயாளிகள்: ‘இது கோவிட் 19 காய்ச்சல் அல்ல’ என அடம் பிடிக்கும் வட கொரியா

சீனாவுடனான வட கொரியாவின் எல்லைப் பகுதியில் சமீபத்தில் பலருக்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த காய்ச்சல் கொரோனா தொற்றின் காய்ச்சலாக இருக்குமோ என முதலில் ஒரு அச்சம் இருந்தது. ஆனால், அது கொரோனா காய்ச்சல் அல்ல, இன்ஃப்ளூயன்ஸா என்று சோதிக்கப்பட்டதாக வட கொரியா வெள்ளிக்கிழமை கூறியது. நால்வருக்கு கோவிட்-19 -க்கான காய்ச்சல் இருக்கக்கூடும் என முதலில் சந்தேகிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ரியாங்காங் பகுதியில் குறிப்பிடப்படாத பகுதிகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதாக வட கொரியா தெரிவித்தது. இந்த செய்திக்கு ஒரு … Read more

“அண்ணன் எடப்பாடி, அவரின் சமூகம் சார்ந்தே இயங்குகிறார்…” – போட்டுத்தாக்கும் எம்.பி தர்மர்

அ.தி.மு.க-வில் தற்போது நடந்துவரும் பிரச்னைகளின் முக்கியப்புள்ளி மாநிலங்களவை உறுப்பினர் தேர்வு. குறிப்பாக, ஓ.பன்னீர்செல்வம் தன் பங்கு ஒதுக்கீட்டைப் பிடிவாதமாகக் கேட்டு, முதுகுளத்தூர் ஒன்றியச் செயலாளர் தர்மருக்குக் கொடுத்ததுதான் இருவருக்கிடையிலும் புயலைக் கிளப்பியது என்கிறார்கள். இதையடுத்து நடந்த பொதுக்குழுக் கூட்டம் முதல் தலைமை அலுவலக வன்முறை, நீதிமன்ற வழக்கு, எடப்பாடிக்கு ஓ.பி.எஸ் விட்ட தூது வரையிலான கேள்விகளை எம்.பி தர்மரிடம் முன்வைத்தோம்… “ஒன்றியச் செயலாளராக இருந்த நீங்கள் ராஜ்யசபா எம்.பி.யாக்கப்படுவீர்கள் என்று நினைத்தீர்களா?” “ஒரு சாதாரண தொண்டனும் மேலே … Read more

கல்லூரி பேருந்தும், பள்ளி வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து – 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம்!

திருச்சி மாவட்டம் திருவானைக்காவலில் கல்லூரி பேருந்தும், பள்ளி வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் மாணவ மாணவிகள் உட்பட 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஸ்ரீரங்கத்தில் இருந்து கூத்தூர் நோக்கி 50 மாணவர்களுடன் சென்று கொண்டிருந்த தனியார் பாலிடெக்னிக் கல்லூரி பேருந்தை, 70 வயதான ஓட்டுநர் கண்ணன் ஓட்டி சென்றார். ஸ்ரீரங்கம் திருவானைக்காவல் பாலத்தில் இறங்கும்போது பேருந்தின் வேகம் அதிகரித்த நிலையில், பிரேக் அடித்தும் வயது முதிர்வு காரணமாக டிரைவர் கண்ணனால் பேருந்து வேகமெடுத்து பாய்ந்ததை கட்டுப்படுத்த இயலவில்லை … Read more

அரசுப் பள்ளிகளில் சிறார் திரைப்படங்கள்: பள்ளிக்கல்வித்துறை புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு

சென்னை: தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் சிறார் திரைப்படங்கள் திரையிடுவது தொடர்பான புதிய வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் சிறார் திரைப்படங்கள் திரையிடப்பட்டு, இந்த திரைப்படங்கள் குறித்து சிறப்பாக விமர்சனம் செய்யும் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு வெளிநாடுகளுக்குச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இதன்படி, மாதந்தோறும் அரசுப் பள்ளிகளில் சிறார் திரைப்படங்கள் திரையிடும் திட்டத்தை பள்ளிக் கல்வித்துறை ” சிறார் திரைப்பட விழா” என்ற பெயரில் … Read more

பாரத் ஜோதோ யாத்திரையால் தள்ளிப்போகும் காங்கிரஸ் தலைவர் தேர்தல்

புதுடெல்லி: செப்டம்பர் 20ல் நடைபெறவிருந்த காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பாரத் ஜோதோ யாத்திரை காரணமாக தள்ளிப்போகலாம் எனக் கூறப்படுகிறது. இருப்பினும் வரும் சனிக்கிழமை காங்கிரஸ் காரிய கமிட்டி ஆன்லைன் சந்திப்பை நடத்துகிறது. அதில் தேர்தல் நடைமுறைகள் குறித்து இடைக்கால தலைவர் சோனியா காந்தியுடன் ஆலோசனை நடத்துகிறது. கடந்த அக்டோபர் மாதம் காங்கிரஸ் கட்சியின் சிந்தனைக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 20க்குள் நடத்தி முடிக்கப்படும் என்று அறிவித்தது. … Read more

இந்தியாவுக்கே திரும்பிப் போங்க..இந்தியப் பெண்கள் மீது இனவெறி தாக்குதல்

டல்லாஸ்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இந்தியப் பெண்கள் நால்வரை மெக்சிகோ அமெரிக்கன் பெண் ஒருவர் இன ரீதியாக வசைபாடியதுடன் அவர்களைத் தாக்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் இந்தியப் பெண்களை தொடர்ந்து தரக்குறைவாகப் பேசுவதோடு “நீங்கள் எல்லோரும் இந்தியாவுக்கே திரும்பிப் போங்கள்” என்று ஆவேசமாகப் பேசுகிறார். நடந்தது என்ன? டெக்சாஸ் மாகாணத்தில் உள்ளது டல்லாஸ் நகரம். இங்கு இந்தியப் பெண்கள் நால்வர் ஓர் உணவகத்தில் இரவு உணவை முடித்துவிட்டு கார் பார்க்கிங் லாட்டில் நிற்கின்றனர். … Read more