குலாம் நபி ஆசாத்: காங்கிரஸ் கட்சிக்கு மொத்தமா குட்பை சொன்னதால் பரபரப்பு!

மாநில அளவிலான பொறுப்புகளை ஓரங்கட்டி விட்டு தேசிய அரசியலில் கவனம், பாஜகவில் ஐக்கியம் என பல்வேறு சர்ச்சைகள் சுற்றி வந்த நிலையில், இன்றைய தினம் காங்கிரஸ் கட்சியில் இருந்து ஒட்டுமொத்த வெளியேறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர், முன்னாள் மத்திய அமைச்சர், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் விவகாரங்கள் குழு உறுப்பினர் என பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத். இவர் கட்சி தலைமை மீது … Read more

காவல் நிலைய வாசலில் வைத்து பெண்ணை ஆக்‌ரோஷமாக தாக்கிய போலீஸ் எஸ்.ஐ – வீடியோ

காஞ்சிபுரம் மாவட்டம் தாயார் குளம் பகுதியைச் சேர்ந்தவர் பிரியா.  இவருக்கும் காஞ்சிபுரம் காவல்நிலையத்தில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றிய, சோமு என்கின்ற சோமசுந்தரம் என்பவருக்கும் பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. நீண்ட நாள் உறவுக்கு பின், காவலர் சோமசுந்தரத்திற்கும் பிரியாவுக்கும் இடையில் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்ததாக கூறப்படுகிறது. இதனால் எஸ்.ஐ. சோமசுந்தரம், பிரியாவிற்கு காவல்துறையினர் மூலம் அடிக்கடி தொந்தரவு செய்துவந்ததாகவும், பிரியாவின் தம்பியை வழக்கு ஒன்றில் பிடித்து கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால்  காவலர் வீட்டிற்கு சென்று பிரியா … Read more

மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார்…

ஸ்ரீநகர்:  மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத்,  காங்கிரஸ் கட்சியின் அனைத்து முதன்மை உறுப்பினர் பதவிகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்து உள்ளார். இது காங்கிரஸ் தலைவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு, காங்கிரஸ் தலைமைமீது அதிருப்தியில் இருந்து வந்தார் முன்னாள் காஷ்மீர் முதல்வரும் மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத். அதைத்தொடர்ந்து கடந்த 2020ம் ஆண்டு  நடைபெற்ற “பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தல் மற்றும் சில … Read more

கைத்தறிக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட 11 ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்ய தடை: ஆய்வில் கண்டறியப்பட்டால் 6 மாத சிறை தண்டனை

தர்மபுரி: தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கைத்தறிக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட 11 ரகங்களை, விசைத்தறியில் உற்பத்தி செய்ய தடை செய்யப்பட்டுள்ளது என விசைத்தறி உரிமையாளர்கள், நெசவாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 13 ஆயிரத்திற்கும் விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் அன்னசாகரம், எட்டிமரத்துப்பட்டி, ஏமகுட்டியூர், தேவரசம்பட்டி, லளிகம், முக்கல்நாயக்கன்பட்டி, நூலஅள்ளி, எர்ரப்பட்டி, சவுளூர், பாளையம்புதூர், பாப்பாரப்பட்டி, பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட இடங்களில், 3 ஆயிரத்திற்கும் … Read more

யோகி ஆதித்யநாத்தை விசாரிக்க கோரும் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: வெறுப்புணர்வைத் தூண்டியதாக யோகி ஆதித்யநாத் மீது வழக்கு தொடர அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிரான மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் மீது வழக்கு தொடர அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. தலைமை நீதிபதி என்.இ.ரமணா தலைமையிலான அமர்வு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் டெல்லி சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் தொடங்கியது

டெல்லி: பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் டெல்லி சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் தொடங்கியது. பேரவை தொடங்கிய உடனே பாஜக உறுப்பினர்கள் அமளியால் கூட்டம் 10 நிமிடம் ஒத்திவைக்கப்பட்டது.

'என்ன கடத்தி ரூ.1.50 கோடியை கொள்ளையடித்தனர்'-அதிமுக நிர்வாகி மீது முன்னாள் எம்எல்ஏ புகார்

பவானிசாகர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ ஈஸ்வரன் தன்னை கடத்திச் சென்று பணம் கேட்டு மிரட்டி அடித்து உதைத்து பணத்தைப் பறித்துச் சென்றதாக முன்னாள் அதிமுக நிர்வாகி மீது புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள புஜங்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் எஸ்.ஈஸ்வரன் (45). அதிமுகவை சேர்ந்தவர். இவர் கடந்த 2016 முதல் 2021 வரை பவானிசாகர் சட்டமன்றத் தொகுதியின் எம்எல்ஏவாக இருந்தார். இந்நிலையில் முன்னாள் எம்எல்ஏ ஈஸ்வரன் தன்னை கடத்திச் சென்று பணம் கேட்டு மிரட்டி … Read more

இந்தியாவில் மேலும் 13,528 பேர் குணம்| Dinamalar

புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 13,528 பேர் கோவிட் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,256 பேருக்கு கோவிட் தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,43,89,176 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில் 13,528 பேர் நலமடைந்து வீடு திரும்பினர். இதுவரை கோவிட் தொற்றில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 4,37,70,913 ஆனது. தற்போது 90,707 … Read more

கலர்புல் காம்போவில் புகைப்படங்களை வெளியிட்ட அமலா பால்.. வாழ்க்கையிலும் வண்ணங்களை சேர்க்க விருப்பமாம்

சென்னை : நடிகை அமலா பால் எப்போதுமே அதிரடி படங்களில் நடித்து சிறப்பான பெயரையும் ஏராளமான ரசிகர்களையும் பெற்றவர். இவரது நடிப்பு மற்றும் தயாரிப்பில் சமீபத்தில் ஓடிடியில் நேரடியாக வெளியானது கடாவர். இந்தப் படம் இவருக்கு சிறப்பாக கைக்கொடுக்கவில்லை. பட வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் அமலா பால், அதையொட்டி பல போட்டோஷுட்களை எடுத்து அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். நடிகை அமலா பால் நடிகை அமலா பால் தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் பிசியாக … Read more

விமானத்தில் இனி இண்டர்நெட் சேவை.. டாடா-வின் புதிய கூட்டணி..!

உலகளவில் தொழில்நுட்பம் மேம்பட்டு வரும் நிலையில், கடந்த சில வருடங்களாக விமானத்தில் வை-பை வாயிலாக இண்டர்நெட் சேவையை வாடிக்கையாளர்களுக்கு வழங்கப் பல நிறுவனங்கள் உலகளவில் முயற்சி செய்து வருகிறது. இதில் எலான் மஸ்க்-ன் ஸ்டார்லிங்க் சேவையும் அடங்கும். இந்த நிலையில் இந்தியாவில் விமானச் சேவையும் சரி விமானப் பயணிகள் எண்ணிக்கையும் சரி வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் இந்திய விமானத்தில் இண்டர்நெட் சேவை அளிக்க வெளிநாட்டு நிறுவனம் களமிறங்கியுள்ளது. இந்த மாபெரும் புரட்சி திட்டத்திற்காக வெளிநாட்டு … Read more