வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைக்கும் பணி: பல்வேறு துறை அலுவலர்களை ஈடுபடுத்த சென்னை மாநகராட்சி முடிவு

சென்னை: சென்னை மாவட்டத்தில் வாக்காளர் அட்டையில் ஆதார் எண்களை இணைக்கும் பணியில் பல்வேறு துறை அலுவலர்களை ஈடுபடுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணைய அறிவுறுத்தல்படி, வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள விவரங்களை உறுதி செய்வதற்காக, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நாடு முழுவதும் கடந்த ஆக.1-ம்தேதி முதல் நடைபெற்று வருகிறது. சென்னை மாவட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்இணைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி ஆணையர்ககன்தீப் சிங் பேடி தலைமையில்,நேற்று நடைபெற்றது. … Read more

பிஹாரில் விஷ்ணு கோயிலில் நுழைந்த முஸ்லிம் அமைச்சர் – தடையை மீறி கருவறை வரை சென்றதாக நீதிமன்றத்தில் வழக்கு

புதுடெல்லி: பிஹாரில் புத்த கயா என்ற இடத்தில் உள்ள போதி மரத்தடியில் புத்தர் ஞானம் பெற்றார். இங்குள்ள புத்தர் கோயில் சர்வதேச அளவில் புகழ் பெற்றது. அதேசமயம், இதன் அருகில் இந்துக்களின் விஷ்ணு பாதம் என்ற கோயிலும் உள்ளது. பாஜக கூட்டணியிலிருந்து நிதிஷ் குமார் விலகி, மீண்டும் முதல்வரான பிறகு கடந்த திங்கட்கிழமை இக்கோயிலுக்கு வருகை தந்தார். அவரது அமைச்சரவை சகாவும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்தவருமான முகம்மது இஸ்ரேல் மன்சூரியும் அப்போது முதல்வருடன் இருந்தார். … Read more

உக்ரைன் விவகாரம் | ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவுக்கு எதிராக முதல்முறை இந்தியா வாக்களிப்பு

வாஷிங்டன்: உக்ரைன் விவகாரம் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நேற்று முன்தினம் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் மீது ரஷ்யாவுக்கு எதிராக இந்தியா முதன் முறையாக வாக்களித்தது. உக்ரைனில் ரஷ்ய ராணுவம் கடந்த பிப்ரவரியில் தாக்குதலை தொடங்கியது. இதுவரை உக்ரைன்-ரஷ்யா போர் தொடர்பான தீர்மான விவகாரங்களில் இந்தியா ஒதுங்கியே இருந்தது. இந்த நிலையில், தற்போது உக்ரைன் பிரச்னையில் ரஷ்யாவுக்கு எதிராக இந்தியா முதல்முறையாக தனது வாக்கை பதிவு செய்து எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. இதுவரையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் … Read more

உக்ரைனில் உள்ள ரயில் நிலையத்தின் மீது ரஷ்யா ஏவுகணை வீசித் தாக்குதல் – 22 பேர் பலி; 50 பேர் காயம்!

உக்ரைனில் உள்ள ரயில் நிலையத்தின் மீது ரஷ்யா ஏவுகணை வீசி நடத்திய தாக்குதலில் 22 பேர் பலியானதாகவும், 50 பேர் காயமடைந்ததாகவும் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பேசிய அவர், சாப்லினோ ரயில் நிலையத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று தெரிவித்தார். சோவியத் யூனியனிலிருந்து பிரிந்ததை சுதந்திர தினமாக உக்ரைன் நேற்று கொண்டாடியது. இதையொட்டி பேசிய ஜெலன்ஸ்கி, ரஷ்யா தாக்குதல் நிகழ்த்தினால் பதிலடி சக்திவாய்ந்ததாக இருக்கும் … Read more

ஆகஸ்ட் 26: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 97-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இன்று 97-வது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தஞ்சாவூர் அருகே சோகம் தாய் தற்கொலை செய்ததால் மகனும் தூக்கில் தொங்கினார்

பாபநாசம்: தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அடுத்த திருப்பாலைத்துறையை சேர்ந்தவர் வசந்தா (52). இவரது கணவர் ஜெகதீசன் இறந்து விட்டார். இவர்களுக்கு 3 மகன்கள். வசந்தா நீண்ட நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டும் குணமாகாமல் வேதனையில் இருந்தார். இந்நிலையில், நேற்றுமுன்தினம் திடீரென அவரை காணவில்லை. அவரது 2வது மகன் அன்பரசன் (28) பல்வேறு இடங்களில் தேடியும் தாய் கிடைக்கவில்லை. நேற்று 2வது நாளாக தாயை தேடி அன்பரசன் சென்றார். அப்போது குடமுருட்டி … Read more

ஆக-26: பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24 க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

பிரேத பரிசோதனை முடிந்தது நடிகை சோனாலி உடலில் காயங்கள்: பலாத்கார முயற்சியில் கொலையா?

பனாஜி: பாஜ மகளிரணி துணைத் தலைவரும், நடிகையுமான சோனாலி போகட்டின் பிரேத பரிசோதனையில் உடலில் பலவந்தம் செய்யப்பட்டதற்கான காயங்கள் இருப்பதாக அதில் தெரிய வந்துள்ளது. அரியானாவைச் சேர்ந்த நடிகை சோனாலி போகட், டிக்டாக் வீடியோக்கள் மூலம் பிரபலமானார். பின்னர், இவர் பாஜ.வில் இணைந்தார். 2019ம் ஆண்டு நடந்த இம்மாநில சட்டப்பேரவை தேர்தலில் ஆதம்பூர் தொகுதியில்  போட்டியிட்டு தோற்றார். பாஜ.வின் மகளிரணி துணைத் தலைவராக இருந்த இவர், கடந்த வாரம் கோவாவுக்கு சுற்றுலா சென்றார். கடந்த செவ்வாயன்று திடீரென … Read more

போலீஸ் இன்ஸ்பெக்டர் சீருடையில் சுற்றித் திரிந்த காங்கிரஸ் நிர்வாகி – காரணம் என்ன?

திண்டுக்கல்லில், போலீஸ் இன்ஸ்பெக்டர் சீருடையில் காங்கிரஸ் நிர்வாகி சுற்றித்திரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திண்டுக்கல் பஸ் நிலையம் பகுதியில் ஒருவர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீருடை அணிந்து மிடுக்கான தோற்றத்தில் மோட்டார் சைக்கிளில் (புல்லட்) சுற்றி வந்தார். அதனை பார்த்த பொதுமக்கள் பலரும் அவர், திண்டுக்கல்லுக்கு புதிதாக நியமிக்கப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டரோ?, என்று நினைத்து அவரை அச்சத்துடன் பார்த்து கடந்து சென்றனர். இதற்கிடையே போலீஸ் சீருடையில் மோட்டார் சைக்கிளில் ஒருவர் சுற்றித்திரிகிறார். அவருடைய சீருடை போலி போலீசாரின் சீருடை … Read more