கத்தியால் குத்தப்பட்ட ஆர்.பி.எப் பெண் காவலர் ரயிலில் இருந்து குதித்து தப்பி ஓடிய சிசிடிவி காட்சி.!

சென்னையில்,கத்தியால் குத்தப்பட்ட ஆர்.பி.எப் பெண் காவலர் ஓடும் மின்சார ரயிலில் இருந்து குதித்து தப்பி சென்றது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. செவ்வாய் இரவு கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு சென்ற மின்சார ரயிலில் ஆசிர்வா என்ற 29 வயது ஆர்.பி.எப் பெண் காவலர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது மகளிருக்கான பெட்டியில் ஏறிய 40 வயது மதிக்கத்தக்க போதை ஆசாமியிடம் இது மகளிருக்கான பெட்டி என ஆசிர்வா கூறியதால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அந்த நபர் ஆசிர்வா-வை … Read more

கொடைக்கானல் ஏரி மேம்பாட்டு பணிகளுக்கு தடையில்லை: உயர் நீதிமன்றம்

மதுரை: கொடைக்கானல் ஏரிப் பகுதியில் கட்டிடங்கள் கட்டுவதற்கு தடை கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கொடைக்கானலைச் சேர்ந்த ஆறுமுகவேலன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: ”தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலமாக கொடைக்கானல் உள்ளது. கொடைக்கானல் ஏரிப் பகுதியில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கத்தில் ஏரியை சுற்றி 200 மீட்டருக்குள் எவ்வித கட்டிடங்களும் கட்டக் கூடாது. இப்பகுதியில் ஜேசிபி இயந்திரம் பயன்படுத்தக்கூடாது என விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த விதிமுறையை மீறி கொடைக்கானல் ஏரியைச் … Read more

அதிமுக பொதுக்குழு வழக்கு: தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைப்பு!

ஜூலை 11 அதிமுக பொதுக்குழு தொடர்பான தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது. கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் மற்றும் வைரமுத்து ஆகியோர் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி ஜெயச்சந்திரன், அதிமுகவில் ஜூன் 23ம் தேதி இருந்த நிலையே நீடிக்க வேண்டும் என்று கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தார். அதிமுக பொதுக்குழு … Read more

5ஜி சேவை தொடக்கம் எப்போது..? – மத்திய அமைச்சர் அளித்த பதில்..!

உலகம் முழுவதும் தகவல் தொழில்நுட்பம் அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது. இதற்க்கு 5ஜி தொழில்நுட்பம் ஒரு சான்று .இந்தியாவில் 5ஜி சேவை இன்னும் ஒரு மாத காலத்தில் தொடங்கும் என்று தொலைத்தொடர்பு துறை இணை அமைச்சர் தேவுசின் சவுகான் தெரிவித்துள்ளார். சமீபத்தில் 5ஜி சேவைக்கான ஏலம் நடந்தது என்பதும் இந்த ஏலத்தில் ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் அதிகமாக ஏலம் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தியாவில் அகமதாபாத், பெங்களூரு, சண்டிகர், சென்னை, டெல்லி, … Read more

இறுதி சடங்கில் எழுந்த சிறுமி?; டாக்டர்களுக்கு வந்தது சிக்கல்!

மெக்சிகோ நாட்டைச் சேர்ந்தவர் காமிலா ரோக்சானா மார்டினேஸ் (3). கடந்த சில தினங்களாக சிறுமி காமிலா வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். மேலும் காய்ச்சல், வாந்தி ஏற்பட்டதால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அதே பகுதியில் உள்ள மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி சேர்த்துள்ளனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் சிறுமிக்கு மாத்திரைகள் வழங்கியுள்ளனர். ஆனாலும் சிறுமி உடல் நிலை மோசமடைந்ததோடு சிறிது நேரத்தில் சுயநினைவு இழந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த டாக்டர்கள் உடனடியாக தீவிரமான … Read more

பொங்கல் பரிசு தொகுப்பு முறைகேடு; அமைச்சர்கள் பதிலளிக்க உத்தரவு

கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையின் போது குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரத்து 296 கோடியே 88 லட்சம் ரூபாய் செலவில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டன. இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், தரமற்ற பொருட்கள் விநோயோகம் செய்த அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி, திருவள்ளூரை சேர்ந்த ஜெயக்கோபி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.  அந்த மனுவில், அரசு வழங்கிய பொங்கல் தொகுப்பில் இருந்த வெல்லம், … Read more

ஓணம் பண்டிகை கொண்டாட்டம் எதிரொலி: தோவாளையில் பூக்கள் ஆர்டர் குவிகிறது

ஆரல்வாய்மொழி: கேரளாவில் ஓணம் பண்டிகை சிறப்பு பெற்றதாகும். கேரளாவை ஒட்டிய குமரி மாவட்டத்திலும் ஓணம் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படுகிறது. கல்லூரிகள், அரசு, தனியார் அலுவலங்கள் என்று ஓணம் பண்டிகை களைகட்டும். இந்தாண்டு ஓணம் பண்டிகையானது வரும் 31ம் தேதி தொடங்கி 8ம் தேதி வரை நடைபெறுகிறது. ஓணத்தில் மிகவும் சிறப்பு பெற்றது அத்தப்பூ கோலம். இதற்கு பூக்கள் தான் பிரதானம். இதற்கான மலர்கள் குமரி மாவட்டத்தில் உள்ள தோவாளை பூ மார்க்கெட்டில் இருந்து தான் கேரளாவுக்கு முழுவதுமாக … Read more

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள KH காலணி தொழிற்சாலையில் நடந்த ஐ.டி. சோதனை நிறைவு

சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் உள்ள KH காலணி தொழிற்சாலையில் நடந்த ஐ.டி. சோதனை நிறைவு அடைந்துள்ளது. கடந்த 23-ம் தேதி காலை தொடங்கிய சோதனை 3 நாட்களாக நடைபெற்று வந்துள்ளது. வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக 60-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது.

பெகாசஸ் வழக்கு விசாரணைக்கு ஒன்றிய அரசு ஒத்துழைக்கவில்லை: நிபுணர் குழு குற்றச்சாட்டு

புதுடெல்லி: பெகாசஸ் வழக்கு விசாரணைக்கு ஒன்றிய அரசு ஒத்துழைக்கவில்லை என்று நிபுணர் குழு குற்றம் சாட்டியது. வழக்கை 4 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர். இஸ்ரேல் பாதுகாப்பு துறையின் ஒரு பிரிவான என்எஸ்ஓ நிறுவனத்தின் தயாரிப்புதான் பெகாசஸ் உளவு மென்பொருள். இந்நிறுவனம் இந்த மென்பொருளை பல நாடுகளின் அரசு அமைப்புகளுக்கு விற்பனை செய்து வருகிறது. நாட்டுக்கு எதிராக சதி திட்டங்கள் தீட்டுபவர்களை கண்டறிய இந்த மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் பத்திரிகையாளர்கள், ஒன்றிய அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், நீதிபதிகள், … Read more

அதிமுக தலைமையகத்தில் கலவரம் செய்தது தொடர்பாக ஓபிஎஸ் தரப்பினர் மீது 7 பிரிவுகளில் வழக்கு

அதிமுக தலைமை அலுவலக கலவரச் சம்பவம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி சண்முகம் அளித்த புகாரின் அடிப்படையில் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட பல அ.தி.மு.க-வினர் மீது ராயப்பேட்டை போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டம் கடந்த மாதம் 11 ஆம் தேதி வானகரத்திலுள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. அதே நேரத்தில் ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டு கலவரமாக மாறியது. இதன் காரணமாக அங்கு … Read more