சீனாவில் சுட்டெரிக்கும் வெப்பத்தில் இருந்து தப்பிக்க சுரங்கப்பாதைகளில் தஞ்சம் புகுந்த பொதுமக்கள்.!

சீனாவின் சோங்கிங் மாகாணத்தில் சுட்டெரிக்கும் வெப்பத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள், சுரங்கப்பாதைகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். சீனாவில் பல்வேறு மாகாணங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்திருப்பதால் அவ்வப்போது மின் தடை ஏற்படுகிறது. மின்சார தேவையை குறைக்க வீதிகளில் விளக்குகளை மங்கலாக ஒளிரவிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிக வெப்பத்தால், சோங்கிங்கில் உள்ள யாங்சி நதியின் துணை நதியான ஜியாலிங்கும் வறண்டுவிட்டது. இந்நிலையில் வெப்பத்தில் இருந்து தப்பிக்க குளிர்சாதன வசதி செய்யப்பட்ட சுரங்கப்பாதைகளில் தஞ்சமடையும் மக்கள் சீட்டு விளையாடியும், உறங்கியும் பொழுதை கழிக்கின்றனர். Source … Read more

தொழிலாளர் சட்டத்தில் மிகப்பெரிய சீர்திருத்தம்.. அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு அங்கீகாரம்..!

நாட்டின் அடுத்த 25 ஆண்டுகால முன்னேற்றப்பயணத்தில் தொழிலாளர்களின் பங்கு மிக முக்கியமானது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.   அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தொழிலாளர் நலத்துறை அமைச்சர்கள் பங்கேற்ற 2 நாள் தேசிய தொழிலாளர் மாநாடு திருப்பதியில் நடைபெறுகிறது. புதுடெல்லியில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக மாநாட்டில் பங்கேற்றுப் பேசினார். கடந்த 8 ஆண்டுகளில் தேவையற்ற பல சட்டங்களை நீக்கி தொழிலாளர் சட்டங்களில் மத்திய அரசு பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டதாக தெரிவித்தார். … Read more

இறந்துவிட்டதாக போலி தடயங்களை ஏற்பாடு செய்து, மகனை கடத்திச் சென்ற கனேடிய பெண் எழுத்தாளர்; நாடுகடத்தும் அமெரிக்கா

கனேடிய பெண் எழுத்தாளர் ஒருவர் தனது சொந்த மரணத்தை போலியாக தயார் செய்துவிட்டு, மகனைக் கடத்தி வந்ததற்காக அமெரிக்கா அவரை கனடாவிற்கு நாடு கடத்துகிறது. கனடாவின் எல்லையை கடப்பதற்காக தனது தோழியின் அடையாளத்தை திருடியுள்ளார் எழுத்தாளர் வாக்கர். தனது சொந்த மரணத்தை போலியாக உருவாக்கி தனது மகனைக் கடத்தியதற்காக கனடிய எழுத்தாளர் டான் வாக்கரை அமெரிக்கா அவரை நாடு கடத்தப் போகிறது. கனடாவின் எல்லையைத் தாண்டுவதற்காக தனது தோழியின் அடையாளத்தைத் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்ட வாக்கர், வீட்டு … Read more

ராக்கெட்ரி படத்தில் கூறப்பட்டுள்ள தகவல்கள் 90% பொய்! இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானிகள் குற்றச்சாட்டு

திருவனந்தபுரம்: நடிகர் மாதவன் நடித்து வெளியாகி உள்ள ராக்கெட்ரி படத்தில் கூறப்பட்டுள்ள தகவல்கள் 90% பொய் என்றும் அப்துல் கலாமுக்கு  நம்பி நாராணயன் எந்தவொரு உதவியும் செய்யவில்லை என்று திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த  இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.  பொய் வழக்குகளால் சிறை தண்டனை பெற்ற இஸ்ரோவில் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை கருவாக கொண்ட “ராக்கெட்ரி – நம்பி விளைவு” என்ற படம் தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த படத்தில் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி … Read more

சீதப்பாலில் தாடகை மலை அடிவாரத்தில் வேட்டு வைத்து பாறைகள் தகர்ப்பு: வனத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை

நாகர்கோவில்: சீதப்பால் தாடகை மலைஅடிவாரத்தில் பாறைகள் வேட்டு வைத்து  தகர்க்கப்பட்டது குறித்து வனத்துறை மற்றும் வருவாயத்துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். குமரியில் ஜல்லி கல், மண்ணிற்கு கடும் தட்டுபாடு ஏற்பட்டு உள்ளது. தற்போது தேவைக்காக 2 குவாரிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சில பகுதிகளில் திருட்டுத்தனமாக குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. கடந்த வாரம் தேங்காய்பட்டிணம் பகுதியில் திருட்டு குவாரியை பொது மக்கள் முற்றுகையிட்டனர். இதற்கிடையே காப்புக் காடான தாடகை மலை அடிவாரத்தில் திருட்டுத்தனமாக … Read more

அமெரிக்க ஓபனில் இருந்து முன்னணி வீரர் நோவக் ஜெகோவிச் விலகல்

அமெரிக்கா: அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்கப்போவதில்லை என முன்னனி வீரர் நோவக் ஜெகோவிச் அறிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை உள்ளது என குறிப்பிடத்தக்கது.

உத்திர பிரதேசத்தில் தங்கத்தில் விநாயகர் சிலை தயாரிப்பு: மும்பையில் பல வடிவங்களில் தயாராகும் விநாயகர் சிலைகள்

லக்னோ: எதிர்வரும் 31-ம் தேதி நாடு முழுவதுமாக ஹிந்துக்களால் விநாயகர் சதுர்த்தி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட இருக்கும் நிலையில் உத்திரபிரதேசத்தில் தங்கத்திலான விநாயகர் சிலை தயாரிக்கப்பட்டு வருகிறது. சந்தாயூசி என்ற இடத்தில் இந்த தங்கத்திலான விநாயகர் சிலை தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த சிலைக்கு ஸ்வர்ண கணேஷ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சிலையில் 40 முதல் 50 சதவிகிதம் வரை தங்கம் பயன்படுத்தப்படும் என்றும் அத்துடன் பிற உலோகங்கள் பயன்படுத்தி இந்த விநாயகர் சிலை செய்யப்பட்டு வருவதாக சிலை … Read more

ரயிலில் போதை ஆசாமியால் பெண் காவலருக்கு கத்திக்குத்து – தப்பித்து ஓடும் சிசிடிவி காட்சிகள்!

நேற்று முன்தினம் இரவு போதையிலிருந்த ஒருவரால் மின்சார ரயிலில் கத்தியால் தாக்கப்பட்ட பெண் காவலர், தப்பித்து ஓடிவரும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை காவலராக பணிபுரிந்து வரும் வட மாநிலத்தை சேர்ந்த பெண் காவலர் ஆசிர்வா. பெண் காவலர் ஆசிர்வாவை, நேற்று முன்தினம் இரவு போதையில் பயணித்த ஒருவர் கத்தியால் கடுமையாக தாக்கியிருந்தர். அப்பெண் காவலர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது இச்சம்பவம் நடந்திருந்தது. சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் … Read more

ஜார்க்கண்ட் முதல்வரின் எம்எல்ஏ பதவியை பறிக்க பரிந்துரை – ஆட்சி கலைப்பு?

சுரங்க முறைகேடு வழக்கில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் எம்.எல்.ஏ பதவியை பறிக்குமாறு அம்மாநில ஆளுநருக்கு இந்திய தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் இரு கட்சியை சேர்ந்தவர்களும் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். இச்சூழலில், கடந்த ஆண்டு ஜார்க்கண்ட் சுரங்க துறை சார்பில் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு சுரங்க ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதையடுத்து  அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி சுரங்க … Read more

காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் தலைவராக ராகுல் காந்தி ஏன் விரும்பவில்லை?

India bbc-BBC Tamil Getty Images Why Rahul Gandhi does not want to be Congress leader? கடந்த 2019 முதல் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேடும் பணி நடந்து வருகிறது. ஆனால், இந்த ஆண்டு உதய்பூரில் நடந்த ‘சிந்தனை கூட்டத்தில்’ கட்சியின் புதிய தலைவரை தேர்ந்து எடுக்கும் பணியை செப்டம்பர் மாதம் முடிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான நேரம் நெருங்கிவிட்டாலும், காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேடும் பணி முடிந்ததாக தெரியவில்லை. … Read more