விஜயகாந்தை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து கூறினார் நடிகர் கார்த்தி

நடிகர் விஜயகாந்தின் 70வது பிறந்தநாள் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்த விஜயகாந்த் இன்று தனது ரசிகர்களையும் தொண்டர்களையும் சந்தித்தது அவர்களை உற்சாகமடையச் செய்துள்ளது. நடிகர் கார்த்தி நேரில் சென்று இவருக்கு வாழ்த்து கூறினார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி, நடிகர் சங்கம் சார்பில் வாழ்த்து தெரிவிக்க வந்ததாகவும் நடிகர் சங்கம் விஜயகாந்திற்கு கடமைப்பட்டிருப்பதாகவும் கூறினார். அவரது தைரியமும் அவரை நாடி வரும் அனைவருக்கும் உணவளிக்கும் உள்ளமும் என்னை சிறுவயதில் இருந்து … Read more

பிரித்தானியாவில் பணத்தை கையாடல் செய்து சிக்கிய இலங்கையர்: வெளியான முழு பின்னணி

நியூகேஸில் நகர சபைக்கு அனுப்பப்பட்ட காசோலைகள் உட்பட பல சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் நியூகேஸில் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் குற்றவாளி என கண்டறியப்பட்டார் பிரித்தானியாவில் தொண்டு நிறுவனம் ஒன்றில் அலுவலக மேலாளராக பணியாற்றிய இலங்கையர் ஒருவர் 14,000 பவுண்டுக்கும் அதிகமான தொகையை கையாடல் செய்து சிக்கிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. குறித்த தொகையில் அவர் தமது IVF சிகிச்சை, கவுன்சில் வரி மற்றும் பல்கலைக்கழகத்தில் அவரது மருமகனுக்கு நிதியளிக்கவும் பயன்படுத்தியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. @Newcastle Chronicle தற்போது செயல்பாட்டில் … Read more

விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தும் காட்டு யானைகளை விரட்ட கோரிக்கை

திண்டுக்கல்: ஆயக்குடி பகுதியில் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தும் காட்டு யானைகளை விரட்ட கோரி விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் மாவட்ட வன அலுவலரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம் கிழக்கு ஆயக்குடி கிராமப்பகுதியில் சுமார் 5,000 ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலங்கள் உள்ளன. இதில் கெய்யா, மா, தென்னை, வாழை. எலுமிச்சை மற்றும் மக்காச்சோளம் பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறோம். சில தினங்களாக சுமார் 5க்கும் மேற்பட்ட காட்டு … Read more

மேட்டூர் அணையில் இருந்து 30,000 கன அடி நீர் திறப்பு: காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

சேலம்: மேட்டூர் அணையில் இருந்து 30,000 கன அடி நீர் திறக்கப்பட உள்ளதால் காவிரி ஆற்றின் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து இரவு 10 மணி அளவில் 30,000 கன அடி நீர் வெளியேற்றப்பட உள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொலை

காஷ்மீர்; ஜம்மு-காஷ்மீரின் உரி பகுதியில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து ஏ.கே.-47 துப்பாக்கிகள், சீனாவின் எம்-16 துப்பாக்கி போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது.

தூத்துக்குடி – திருநெல்வேலி ரயில் நாரைக்கிணறில் நின்று செல்லும் – தெற்கு ரயில்வே அறிவிப்பு

பயணிகளின் வசதிக்காக தூத்துக்குடி – திருநெல்வேலி ரயில் நாரைக்கிணறு ரயில் நிறுத்தத்தில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு பிறகு மதுரை கோட்டத்தில் பல்வேறு ரயில் நிலையங்களில் ரயில்கள் நின்று செல்லும் வசதி அளிக்கப்படாமல் இருந்துவந்த நிலையில், படிப்படியாக பயணிகளின் வசதிக்காக பல்வேறு ரயில் நிலையங்களில் ரயில்கள் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தூத்துக்குடி – திருநெல்வேலி – தூத்துக்குடி முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்களுக்கு வாஞ்சி, மணியாச்சி … Read more

தனது கை ரேகையை ஒட்டி நண்பரை தேர்வெழுத அனுப்பிய பீகார் நபர்..கடைசியில் எதிர்பாராத ட்விஸ்ட்!

ரயில்வே குரூப் டி தேர்வில் வெற்றி பெற தனது கை ரேகையை நண்பருக்கு ஒட்டி தேர்வெழுத அனுப்பிய சம்பவம் பீகாரில் அரங்கேறியுள்ளது. ரயில்வே ஆள்சேர்ப்பு வாரியம் (RRB), குரூப் D CBT தேர்வுக்கான அறிவிப்பை அறிவித்திருந்தது. தேர்வுக்கான தேர்வுகள் அனைத்தும் ஆகஸ்டு 17 முதல் 25ஆம் தேதிவரை நடக்கும் என்ற அறிவிப்பு தேர்வு நாளிற்கு நான்கு நாட்களுக்கு முன்பாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பிற்கான தேர்வுகள் ஆகஸ்ட் 17ல் தொடங்கிய நிலையில் இன்றுடன் முடியவிருக்கின்றன. இந்நிலையில் இந்த ரயில்வே … Read more

‘உருமாறி, உருமாறி போகவும் தெரியும், பதுங்கி அடிக்கவும் தெரியும்’-கோப்ரா ட்ரெய்லர் வெளியீடு

நடிகர் விக்ரமின் ‘கோப்ரா’ பட ட்ரெயிலர் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது. ‘டிமான்ட்டி காலனி’, ‘இமைக்கா நொடிகள்’ ஆகிய சஸ்பென்ஸ் த்ரில்லர் படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கோப்ரா’. இந்தப் படத்தில் நடிகர் விக்ரம் பல்வேறு கெட்டப்புகளில் நடித்துள்ளார்.. அவருக்கு ஜோடியாக ‘கே.ஜி.எஃப்.’ புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். மேலும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதன்மூலம் திரையுலகில் … Read more

உடலில் காயங்கள்.. நடிகையான பாஜக லீடர் சோனாலி போகத் கொலை.. பின்னணியில் 2 உதவியாளர்கள்? பகீர் தகவல்

India oi-Nantha Kumar R பானாஜி: நடிகையான ஹரியானா பாஜக நிர்வாகி சோனாலி போகத் கோவாவில் மாரடைப்பால் இறந்ததாக கூறப்பட்ட நிலையில் கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக அவரது உதவியாளர்கள் 2 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் தான் அவரது உடலில் காயங்களுக்கான அடையாளங்கள் இருப்பது பிரேத பரிசோதனை அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. ஹரியானாவை சேர்ந்தவர் சோனாலி போகத் (வயது 43). இவர் பாஜகவின் மகளிர் அணி முன்னாள் தேசிய துணை தலைவர், … Read more

அடுத்தாண்டு கோடையில் விஷாலின் மார்க் ஆண்டனி ரிலீஸ்

லத்தி படத்தில் நடித்து முடித்ததை அடுத்து தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் மார்க் ஆண்டனி என்ற படத்தில் நடித்து வருகிறார் விஷால். மாநாடு படத்தைத் தொடர்ந்து இந்த படத்திலும் அதிரடி வில்லனாக நடிக்கிறார் எஸ்.ஜே. சூர்யா. விஷால், எஸ் .ஜே .சூர்யா ஆகிய இரண்டு பேருமே இந்த படத்தில் வித்தியாசமான தோற்றங்களில் நடித்து வருகிறார்கள். இந்த நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் , ஹிந்தி என பான் இந்தியா படமாக உருவாகி வரும் மார்க் ஆண்டனி படத்தின் … Read more