களக்காடு அருகே விளைநிலங்களுக்குள் புகுந்து காட்டு பன்றிகள் அட்டகாசம்: வாழைகள் நாசம்

களக்காடு: களக்காடு அருகே விளைநிலங்களுக்குள் புகுந்து காட்டு பன்றிகள் அட்டகாசம் செய்ததில் வாழைகள் நாசமானது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள மேலவடகரை பம்பன்குளம் பத்துக்காட்டில் விவசாயிகள் வாழை, நெல் பயிர் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களாக இப்பகுதியில் காட்டு பன்றிகள் அட்டகாசம் செய்து வருகின்றன. இதனால் விவசாயிகள் இரவு நேரங்களில் காவல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று இரவில் வனப்பகுதியில் இருந்து வெளிவந்த காட்டு பன்றிகள் கூட்டம் … Read more

பெரியார் சிலை குறித்து சர்ச்சை பேச்சு: கனல் கண்ணனின் ஜாமின் மனு நிராகரிப்பு

சென்னை: ஸ்டண்ட் மாஸ்டரும், இந்து முன்னனி நிர்வாகியுமான கனல் கண்ணனின் ஜாமின் மனு நிராகரிக்கப்பட்டது. ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணனின் ஜாமின் மனுவை சென்னை முதன்மை குற்றவியல் நீதிமன்றம் நிராகரிதுள்ளது. பெரியார் சிலை குறித்து அவதூறு பேசியதால் ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் கைது செய்யப்பட்டார்.

நடிகை சோனாலி போகத் மரணம் கொலை வழக்காக பதிவு: கோவா போலீஸ்

கோவா: நடிகை சோனாலி போகத் மரணம் தொடர்பான வழக்கை கொலை வழக்காக கோவா போலீஸ் பதிவு செய்துள்ளது. நடிகை சோனாலி போகத் உடலில் ஆயுதத்தால் தாக்கியதுக்கான தடயங்கள் உள்ளதாக உடற்கூறாய்வில் தகவல் வெளியாகியுள்ளது. சோனாலி போகத்தின் மரணத்துக்கு அவரது தனி உதவியாளர், நண்பர்தான் காரணம் என்றும் உறவினர்கள் புகார் தெரிவித்தனர்.

காதலியை சாதி பெயரை சொல்லி திட்டிய காதலன் கைது – உடந்தையாக இருந்த நண்பருக்கும் சிறை

ஓமலூர் அருகே காதலித்த பெண்ணை சாதிப் பெயரை சொல்லி திட்டியதுடன் தாக்குதல் நடத்திய காதலனை போலீசார் ஏற்கனவே கைது செய்து சிறையில் அடைத்த நிலையில், தற்போது அவருக்கு உடந்தையாக இருந்த நண்பரும் கைதாகியிருக்கிறார். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள தொளசம்பட்டி காவல் நிலைய எல்லையில் மானத்தாள் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் வசிக்கும் கோவிந்தராஜ் என்பவரது 26 வயது மகள் பூங்கொடி, தொளசம்பட்டி பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 3 … Read more

ஓரினச்சேர்க்கையால் அதிர்ச்சி.. ஒரேநேரத்தில் கொரோனா, குரங்கு அம்மை, எச்ஐவியால் பாதிக்கப்பட்ட நபர்

International oi-Nantha Kumar R ரோம்: ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட நபர் ஒரே நேரத்தில் கொரோனா, குரங்கு அம்மை, எச்ஐவி ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒரே நேரத்தில் ஒரு நபர் 3 வகை நோயால் பாதிக்கப்பட்டு இருப்பது இதுதான் முதல் முறை என்ற திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. இத்தாலியை சேர்ந்தவர் 36 வயது நபர். இவர் கடந்த ஜூன் மாதம் 16ம் தேதி முதல் ஜூன் 20 வரை ஸ்பெயின் … Read more

டி.ஆர்.டி.ஒ. தலைவராக சமீர் வி. காமத் நியமனம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடெல்லி: ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன தலைவராக சமீர் வி. காமத் நியமனம் செய்யப்பட்டார். டி.ஆர்.டி.ஓ. எனப்படும் இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும், மேம்பாட்டு நிறுவனம் முப்படைகளுக்கு தேவையான ஆயுதங்கள் உள்ளிட்ட உபகரணங்கள் தொடர்பாக மத்திய அரசுக்கு ஆலோசனைகளை வழங்கி செயல்படுத்தி வருகிறது. அதிநவீன ஆயுதங்களை உள்நாட்டில் உருவாக்குவது தொடர்பான திட்டங்கள் குறித்தும் ஆராய்ந்து வருகிறது. இந்நிலையில் இந்நிறுவனத்தின் செயலர் மற்றும் தலைவராக இருந்த சத்தீஷ் ரெட்டி, மத்திய … Read more

ஐஸ்வர்யா ராம் சாயின் அக்கா பிரபல சீரியல் நடிகையா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாரதிதாசன் காலனி' என்கிற தொடரில் ஹீரோயினாக நடித்து வருபவர் ஐஸ்வர்யா ராம் சாய். இவர் பிரபல சீரியல் நடிகை கீதாஞ்சலியின் தங்கை என்பது ரசிகர்கள் பலருக்கும் ஆச்சரியம் தரும் செய்தியாக உள்ளது. 'நாதஸ்வரம்' சீரியலில் மஹா என்ற கதாபாத்திரத்தின் மூலம் பிரபலமான கீதாஞ்சலி, தொடர்ந்து 'வாணி ராணி', 'கல்யாண வீடு' மற்றும் விஜய் டிவியின் 'ராஜா ராணி' தொடரிலும் நடித்து வந்தார். திருமணத்திற்கு பின் கணவருடன் துபாயில் செட்டிலாகிவிட்ட கீதாஞ்சலி நடிப்புக்கு … Read more

இலங்கை நல்லூர் கந்தசுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்| Dinamalar

கொழும்பு: வரலாற்று சிறப்பு மிக்க நல்லையம்பதி அலங்கார கந்தசுவாமி தேவஸ்தான மகோற்சவத்தின் தேர்த்திருவிழா இன்று (ஆக.,25) காலை நடைபெற்றது. இலங்கை, நல்லையம்பதி அலங்கார கந்தசுவாமி தேவஸ்தான நல்லூரான் கோயில் மஹோற்சவம் கடந்த 02ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் இன்று இலங்கை பக்தர்கள் புடைசூழ நடைபெற்ற விழாவில் முன்னதாக, கோயில் வசந்த மண்டவத்தில் விஷேச அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து ஆறுமுகப்பெருமான், வள்ளி, தெய்வானை சமேதராக உள் பிரகாரம் வலம் வந்து தேரில் … Read more

விக்ரமின் கோப்ரா டிரைலர் எப்படி இருக்கு?…ரசிகர்கள் கொடுத்த ரெவ்யூ என்ன?

சென்னை : டைரக்டர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் கோப்ரா. நீண்ட நாட்களாக ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருந்த அந்த பிரம்மாண்ட படம் தற்போது ரிலீசிற்கு தயாராக உள்ளது. கோப்ரா படம் ஆகஸ்ட் 31ம் தேதி விநாயகர் சதுர்த்தி தினத்தன்று உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. டிமின்டிரி காலனி, இமைக்கா நொடிகள் படத்தை இயக்கிய அஜய் ஞான முத்து அதே பாணியில் த்ரில்லர், ஆக்ஷன் கலந்த படமாக கோப்ரா படத்தை உருவாக்கி உள்ளார். … Read more

இந்தியாவின் மிக காஸ்ட்லியான கார் எது தெரியுமா.. விலை எவ்வளவு?

கார்கள் என்றாலே பலருக்கும் விருப்பமான வாகனங்களில் ஒன்றாக உள்ளது. குறிப்பாக சொகுசு வசதிகளை கொண்ட மெர்சிடிஸ் பென்ஸ் கார் என்பது பலரின் கனவாகவே இருக்கும். ஜெர்மனியை சேர்ந்த சொகுசு கார் தயாரிப்பாளரான மெர்சிடிஸ் பென்ஸ் தனது விலையுயர்ந்த மின்சார வாகனத்தை (Mercedes-AMG EQS 53 4MATIC (sedan)) இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை 2.45 கோடி ரூபாயில் தொடங்குகிறது (எக்ஸ் ஷோரூம் விலையில்). என்னாது கார் எரிபொருளுக்கு மட்டும் இவ்வளவு செலவா.. புதுச்சேரி அமைச்சர்களின் செலவால் … Read more