‘அதிமுக அலுவலகம் சூறை’ வழக்குகள் இப்போது சிபிசிஐடி வசம்: தமிழக அரசு புதிய தகவல்

சென்னை: அதிமுக தலைமை அலுவலம் சூறையாடப்பட்டது தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள 4 வழக்குகளையும் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி சண்முகம் தாக்கல் செய்த மனுவில், “கடந்த ஜூலை 11-ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் நடந்தது. அப்போது ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்திற்குள் புகுந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது … Read more

மும்பையில் உறியடி நிகழ்ச்சியில் தவறிவிழுந்த இளைஞர் உயிரிழப்பு

மும்பை: மும்பையில் உறியடி நிகழ்ச்சியில் மனித கோபுரத்தில் இருந்து தவறிவிழுந்து காயமடைந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக உறியடி நிகழ்ச்சி நடத்துவது நாட்டில் வழக்கமாக உள்ளது. மகாராஷ்டிராவில் ‘தகி ஹண்டி’ என்ற பெயரில் உறியடி விழா கொண்டாடப்படுகிறது. அதிக உயரத்தில் உறியில் கட்டப்பட்டுள்ள பானையை உடைப்பதற்காக இளைஞர்கள் மனித கோபுரம் அமைத்து மேலே செல்வார்கள். இந்நிலையில் மும்பையில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை நடந்த உறியடி விழா ஒன்றில் சந்தேஷ் தல்வி … Read more

சாதித்தது ஜெர்மனி… சுற்றுச்சூழலுக்கு தீங்கு இழைக்காத உலகின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவை தொடக்கம்

பெர்லின்: சுற்றுச்சூழலுக்கு உகந்த ரயில்கள் எதிர்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன என்ற செய்தியை நீங்கள் படித்திருப்பீர்கள். அத்தகைய முன்னெடுப்பில்தான் ஜெர்மனி இறங்கியுள்ளது. ஆம், உலகிலேயே ஹைட்ரஜன் எரிபொருள் மூலம் இயங்கும் பயணிகள் ரயில் சேவையை முதல்முறையாக ஜொ்மனி தொடங்கியுள்ளது. ஜெர்மனியின் லோயர் சாக்சோனியில் புதன்கிழமை அத்திட்டம் தொடங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து லோயர் சாக்சோனியில் இயங்கி வந்த 14 டீசல் ரயில்களுக்கு மாற்றாக ஹைட்ரஜன் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அல்ஸ்டாம் நிறுவனம், எல்பே-வெசர் ரயில்வே ஆகியவை இணைந்து சுற்றுச்சூழலுக்கு தீங்கு செய்யாத … Read more

நம்பி நாராயணனை மிகைப்படுத்தி காட்டியது ‘ராக்கெட்ரி’ – முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானிகள் பரபரப்பு பேட்டி

விண்வெளி திட்டத்தில் முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் தனிநபர் பங்களிப்பு தொடர்பான சில கூற்றுகளுக்கு, அவருடன் பணியாற்றிய முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். அண்மையில் நம்பி நாராயணனின் வாழ்க்கை கதையை மையமாக கொண்டு ‘ராக்கெட்ரி: தி நம்பி விளைவு’ என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது. இதில் விஞ்ஞானி நம்பி நாராயணன் கதாபாத்திரத்தில் நடிகர் மாதவன் நடித்திருந்தார். அந்தப் படத்தில் இஸ்ரோ பயன்படுத்தி வரும் கிரையோஜெனிக் புரோபல்ஷன் (Propulsion) தொழில்நுட்பத்தில் நம்பி நாராயணின் பங்களிப்பு குறித்து … Read more

தமிழகம், புதுச்சேரியில் அடித்து வெளுக்கும் கனமழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் இன்று 15 மாவட்டங்களுக்கும் மேல் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பில், “தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (25.08.2022) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், டெல்டா மாவட்டங்கள் … Read more

‘ஒரு லைட் கூட மாற்ற முடியல, நாங்க வேணா எழுந்து போய்டவா’ – மாநகராட்சிக் கூட்டத்தில் திமுக கவுன்சிலர் புலம்பல்

தாம்பரம் மாநகராட்சியில் திமுக கவுன்சிலர்களே புலம்பும் அவல நிலை நீடித்து வருகிறது. தாம்பரம் மாநகராட்சி, பம்மல் அலுவலகத்தில் மண்டலம் 1ல் இன்று மண்டல குழு கூட்டம் நடைபெற்றது. இதில், மண்டலக் குழுத் தலைவர் வே.கருணாநிதி தலைமைத் தாங்கினார்.  இதில் தாம்பரம் மாநகராட்சி துணை மேயர் காமராஜ் உள்ளிட்ட அனைத்து மாமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். பொதுவாக அந்தந்த மாமன்ற உறுப்பினர்கள் தங்களது பகுதிகளுக்கான கோரிக்கைகளை இக்கூட்டத்தில் முன்வைப்பது வழக்கம்.  அந்த வகையில், மண்டல குழு கூட்டத்தில் பேச … Read more

பரந்தூர் விமான நிலையம் அமைய 12 கிராமங்கள் எதிர்ப்பு: அன்புமணியின் கருத்து கேட்பு கூட்டத்தால் மேலும் சலசலப்பு…

சென்னை: சென்னையின் 2வது விமானநிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த  விமான நிலையம் அமைய 12 கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், பாமகவும் களத்தில் இறங்கி, இன்று கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தியது, இந்த விவகாரத்தில் மேலும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. பரந்தூரில் விமான நிலையம் அமைவதை பாமக ஏற்காது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறி உள்ளார். இதனால் இந்த விவகாரம் மேலும் சூடுபிடித்து … Read more

100 அடி ரோடு முதல் அரும்பார்த்தபுரம் வரை முடங்கிய புறவழிச்சாலை திட்டம் புத்துயிர் பெறுகிறது; ரூ.26 கோடியில் விரைவில் பணிகள் துவக்கம்

புதுச்சேரியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நெரிசலை கட்டுப்படுத்த போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கின்றனர். இருப்பினும், நிரந்தர தீர்வு கிடைத்தபாடில்லை. நகரப்பகுதி முதல் கிராமம் வரை பெரும்பாலான இடங்களில் சாலைகள் விரிவுபடுத்தப்படாமல் குறுகியதாக உள்ளது. இதனால் அண்ணா சாலை, நேரு வீதி, மிஷன் வீதி, புஸ்சி வீதி, உப்பளம் சாலை, காமராஜர் சாலை, வழுதாவூர் சாலை மற்றும் புதுச்சேரி-விழுப்புரம் சாலை என முக்கிய சாலைகளில் காலை, மாலை நேரங்களில் … Read more

ஜூலை 11-ல் நடந்த அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற அமர்வு

சென்னை: ஜூலை 11-ல் நடந்த அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் தீர்ப்பை உயர்நீதிமன்ற அமர்வு ஒத்திவைத்தது. அதிமுக பொதுக்குழு கூட்டம் முறைப்படி கூட்டப்படவில்லை என பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் வாதிட்டார்.

மூழ்கிய நெற்பயிர்கள்..பொதுப் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் படகு!: தொடர் கனமழையால் ஒடிசாவின் பூரி மாவட்டம் கடும் பாதிப்பு..திணறும் மக்கள்..!!

பூரி: இந்தியாவின் கிழக்கு மாநிலமான ஒடிசாவில் கடந்த 2 வாரங்களுக்கு மேலாக பெய்த தொடர் கனமழை காரணமாக பூரி மாவட்டம் கடும் பாதிப்பை சந்தித்திருக்கிறது. இதனால் பல ஆயிரம் பேர் பெரும் பாதிப்பை சந்தித்திருக்கிறார்கள். பூரியில் உள்ள பிப்லி தாலுக்காவில் எங்கு பார்த்தாலும் முழங்கால் அளவு மழைநீர் தேங்கியுள்ளது. பல ஆயிரம் வீடுகள் வெள்ளத்தால் சூழப்பட்டிருக்கின்றன. மக்கள் பொது இடத்தில் சமையல் செய்து சாப்பிடுகின்றனர். போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டிருப்பதால் மக்கள் படகுகளை பயன்படுத்தி வருகின்றனர். மறுபுறத்தில் அறுவடைக்கு … Read more