'பாஜகவின் கனவு ஒருபோதும் பலிக்காது!' – குமரியில் கெத்து காட்டிய ராகுல் காந்தி!

பாஜகவின் கனவு எப்போதும் பலிக்காது என, ராகுல் காந்தி தெரிவித்து உள்ளார். கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை சுமார் 3,500 கி.மீ. தூரத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் நடைபயணம் செல்கிறார். இதற்காக தமிழகம் வந்துள்ள ராகுல் காந்தி காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தந்தை ராஜிவ் காந்தி நினைவிடத்தில் இன்று காலை மலர் தூவி மரியாதை செலுத்தினார். மாலையில் கன்னியாகுமரி வந்த ராகுல் காந்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். … Read more

பிறந்த நாள் அன்று நேர்ந்த துயரம் – தீயில் கருகி மாணவன் பலி

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் மதுரையில் இருந்து கோயம்புத்தூர் சென்ற அரசு பேருந்து ஒட்டன்சத்திரம் மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்த போது ஒட்டன்சத்திரத்தில் இருந்து திண்டுக்கல் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்ற பள்ளி மாணவர்கள் மூன்று பேர் அரசு பேருந்து மீது மோதியதில் இருசக்கர வாகனம் தீப்பிடித்து பேருந்தில் தீ பரவியது. இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற அண்ணாநகர் பகுதியை சேர்ந்த அரசு ஊழியர்க ஜெயபால் என்பவருடைய மகன் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் பிரவீன் ஒட்டன்சத்திரம் தனியார் பள்ளியில் … Read more

“நான் நன்றிகெட்டவன் இல்லைன்னு நானே நிரூபிக்க வேண்டியிருக்கு!” – மனம் திறக்கும் கருணாஸ்

ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின், அரசியலிலிருந்து ஒதுங்கியதுடன் சினிமாவில் முழுக்கவனம் செலுத்திவருகிறார் கருணாஸ். கதை நாயகனாக ‘ஆதார்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ள கருணாஸிடம் பேசினேன். குடும்பத்தினருடன் கருணாஸ் என்ன சொல்றாங்க உங்க மனைவி கிரேஸ்? ”கிரேஸ் என்னோட பலம். கணவன் ஒரு தோல்வி, ஒரு அப்செட், ஒரு தொய்வில் இருக்கும்போது, மனைவி அவனுக்கு ஆறுதலா இருக்கணும். இந்த மாதிரி நேரங்கள்ல கிரேஸ் எனக்கு நூறு சவரன், இருநூறு சவரன் நகைன்னாலும் அடகுவைக்க எடுத்துக் கொடுப்பாங்க. அந்த நகைகளை … Read more

நெல்லையில் நாளை ரூ.330 கோடி மதிப்பிலான நலத்திட்ட பணிகளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

நாகர்கோவில்: 3நாள் பயணமாக தென்மாவட்டங்களுக்கு  சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கன்னியாகுமரியில், ராகுல்காந்தியின் நடை பயணத்தை தொடங்கிய நிலையில், நாளை திருநெல்வேலியில்,  ரூ.330 கோடியில் நலத்திட்டங்களை தொடங்க்கி வைக்கிறார்.  இன்று குமரியில் இருந்து நெல்லை திரும்பும் முதல்வர், இரவு நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். அதைத்தொடர்ந்து, நாளை காலை நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மைதானத்தில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கிறார். இந்த விழாவில்  முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்டப்பணிகளுக்கு … Read more

புதிய பிரித்தானிய அமைச்சரவையில் ஒரு இலங்கை வம்சாவளியினர்: சில சுவாரஸ்ய தகவல்கள்…

லிஸ் ட்ரஸ் தலைமையிலான புதிய அமைச்சரவையில் ரணில் ஜெயவர்தன என்னும் ஒரு இலங்கை வம்சாவளியினர் இடம்பெற்றுள்ளார். அவரது தந்தை 1978ஆம் ஆண்டு பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்துள்ளார்.   லிஸ் ட்ரஸ் தலைமையிலான புதிய அமைச்சரவையில் ஒரு இலங்கை வம்சாவளியினரும் இடம்பெற்றுள்ளார். அவரது பெயர், ரணில் ஜெயவர்தன (Ranil Malcolm Jayawardena, 36). ரணில், சுற்றுச்சூழல், உணவு மற்றும் கிராமப்புற விவகாரங்கள் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். லண்டனில் பிறந்த ரணிலைக் குறித்து சில சுவாரஸ்ய தகவல்கள் உள்ளன. ரணிலின் தந்தையாகிய நளின் … Read more

ஆழியார்-வால்பாறை சாலையில் குட்டியுடன் உலா வரும் தாய் யானை: வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை

ஆனைமலை: பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் அணை, நவமலை, கவியருவி உள்ளிட்ட பகுதிகளை ஒட்டி உள்ள வனத்தில் காட்டு யானைகள், சிறுத்தை, மான்கள், வரையாடுகள் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. வனப்பகுதியை ஒட்டி ஆழியார் அணை அமைந்துள்ளதால், ஏராளமான வனவிலங்குகள் மாலை மற்றும் காலை நேரங்களில் தண்ணீர் தேடி அணை கரைக்கு வந்து செல்வது வழக்கம். அணை ஒட்டிய பகுதிகளில் வனவிலங்குகளை காண சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது, கடந்த சில தினங்களாக ஆழியார்-வால்பாறை சாலை, … Read more

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை  கோயம்பேடு, தரமணி, மதுரவாயல், வானகரம், நெற்குன்றம், வளசரவாக்கம், ராமாபுரம், போரூர், பெருங்குடி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

போதை பார்ட்டியில் கலந்து கொண்ட மறைந்த நடிகையின் மகளுக்கு மிரட்டல்: போலீஸ் பாதுகாப்புக்கு ஆணையம் பரிந்துரை

பஞ்ச்குலா: கோவா போதை பார்ட்டியில் கலந்து கொண்டு இறந்த நடிகை சோனாலி போகத்தின் மகளுக்கு மிரட்டல் வந்துள்ளதால், அவருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. பாஜக மகளிரணி தலைவரும், நடிகையுமான சோனாலி போகத் கடந்த சில வாரங்களுக்கு முன் கோவாவில் நடந்த பார்ட்டியில் மர்மமான முறையில் இறந்தார். அவரது மறைவு குறித்து சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மறைந்த சோனாலி போகத்தின் கணவர் கடந்த 2016ம் ஆண்டு இறந்தார். இந்த தம்பதிகளின் மகள் யசோதரா, … Read more

மொத்தமாக இறந்துகிடந்த ஆடுகள்.. வெறிநாய் கடியால் நிகழ்ந்த கொடூரம் – விவசாயி வேதனை!

உச்சிப்புளி அருகே வெறிநாய் கடித்ததில் 32 ஆடுகள் உயிரிழந்தன.  ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அடுத்த கல்கிணற்று வலசை சேர்ந்த அர்ஜுன் என்பவர் 50-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வந்தார். இந்த நிலையில் ஆடுகளை தொழுவத்தில் அடைத்து விட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டு இன்று காலை திரும்பி வந்துள்ளார். அப்போது அங்கு சென்று பார்த்தபோது நான்கு வெறிநாய்கள் கடித்ததில் 32 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்து கிடந்தன. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி … Read more

’நான் பாகிஸ்தானில்தான் இருக்கேன்’-1981ல் இந்தியன் ஏர்லைன்ஸை கடத்தியவர் வெளியிட்ட போட்டோ!

இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த கஜிந்தர் பால் சிங், தாம் பாகிஸ்தானில் இருக்கும் புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.  கடந்த 1981ஆம் ஆண்டு டெல்லியிலிருந்து அமிர்தசரஸ் வழியாக சுமார் 111 பயணிகளுடன் ஸ்ரீநகருக்கு செல்லவிருந்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம், காலிஸ்தான் ஆதரவாளர்களால் பாகிஸ்தானின் லாகூருக்கு கடத்தப்பட்டது. இதையடுத்து பாகிஸ்தான் இராணுவத்தினர் கடத்தலில் ஈடுபட்ட கஜிந்தர் பால் சிங், சத்னம் சிங் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர். மேலும், பயணிகளையும் பத்திரமாக மீட்டனர். இது … Read more