நம்ப முடிகிறதா?..ரூ.2 கோடியில் பொன்னியின் செல்வன் தயாரிப்பு..33 ஆண்டுகளுக்கு முன் கமல் அளித்த பேட்டி

சென்னை: பொன்னியின் செல்வன் டிரெய்லர் வெளியாகிய நேரத்தில் பொனியின் செல்வனை எடுக்க கமல்ஹாசன் எடுத்த முயற்சிகள் குறித்த பழைய பேட்டி வைரலாகி வருகிறது. எம்ஜிஆர் பெரும் முயற்சி எடுத்து முடியாமல் போன பொன்னியின் செல்வன் கதையை தயாரிக்க கமல் முயற்சி எடுத்தார். ஆனால் அதுவும் முடியாமல் போனது. கமல் மணிரத்னம், இளையராஜா, பி.சி.ஸ்ரீராம் இணைந்து உருவாகவிருந்த பொன்னியின் செல்வன் குறித்து 30 ஆண்டுகளுக்கு முன் கமல் பேட்டி அளித்துள்ளார். பொன்னியின் செல்வன் எம்ஜிஆர் எடுத்த பெரும் முயற்சி … Read more

அங்கேயும் வேலையை காட்டிய சீன நிறுவனங்கள்.. கடுப்பான பங்களாதேஷ்.. என்ன தான் பிரச்சனை!

சமீப மாதங்களாகவே இந்தியாவில் அடுத்தடுத்து சீன நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்து அதன் மூலம், பல கோடி ரூபாய் ஏமாற்றியதாக வருமான துறை சோதனை மூலம் தெரிய வந்தது. இந்த சோதனை மூலம் பல முக்கிய ஆவணங்கள், கணக்கில் காட்டப்படாத ஆவணங்கள் பலவும் கண்டு பிடிக்கப்பட்டன. இப்படி அடுத்தடுத்து இந்தியாவில் சிக்கி வரும் சீன நிறுவனங்கள் இந்தியாவில் மட்டும் அல்ல, பற்பல நாடுகளிலும் இதே பிரச்சனையில் சிக்கத் தொடங்கியுள்ளன. அமெரிக்க பங்கு சந்தையில் தணிக்கையில் பிரச்சனை என … Read more

ரிப்பன் கட் செய்யும் போதே சரிந்துவிழுந்த பாலம்! – மயிரிழையில் உயிர் பிழைத்த தலைவர்கள்

மேம்பாலங்களை கட்டுவதில் பல பரிணாமத்தில் முன்னேறிவிட்ட உலக நாடுகள் மத்தியிலும், மூன்றாம் தர நாடுகளில் கட்டப்படும் பாலங்கள் இன்றளவும் நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருப்பதில்லை என்பதற்கு உதாரணமாக காங்கோ நாட்டில் ஓர் சம்பவம் நடந்துள்ளது.  மேலும் படிக்க | பரிசல் ஓட்டி பள்ளிக்கூடத்துக்கு போகும் பிஞ்சுகள்- கிருஷ்ணகிரியில் ஓர் தண்ணீர் தீவு! காங்கோவில் புதிதாக கட்டப்பட்ட பாலம் திறப்பு விழாவின் போதே சரிந்துவிழுந்த அவலம் நிகழ்ந்துள்ளது. இந்தக் காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. … Read more

சூதாட்டத்திற்கு ஸ்டாலின் அரசு துணை போகிறது: திருச்சியில் இ.பி.எஸ் பேட்டி

திண்டுக்கல்லில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி, சென்னை செல்வதற்காக திருச்சி விமான நிலையம் வந்தார். திருச்சி மாவட்ட எல்லையான வையம்பட்டியில்,500க்கும் மேற்பட்ட அதிமுகவினர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளித்து விமான நிலையம் வரை வந்து வழியனுப்பினர். விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: “அதிமுக பொதுக்குழு தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றுள்ளனர். நாங்களும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளோம் என்றார். திமுக ஆட்சியில் உள்ளாட்சி தேர்தல் எப்படி … Read more

தனிநபர்கள் வாங்கிய கடன்கள்: முதல் இடத்தில் எந்தக் கடன் தெரியுமா?

தனிநபர் கடன்கள்..! வீட்டுக் கடனுக்கு அடுத்தபடியாக தனிநபர் கடன்கள் மற்றும் ஃபிக்சட் டெபாசிட்டுகள் மேல் வழங்கப்படும் கடன்கள் அதிக அளவில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஒரு வருடத்தில் வங்கிகள் மிக அதிக அளவில் தனிநபர் கடன்கள் வழங்கியுள்ளது. Loan (Representational Image) வீட்டுக் கடன்: பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள்… எதைத் தேர்வு செய்வது? சென்ற ஒரு வருடத்தில் தனி நபர் கடன்களின் வளர்ச்சி 16.5% அளவில் உள்ளது. இதே காலகட்டத்தில் வீட்டு கடன்களின் வளர்ச்சி 5% … Read more

நீட் தேர்வு முடிவுகள் | மாணவர்களைக் கடிந்து கொள்ள வேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள்

சென்னை: “நீட் தேர்வெழுதிய உங்கள் குழந்தைகள் மருத்துவப் படிப்பிற்கு தேர்வாகவில்லை என்றால் அவர்களைக் கடிந்து கொள்வது போன்ற விஷயங்களைப் பெற்றோர் தவிர்க்க வேண்டும்” என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள சந்தையை ஆய்வு செய்த பின்னர், தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ” பெற்றோர்களுக்கு ஒரு வேண்டுகோள். நீங்கள் விரும்பியது போல, உங்கள் குழந்தைகள் மருத்துவப் படிப்பிற்கு … Read more

பெங்களூரு நிலவரம் | தொடரும் மழை, குடிநீர் தட்டுப்பாடு கூடவே கொள்ளை லாபம் பார்க்கும் விடுதிகள்

பெங்களூரு: வரலாறு காணாத மழையால் பெங்களூரு மாநகரமே வெள்ளத்தில் மிதக்கிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் செவ்வாய் இரவு வரை விடிய, விடிய கனமழை கொட்டித் தீர்த்ததால் தேங்கிய மழை நீரே இன்னும் வடியாத நிலையில் இன்னும் மழை தொடரும் என்ற அறிவிப்பு பெங்களூருவாசிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இருப்பினும் பெங்களூருவில் பல்வேறு பகுதிகளிலும் இன்று காலை வெள்ள நீர் கணிசமாக வடிந்ததால் ஒருசில பகுதிகளில் போக்குவரத்து சற்று இயல்புக்குத் திரும்பும் சூழல் உருவாகியுள்ளது. இருப்பினும் இன்னும் மழை … Read more

இந்தியா மற்றும் சீனாவுடன் உறவை மேம்படுத்தும் வெளியுறவு கொள்கை: ரஷ்ய அதிபர் புதின் ஒப்புதல்

மாஸ்கோ: சீனா, இந்தியா, மத்திய கிழக்கு நாடுகள், லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளுடன் உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில், தயாரிக்கப்பட்ட வெளியுறவு கொள்கைக்கு ரஷ்ய அதிபர் புதின் ஒப்புதல் அளித்துள்ளார். உக்ரைன் மீது போர் தொடுத்ததால் ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடை விதித்தன. இந்தியா நடுநிலை வகித்தது. இதே போல் சீனா, மத்திய கிழக்கு நாடுகள், லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் ரஷ்யாவின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இந்நிலையில் … Read more

ஸ்டாலினுக்கு விமானத்தில் சர்ப்ரைஸ் கொடுத்த பெண்… அப்படியே கொட்டிய 90ஸ் வசனங்கள்…!

தமிழக முதல்வர் இன்றைய தினம் விமானத்தில் பயணித்த போது நடந்த நிகழ்வு மிகுந்த சுவாரஸியத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரியில் ராகுல் காந்தியின் நடைபயணத்தை தொடங்கி வைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டு சென்றுள்ளார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு சென்றார். அவருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, திமுக எம்.பி டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் சென்றனர். விமான பயணத்தின் போது தனது இருக்கையில் அமர்ந்திருந்த போது முதல்வர் மு.க.ஸ்டாலின் அருகில் பெண் ஒருவர் வந்தார். அவர் வங்கி … Read more

கவர்னர் அனுப்பிய அவதூறு நோட்டீஸ்: தாறுமாறாக கிழித்த ஆம் ஆத்மி எம்பி!

டெல்லி துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா அனுப்பிய அவதூறு நோட்டீசை, ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் கிழித்து எறிந்தார். டெல்லியில், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநில அரசுக்கும், துணை நிலை ஆளுநருக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தமாகவே இருக்கிறது. முன்னாள் துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் – ஆம் ஆத்மி அரசு இடையே கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு விவகாரங்களில் முரண்பாடு … Read more