ராணுவ தளபதிக்கு நேபாளத்தில் கவுரவம் | Dinamalar

காத்மாண்டு:இந்திய ராணுவ தளபதிக்கு, நேபாள நாட்டின் கவுரவ ராணுவ தளபதி பட்டம் வழங்கப்பட்டது. ராணுவ தளபதி மனோஜ் பாண்டே, ஐந்து நாள் அரசு முறைப் பயணமாக நம் அண்டை நாடான நேபாள தலைநகர் காத்மாண்டுவுக்கு நேற்று முன் தினம் வந்தார்.இங்கு, இரு நாடுகளுக்கும் இடையேயான ராணுவ ஒத்துழைப்பு குறித்து நேபாள ராணுவ உயர் அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை நடத்துகிறார். முன்னதாக, நேபாள ராணுவத்துக்கு வாகனங்கள், பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்டவற்றை மனோஜ் பாண்டே வழங்கினார்.இதையடுத்து, அந்நாட்டின் பிரதமர் பித்யா … Read more

’என்னப்பா ஒன்னுமே புரியல’..மணிரத்னத்தை சமாளிக்க கமலிடம் ஆலோசனை..ரஜினி சொன்ன தளபதி பட சுவாரஸ்ய தகவல்

சென்னை: பொன்னியின் செல்வன் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியது பெரிய ஹைலைட் ஆக அமைந்தது. முழு அரங்கத்தையும் அவரே ஆக்கிரமித்துக்கொண்டார். தளபதி படத்தில் நடிக்கும் பொழுது இயக்குனர் மணிரத்தினத்தின் அங்கீகாரத்தை பெற தான் போராடியதை நகைச்சுவையாக பல இடங்களில் அவர் குறிப்பிட்டார். மணிரத்தினத்தை சமாளிக்க கமல்ஹாசனிடம் தான் எவ்வாறு ஆலோசனை கேட்டேன் என்பதை பற்றி அவர் சுவாரஸ்யமாக பேசினார். சுவாரஸ்ய பேச்சால் அரங்கை தன் வசப்படுத்திய ரஜினி எம்ஜிஆர், கமல் முதல் பலரது ஆசையாக, … Read more

சோமேட்டோ, ஸ்விக்கி-க்கு கடும் எதிர்ப்பு.. ஹோட்டல் உரிமையாளர்கள் வைத்த செக்..!

இந்தியாவில் ஒவ்வொரு துறையிலும் டிஜிட்டல் சேவை நிறுவனங்கள் பெரிய அளவிலான ஆதிக்கம் செலுத்தி வருகிறது, கட்டுமான பொருட்கள் முதல் காண்டம் விற்பனை வரையில் ஈகாமர்ஸ் மற்றும் டிஜிட்டல் சேவைகள் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்திய உணவு சந்தையை ஏற்கனவே சோமேட்டோ மற்றும் ஸ்விக்கி ஆதிக்கம் செய்து வரும் நிலையில் தற்போது உணவகங்களின் நேரடி வர்த்தகத்திலும் இவ்விரு நிறுவனங்கள் நுழைய உள்ளது. இதனால் உணவகங்கள் இனி சோமேட்டோ, ஸ்விக்கி ஆகிய இரு நிறுவனங்களை மட்டுமே நம்பியிருக்கும் நிலை உருவாகியுள்ளது, … Read more

சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான மழை வீழ்ச்சி

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு ,தேசியவளி மண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப்பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 செப்டம்பர்07ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு2022 செப்டம்பர்07ஆம் திகதிஅதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது நாட்டின் சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும்வடமேல் மாகாணங்களில் பலதடவைகள்மழை பெய்யும்என எதிர்பார்க்கப்படுகின்றது.சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, களுத்துறை,காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை … Read more

மாநில கல்வி கொள்கை விரைவில் வெளியீடு: அமைச்சர் பொன்முடி தகவல்

சென்னை: தமிழ்நாட்டுக்கான மாநில கல்விக் கொள்கை வடிவமைப்புப் பணிகள் துரிதமாக முடிக்கப்பட்டு, விரைவில் மாநில கல்விக் கொள்கை வெளியிடப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்தார். சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் பொன்முடி, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் அதிக அளவில் உயர்கல்வி நிறுவனங்கள் இருப்பதற்கு, திராவிட மாடல் ஆட்சிதான் காரணம். தமிழகத்தில் தற்போதைய காலத்துக்கேற்ப பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டு வருகின்றன. மேலும், மாணவர்களும் தங்கள் துறை சார்ந்த பல்வேறு … Read more

பின் சீட்டில் இருந்தாலும் கார் சீட் பெல்ட் போடுங்க; இல்லாவிட்டால் ரூ.1000 ஃபைன் தாங்க!

புதுடெல்லி: காரின் பின் இருக்கையில் அமர்பவர்களும் சீட் பெல்ட் அணிவது கட்டாயம். அவ்வாறு அணியாதவர்களுக்கு விரைவில் ரூ.1000 அபராதம் வசூலிக்கும் திட்டம் அமலுக்கு வரும் என்று மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். கடந்த ஞாயிறு அன்று மும்பையில் கார் விபத்தில் டாடா சன்ஸ் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி உயிரிழந்தார். சைரஸ் மிஸ்திரி ஞாயிற்றுக்கிழமை அன்று அகமதாபாத்திலிருந்து மும்பைக்கு பென்ஸ் காரில் திரும்பிக் கொண்டிருந்தார். முன் இருக்கையில், மும்பையைச் சேர்ந்த மருத்துவர் அனாஜிட்டா பண்டோலும் … Read more

தென் மாவட்டங்களை சுற்றி வரும் முதல்வர் ஸ்டாலின்: பயணத் திட்டம் என்ன?

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் நடைபயணத்தை கன்னியாகுமரியில் இன்று (செப்டம்பட் 7) மாலை முதல்வர் தொடங்கிவைக்கிறார். பாரத் ஜூடோ யாத்திரை (Bharat Jodo Yatra) என்ற பெயரில் கன்னியாகுமரியில் இன்று தொடங்கும் பாத யாத்திரை 12 மாநிலங்கள் வழியாக ஜம்மு காஷ்மீரில் நிறைவு பெறுகிறது. சுமார் 3,500 கிலோமீட்டர் தூரத்தை 150 நாட்களில் கடக்க திட்டமிட்டுள்ளனர். இதன் தொடக்க நிகழ்வில் பங்கேற்பதற்காக இன்று காலை முதல்வர் தூத்துக்குடிக்கு விமானத்தில் செல்கிறார். அங்கிருந்து சாலை மார்க்கமாக கன்னியாகுமரி செல்கிறார். … Read more

2024 தேர்தலுக்கு தயாராகும் பாஜக..?- அமித்ஷா தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம்..!

அமித்ஷா தலைமையில் பாஜக உயர்மட்ட குழு கூட்டம் இன்று நடைபெற்றுள்ளது. எதிர்க்கட்சி முகாமில் பரபரப்பான செயல்பாடுகளுக்கு மத்தியில் 2024 பொதுத் தேர்தலுக்கான திட்டத்தை பாஜக உருவாக்கத் தொடங்கியுள்ளது. டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் இன்று உயர்மட்ட கூட்டம் நடைபெற்றது. 2019 ஆம் ஆண்டில் 543 மக்களவைத் தொகுதிகளில் 303 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. முதல் முறையாக ஒரு கட்சி தனித்துப் பெரும்பான்மை பெற்றது. இந்த நிலையில் 100க்கும் மேற்பட்ட இடங்களை எதிர்க்கட்சிகள் வென்றன. அதில் காங்கிரஸ் … Read more

வைரலாகும் திருமணத்தில் வைத்த பேனர்! என்ன எழுதி இருக்காங்கனு பாருங்க!

திருமணம் உள்ளிட்ட வீட்டில் எந்த விஷேசம் நடந்தாலும் பேனர் அடிக்கும் கலாசாரம் தமிழகத்தில் பல ஆண்டுகளாக வழக்கதில் உள்ளது. சிலர் அவர்களுக்கு பிடித்த நடிகர், நடிகைகள் படங்களை, அவர்களுக்கு பிடித்த கடவுள் படங்களை, ஏன் அரசியல் கட்சித் தலைவர்களின் படங்களை வைத்தும் பேனர் அடிப்பார்கள்.  கடந்த சில ஆண்டுகளாக பேனரில் எழுதப்படும் வசனம் பலரது கவனத்தை ஈர்க்க வேண்டும் என வித்தியாச வித்தியாசமான வசனங்களை எல்லாம் போடுவார்கள். அதிலும் கட் அவுட்டுகளில் மணமக்களின் நண்பர்களின் மனக்கோட்டைகளில் மலர்ந்த … Read more