`நாடக உலகின் இமயமலை’ சங்கரதாஸ் சுவாமிகளின் பிறந்த தினம்!

நாடக உலகின் இமயமலை என்று கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனால் வர்ணிக்கப்பட்ட சங்கரதாஸ் சுவாமிகளின் பிறந்த நாள் இன்று. `தமிழ் நாடகக் கலையின் தந்தை’ என்றழைக்கப்படும் அளவுக்கு, தமிழ் நாடகக் கலையின் வளர்ச்சியை சங்கரதாஸ் சுவாமிகளுக்கு முன் அவரது காலத்துக்குப் பின் என பிரித்துப் பார்க்கும் அளவுக்கு தமிழ் நாடகங்களில் அவரது பங்களிப்பு மகத்தானது. தூத்துக்குடியை அடுத்துள்ள காட்டுநாயக்கன்பட்டியில் 1867ஆம் ஆண்டு இதே நாளன்று பிறந்த சங்கரதாஸ் சுவாமிகள், நாடக நடிகராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். நாடகத்தில் நடிக்க நடிப்பும், … Read more

“மாட்டுகறி” நல்லது! திரண்ட பஜ்ரங்தள்.. திகைத்த ரன்பீர்-ஆலியா ஜோடி – உஜ்ஜைன் கோயிலுக்கு விடக்கூடாதாம்

India oi-Noorul Ahamed Jahaber Ali போபால்: மாட்டுக்கறி சாப்பிடுவது நல்லது என்று கருத்து கூறியதற்காக பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் அவரது மனைவியும் நடிகையுமான ஆலியா பட் ஆகியோர் மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் கோயிலுக்குள் செல்ல பஜ்ரங்தள் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பாலிவுட்டில் பிரபல நடிகராக இருப்பவர் ரன்பீர் கபூர். இவர் பிரபல நடிகை ஆலியா பட்டை கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில் ரன்பீர் கபூர் … Read more

வந்தியத்தேவனாக நடிக்க ஆசைப்பட்டேன்..பொன்னியின் செல்வன் இசைவெளியீட்டு விழாவில் கமல் பேச்சு!

சென்னை : பெரும் பொருட்செலவில் உருவாகி உள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இசை வெளியீட்டுக்காக பிரமாண்ட செட்டுகள் போடப்பட்டு, செண்டை வாத்தியங்கள் முழங்க, சிவப்பு கம்பள விரிப்பில் நடிகர்கள் அரங்குக்கு வந்தனர். நடிகர் ரஜினிகாந்த், கமல் ஹாசன் சிறப்பு விருந்தினர்களாக இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டனர். நடிகர் கமல்ஹாசன் பொன்னியின் செல்வன் டிரைலரை வெளியிட்டார். எம்ஜிஆரின் ஆசை பின்னர் … Read more

ஆள விடுங்க.. இப்போதைக்கு உணவு, குரோசரி டெலிவரி கிடையாது.. டெலிவரி நிறுவனங்கள் கைவிரிக்கிறதா?

பெங்களூர்: கடந்த சில தினங்களாகவே வெள்ளத்தில் மிதந்து வரும் டெக் சிட்டியான பெங்களூரில், ஒரே நாள் இரவில் 130 மிமீ மழை கொட்டி தீர்த்ததால் பல இடங்கள் வெள்ளக் காடாக மாறியுள்ளன. மக்கள் வாகனங்களில் செல்ல முடியாமல் டிராக்டர்களில் பயணம் செய்து வருவதையும் பார்க்க முடிகிறது. குறிப்பாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் வீடுகளிலேயே முடங்கும் நிலை இருந்து வருகின்றது. ஏற்கனவே பல ஐடி நிறுவனங்கள் வீட்டில் இருந்து … Read more

பாரத் ஜோடோ யாத்ரா: இன்று தொடங்குகிறார் ராகுல் காந்தி… ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை `பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற இந்திய ஒற்றுமை பயணத்தை, இன்று மாலை 4 மணிக்கு கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபம் முன்பு இருந்து தொடங்குகிறார். அதை முன்னிட்டு, இன்று காலை தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனது தந்தையும், முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தியின் நினைவிடத்துக்குச் சென்றார். நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செய்த ராகுல் அங்கு மரக்கன்று ஒன்றையும் வைத்தார். இந்த யாத்திரை … Read more

பாரத் ஜோடோ யாத்ரா | ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் நினைவிடத்தில் ராகுல் காந்தி அஞ்சலி

ஸ்ரீபெரும்புதூர்: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அகில இந்திய அளவில் கட்சியை பலப்படுத்தவும், தொண்டர்களை உற்சாகமடையச் செய்யவும் ‘பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொள்கிறார். இதற்காக தமிழகம் வந்த அவர் இன்று காலை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்துக்கு வந்தார். அங்கு அவர் தந்தை ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் அங்கு தந்தையின் புகைப்படத்தின் முன் அமர்ந்து வீணை காயத்ரியின் இசை அஞ்சலி நிகழ்ச்சியில் … Read more

கர்நாடக உணவுத் துறை அமைச்சர் உமேஷ் கட்டி மாரடைப்பால் மரணம்: முதல்வர் பசவராஜ் இரங்கல்

பெங்களூரு: கர்நாடகா மாநிலம் உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் உமேஷ் கட்டி மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 61. அவரது மறைவு மாநிலத்திற்கு பெரிய இழப்பு என்று முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். முன்னதாக நேற்றிரவு (செவ்வாய் இரவு) டாலர்ஸ் காலனியில் உள்ள தனது வீட்டில் இருந்த அமைச்சர் உமேஷ் பட்டீல் நெஞ்சு வலிப்பதாகக் கூறியுள்ளார். உடனே குடும்பத்தினர் அவரை ராமைய்யா மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர் உயிர் பிரிந்தது. அவரைப் … Read more

டி.ஐ. க்ளீன் மொபிலிட்டி நிறுவனம் சார்பில் மோன்ட்ரா எலெக்ட்ரிக் 3W ஆட்டோ அறிமுகம்

சென்னை: முருகப்பா குழுமத்தைச் சேர்ந்த டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் துணை நிறுவனமான டிஐ க்ளீன் மொபிலிட்டி நேற்று சென்னையில் மோன்ட்ரா எலெக்ட்ரிக் 3Wஆட்டோவை அறிமுகப்படுத்தியது. சென்னை, அம்பத்தூரில் உள்ள டிஐ க்ளீன் மொபிலிட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட இந்த ஆட்டோ விற்பனையை நாடு முழுவதும் பல்வேறு கட்டங்களாக விரிவுபடுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மோன்ட்ரா எலெக்ட்ரிக் 3W ஆட்டோவின் விலைஅரசு மானியம் போக ரூ.3.02 லட்சத்தில் (எக்ஸ் ஷோரூம்) தொடங்குகிறது. நாடு முழுவதும் உள்ள 100-க்கும் அதிகமான … Read more

ponniyin selvan trailer launch:சினிமா விழாவில் அரசியல் பேசிய எம்பி!

பிரபல இயக்குநர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படம் இந்த மாத இறுதியில் திரைக்கு வரவுள்ளது. அதற்கு முன்பாக இந்த பிரம்மாண்ட திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் இன்றிரவு நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். நடிகர்கள் விக்ரம், கார்த்தி, நடிகைகள் ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்பட இத்திரைப்படத்தின் நடித்துள்ள கலைஞர்களும் விழாவில் கலந்து கொண்டனர். விழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் … Read more

6ஆம் வகுப்பு பள்ளி மாணவன் இடி தாக்கி உயிரிழப்பு! அதிர்ச்சி சம்பவம்!

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஜவ்வாது மலை நெல்லிவாசல் நாடு பகுதியை  சேர்ந்தவர் வேடி, இவரது மகன் சிவா(11). சிறுவனின் பெற்றோர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டனர்.  இதனால் மேல்பட்டு கிராமத்தில் உள்ள தனது தாய் மாமா வெங்கடாசலம் அரவணைப்பில் இருந்து வந்தார். மேலும் சிறுவன் சிவா அப்பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் நேற்று இரவு சிவா வீட்டின் ஒர் அறையில் துாங்கிக் கொண்டிருந்தான்.  அப்பகுதியில் இடி மின்னலுடன் … Read more