மோடி சனாதனத்தின் பாதுகாப்பு அரண்- திருமாவளவன் பாய்ச்சல்!

விழுப்புரத்தில் பழங்குடி இருளர் சங்கத்தின் சார்பில், பழங்குடி இருளர்களுக்கான மனித உரிமை மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான வன்கொடுமை தடுப்பு சட்டம் 2016 ஐ முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். இருளர்கள் மீதான பொய் வழக்குகளை நீக்க வேண்டும் உள்ளிட்ட 11 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

இந்த மாநாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர்

கலந்து கொண்டு உரையாற்றினார் அப்போது அவர் பேசுகையில்: இந்த மாநாடு என்பது அடிப்படையில் சனாதன எதிர்ப்பு மாநாடு, சாதி எதிர்ப்பு மாநாடு, பாஜக எதிர்ப்பு மாநாடு, ஆர் எஸ் எஸ் மாநாடு, மோடி எதிர்ப்பு மாநாடு. மோடி சனாதனத்தின் பாதுகாப்பு அரணாக இருக்கிறார்.

பார்ப்பனர்களுக்கு வாட்ச்மேன் வேலை செய்வது தான் மோடியின் வேலை. பார்ப்பனர்கள் எல்லாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அவர்களுக்கு பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.

நமக்கு பாதுகாப்பு கொடுப்பது இல்லை.

தமிழ்நாட்டை சாதி,மதத்தின் பெயரால், வன்முறை காடாக்க வேண்டியது தான் அவருடைய நோக்கம்! – திருமாவளவன்

மோடி பகல் பாதுகாவலராக இருந்தால், அமிட்ஷா இரவு பாதுகாவலராக இருப்பர். மோடியும், அமிட்ஷாவும் பார்ப்பனர்களுக்கு காவலர்கள். மோடியும், அமிட்ஷாவும் பார்ப்பன சமூகத்தின் எடுபுடிகள். பதவி தான் பெரிய பதவி, ஆனால் செய்யும் வேலை என்னவோ வாட்ச்மேன் வேலை தான்.

கடந்த 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவில் ஏழரை சதவீதம் பழங்குடி மக்கள் உள்ளனர். பழங்குடியினர் எண்ணிக்கையில் மிக குறைவாக இருப்பதால், அரசியல் கட்சிகள் நம்மை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை. ஒட்டு சதவீதம் குறைவு தான் என ஏளனமாக நினைக்கின்றனர். அதனால் நமது பேச்சு எடுபடுவதில்லை. எண்ணிக்கையை குறைவாக இருந்தாலும் நாம் ஒன்றிணைந்து அரசியல் சக்தியாக திரள வேண்டும்.

இந்தியாவில் தலித் மக்கள் 35 கோடி பேர் உள்ளனர், இருப்பினும் தலித் மக்கள் மதிக்கப்படுவதில்லை அதற்கு காரணம் தலித் மக்கள் ஒரு அரசியல் சக்தியாக அணி திரளவில்லை. தலித் மக்கள் முதல்வர், பிரதமராக வேண்டும் என்கிற ஆசை அவர்களிடம் இல்லை. வன்கொடுமை சட்டம் இருக்கிறது, ஆனால் வன்கொடுமைகள் தடுக்கப்படுவதில்லை. மக்களுக்கு பாதுகாப்பு இல்லை.

இந்நிலை தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியா முழுமைக்கும் இதே நிலைமை தான் உள்ளது. வன் கொடுமை தடுப்பு சட்டம் இயற்றப்பட்டதே இங்கு பெறும் சாதனையாக பார்க்கப்படுகிறது. இந்த மாநாட்டில் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சம்து, சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான இருளர் இனமக்கள் தங்கள் கடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.