பயணிகள் ரயில்களால் ஒரு லாபமும் இல்லை: ஒன்றிய அமைச்சர் கவலை

புதுடெல்லி: மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ரயில்வே இணையமைச்சர் ராவ் சாகேப் தன்வே பேசுகையில், ‘தினமும் பயணிகள் ரயிலை இயக்குவதால் ரயில்வே துறைக்கு எந்த லாபமும் கிடைக்கவில்லை. நஷ்டம்தான் ஏற்படுகிறது. ஒரு ரூபாய் செலவு செய்தால், 55 காசுகள் நஷ்டமாகிறது.

ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான அரசு லாபத்தை பார்க்கவில்லை. மக்களின் வசதிக்காகவே பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகின்றன. சரக்கு ரயில்கள் மற்றும் இதர சேவைகளின் மூலம் கிடைக்கும் வருமானத்தில், பயணிகள் ரயில்களை இயக்குவதற்கான நஷ்டம் ஈடுகட்டப்படுகிறது.,’ என தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.