“2023 இறுதிக்குள் அனைத்து கிராமங்களிலும் 5ஜி சேவை”!!

அடுத்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து கிராமங்களுக்கும் 5ஜி சேவை கொண்டு சென்று சேர்க்கப்படும் என்று ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். 6ஆவது மொபைல் காங்கிரஸ் மாநாடு டெல்லியில் நடைபெற்றது. அப்போது நாட்டில் 5ஜி சேவையை முதற்கட்டமாக பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 5ஜி சேவையானது டெல்லி, சென்னை, கொல்கத்தா, மும்பை, பெங்களூரு, ஐதராபாத் உள்பட 13 இடங்களில் அறிமுகமாகிறது. நிகழ்வில் உரையாற்றிய ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி, 21ஆம் நூற்றாண்டின் தொழில்நுட்பங்களான செயற்கை … Read more

"வாட்ச்மேன் வேலை செய்வதுதான் மோடியின் வேலை" – தொல்.திருமாவளவன் காட்டம்

பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில், `பழங்குடி இருளர்களுக்கான மனித உரிமைகள் மாநாடு’ இன்று விழுப்புரத்தில் நடைபெற்றது. சுமார் ஏழு கோரிக்கைகள் இந்த மாநாட்டில் முன்வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், “ஆதிதிராவிடர்/ பழங்குடியினர் வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் – 2016 சரியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதுதான் இந்த மாநாட்டின் முதல் கோரிக்கை. இந்த முக்கியமான கோரிக்கையை வைத்தே ஒரு நாள் பேசலாம். சட்டம் இருக்கிறது, ஆனால்… நடைமுறையில் இல்லை, பாதுகாப்பில்லை, … Read more

மணிப்பூர் ஆளுநர் இல.கணேசன் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: மணிப்பூர் மாநில ஆளுநர் இல.கணேசன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மணிப்பூர் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு ஆளுநராக இருந்து வரும் இல.கணேசனுக்கு இன்று காலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தற்போது சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வரும் அவருக்கு சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். ஆளுநர் இல.கணேசன் உடல்நிலை … Read more

ஈரானில் ஹிஜாப் அணியாமல் உணவகத்தில் சாப்பிட்ட இரு பெண்கள் கைது

தெஹ்ரான்: ஈரானில் உள்ள ஓர் உணவகத்தில் ஹிஜாப் அணியாமல் உணவு சாப்பிட்ட இரு இளம்பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டோன்யாவும் அவரது நண்பரும் ஹிஜாப் அணியாமல் உணவகத்தில் உணவு சாப்பிட்டுள்ளனர். இதன் காரணமாக இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும், அவர்களது செயலுக்கு விளக்கத்தையும் பாதுகாப்புப் படையினர் கேட்டுள்ளனர். இரு பெண்களும் எவின் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரான் தலைநகர் தெஹ்ரானின் எவின் சிறைச்சாலை என்பது ஒரு மோசமான சிறையாக கருதப்படுகிறது. … Read more

'மாநிலங்கள் காப்பாற்றப்பட வேண்டும்!' – சிபிஎம் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

“இந்திய அளவில் கூட்டாட்சியை ஒப்புக் கொண்டவர்களால் கேட்கப்படுவது தான் மாநில சுயாட்சி,” என, கேரள மாநிலத்தில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் தமிழக முதலமைச்சர் தெரிவித்து உள்ளார். அண்டை மாநிலமான கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு இன்று தொடங்கி 3 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள, திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், சென்னை விமான நிலையத்தில் இருந்து, திருவனந்தபுரத்திற்கு விமானத்தில் சென்றார். … Read more

இந்தியாவின் தூய்மையான நகரம்: தொடர்ந்து 6வது ஆண்டாக இந்தூர் முதலிடம்!

இந்தியாவில், தூய்மையான நகரமாக, மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூர் தொடர்ந்து ஆறாவது முறையாக தேர்வு செய்யப்பட்டு உள்ளது. தூய்மையில் சிறப்பாக செயல்படும் நகரங்களை கண்டறிந்து கவுரவப்படுத்தி ஊக்குவிக்கும் வகையில், ஸ்வஸ் சர்வேக்‌ஷான் என்ற தூய்மையான நகரங்களுக்கான விருது வழங்கும் திட்டத்தை 2016 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்து வைத்தார். இதன்படி பல்வேறு பிரிவுகளின் கீழ் நாட்டில் தூய்மையில் சிறந்து விளங்கும் நகரங்கள் குறித்த தரவரிசை பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் மத்திய வீட்டு வசதி … Read more

முதல் நாளே 100 கோடி அருகில் – பொன்னியின் செல்வன் மெகா வசூல்

எழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் திரைப்படமாக உருவாகியிருக்கிறது. மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி,விக்ரம்,ஜெயம் ரவி, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் மிகப்பெரும் எதிர்பார்ப்புடன் படம் நேற்று வெளியானது. படம் வெளியானதிலிருந்து சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் பறக்க தொடங்கின. பலர் குடும்பத்துடன் சென்று முதல் காட்சியை பார்த்து ரசித்து கொண்டாடிவருகின்றனர்.  மேலும், நாவலின் கருவை கலைக்காமல் மணிரத்னம் படமாக்கியிருப்பதாகவும், காட்சியமைப்புகளிலும் சரி, லொகேஷன் தேர்வுகளிலும் சரி மணி கலக்கியிருக்கிறார் … Read more

திருமாவளவன் போட்ட விதை – சமூக நல்லிணக்க மனித சங்கிலி… அக் 11ல் கைகோர்த்த 10 கட்சிகள்

அக்டோபர் இரண்டாம் தேதி தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தச் சூழலில் அன்றைய தேதி சமூக நல்லிணக்க பேரணி நடக்குமென்று திருமாவளவன் அறிவித்தார். அதற்கு நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன பேரணியில் கலந்துகொள்ள தயாராகின. ஆனால், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தடை காரணமாக ஆர்எஸ்எஸ் பேரணி மற்றும் சமூக நல்லிணக்க மனித சங்கிலி ஆகியவற்றுக்கு காவல் துறை அனுமதி மறுத்தது. இதனையடுத்து … Read more

"நடிகர் சங்கம் பாக்யராஜையும் என்னையும் நீக்கியது காழ்ப்புணர்ச்சியால்தான்!"- உதயா குற்றச்சாட்டு

நடிகர் சங்கம் மற்றும் அதன் புதிய நிர்வாகிகளின் நன்மதிப்பைக் கெடுக்கும் வகையில் செயல்பட்டதாகக் கூறி இயக்குநர் கே.பாக்யராஜ், நடிகர் உதயா, பாபி ஆகிய மூவரையும் ஆறு மாத காலத்திற்குச் சங்கத்திலிருந்து நீக்கியுள்ளனர். முன்னதாக ஒரு தகவல். கடந்த 2019ல் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் நடந்தது. அதில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும், கே.பாக்யராஜ் தலைமையிலான சங்கரதாஸ் அணியும் போட்டியிட்டனர். இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் இரண்டரை ஆண்டுகளாக எண்ணப்படாமலே இருந்தன. அதனையடுத்து கடந்த மார்ச்சில் சங்கத்தின் … Read more

பிஎஸ்என்எல் 5ஜி சேவை 2023 ஆகஸ்டு 15ந்தேதி தொடங்கும்! மத்தியஅமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்

டெல்லி: பிஎஸ்என்எல் இன்னும் 4ஜி சேவையையே வழங்காத நிலையில், 2023ம் ஆண்டு  ஆகஸ்டு 15ந்தேதி 5ஜி சேவையை தொடங்கும் என மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர்  அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்து உள்ளார். டெல்லியில் இன்று தொடங்கிய ‘இந்தியா மொபைல் காங்கிரஸ்-2022’ மாநாட்டில்  5ஜி சேவையை பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார். முதற்கட்டமாக  டெல்லி, சென்னை, கொல்கத்தா, மும்பை, பெங்களூரு, ஐதராபாத் உள்பட 13 இடங்களில் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப் படுகிறது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் மத்திய … Read more