மண விழாவில் மோதல் 30 பேர் படுகாயம்| Dinamalar

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே பலராமபுரத்தில் உள்ள ஒரு மண்டபத்தில், நேற்று முன்தினம் மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.

அப்போது அங்கு திருமணத்துக்கு அழைக்கப்படாத சில இளைஞர்கள் வந்து, மொய் பணம் கொடுத்தனர். திருமண வீட்டார் அதை ஏற்க மறுத்தனர். இதைத் தொடர்ந்து ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியது. இதில், மணமகளின் தந்தை உட்பட 30 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.