சர்வதேச நாடுகளில் அறிமுகமான ட்விட்டர் ப்ளூ டிக் சந்தா | இந்தியாவில் எப்போது?

கலிபோர்னியா: சில சர்வதேச நாடுகளில் ட்விட்டர் நிறுவனத்தின் ப்ளூ டிக் சந்தா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலும் வெகு விரைவில் இந்த கட்டண சந்தா நடைமுறைக்கு வரும் என தெரிகிறது. இருந்தாலும் இப்போதைக்கு ஐஓஎஸ் இயங்குதள பயனர்களுக்கு மட்டுமே இந்த சந்தா கட்டண முறை அறிமுகமாகி உள்ளது. இதனை எலான் மஸ்க் உறுதி செய்துள்ளார். ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ள எலான் மஸ்க், அதில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர முயற்சி செய்து வருகிறார். அவரது நடவடிக்கைகளில் ஒன்றுதான் ப்ளூ … Read more

பள்ளிகளுக்கு பறந்த திடீர் உத்தரவு; மகிழ்ச்சியில் துள்ளும் மாணவர்கள்!

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 29ம் தேதி தொடங்கி பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் மழை நீடித்து வருவதால் ஆங்காங்கே உள்ள நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. மேலும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் சில இடங்களில் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பாதிப்பால் 26 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று முன்தினம் பெய்த மழை காரணமாக … Read more

டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட்: ஜிம்பாப்வே அணிக்கு 187 ரன் இலக்கு

மெல்போர்ன்: டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் சூப்பர் 12 சுற்றின் கடைசி ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி வெற்றிபெற 187 ரன்களை இந்தியா அணி நிர்ணயித்தது. முதலில் ஆடிய இந்தியா அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்களை எடுத்தது.

ஐப்பசி மாத பவுர்ணமி: கங்கைகொண்ட சோழபுரம் தஞ்சை கோயில்களில் நாளை அன்னாபிஷேகம்

தஞ்சை: உலக பாரம்பரிய சின்னமாக விளங்கும் தஞ்சை பெரிய கோயிலுக்கு தமிழகம் மட்டும்மல்லாது வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். பெரியகோயில் கருவறையில் உள்ள பெருவுடையார் மிகப்பெரிய லிங்கத்திருமேனியாகும். 6 அடி உயரமும், 54 அடி சுற்றளவும் கொண்ட பீடமும், அதன்மேல் 13 அடி உயரம், 23 அடி சுற்றளவும் உள்ள லிங்கம்  தனித்தனி கருங்கற்களினால் செதுக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது. இத்தகைய சிறப்பு மிக்க பெருவுடையாருக்கு ஐப்பசி பவுர்ணமி தினத்தில் அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி … Read more

பைபாஸ் சர்வீஸ் சாலையில் யாருமில்லாமல் நின்ற 2½ வயது சிறுவன்..டாக்டர் செய்த பொறுப்பான செயல்

பூந்தமல்லி அடுக்குமாடி குடியிருப்பில் லிப்ட்டில் தவறிய குழந்தையை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்த மருத்துவரை ஆவடி காவல் ஆணையர் நேரில் அழைத்து பாராட்டினார். வேலூர் மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வருபவர் நந்தகுமார் (30), இவர் கடந்த 3 ஆம் தேதி இரவு இவர் அய்யப்பன்தாங்கலில் இருந்து வேலூர் செல்ல குமணன்சாவடி வழியாக பைபாஸ் சர்வீஸ் சாலயில் சென்று கொண்டிருந்தார். அப்போது அழுதபடி 2 1ஃ2 வயது சிறுவன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தான். இந்நிலையில், சந்தேகமடைந்த நந்தகுமார், காரை … Read more

டீமானிட்டைசேஷனுக்கு பின்னாலும் இப்படியா.. மக்களிடையே அதிகமாக புழங்கும் ரூபாய் நோட்டுக்கள்!

2022 அக்டோபர் மாத நிலவரப்படி நாட்டில் புழக்கத்தில் இருக்கும் ரூபாய் நோட்டுகளின் மதிப்பு ரூ. 30.88 கோடி என்ற புதிய உச்சத்தைத் தொட்டிருக்கிறது. கடந்த 4-ம் தேதி ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட 2016-ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இது 71.84 % அதிகமாகும் . 2016-ம் ஆண்டில் அப்போதைய ரூபாய் நோட்டு புழக்கத்தில் பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்களின் பங்கு சுமார் 86 % … Read more

என்னுடைய பேராசையை அனுமதித்து, அங்கீகரித்தற்கு நன்றி – மணிரத்னம்

'பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று' வெளியாகி மிகப்பெரிய வெற்றிப்பெற்றது. இப்படத்தை வெற்றி பெறச் செய்த பத்திரிக்கை மற்றும் ஊடகங்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர் மணிரத்தினம் பேசுகையில், ''எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை. அமரர் கல்கிக்கு முதல் நன்றி. இந்த நாவலை படித்த ஒவ்வொரு வாசகர்களுக்கும், ஒவ்வொரு கனவு இருக்கும். இதனை படமாக உருவாக்க வேண்டும் என பேராசைப்பட்டேன். இதனை அனுமதித்து, அங்கீகாரம் கொடுத்த அனைவருக்கும் நன்றி. தயாரிப்பாளர் சுபாஸ்கரனை … Read more

ரோகித் ஷர்மா அருகே ஓடிவந்த ரசிகருக்கு ரூ.6.5 லட்சம் அபராதம்!!

ஜிம்பாப்வே – இந்தியா போட்டியின்போது, கேப்டன் ரோகித் சர்மாவை காண திடீரென மைதானத்திற்குள் ஓடி வந்த ரசிகருக்கு ரூ.6.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி ஜிம்பாப்வேயை 71 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள நிலையில், அரையிறுதியில் இங்கிலாந்தை எதிர்கொள்வது உறுதியாகியுள்ளது. குரூப் 1ல் இருந்து நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளும், குரூப் 2ல் இருந்து பாகிஸ்தான் மற்றும் இந்தியா அணிகளும் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளது. இந்நிலையில், லீக் சுற்றின் கடைசி ஆட்டத்தில் … Read more

"2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி!" – நாமக்கல்லில் எடப்பாடி பழனிசாமி பேச்சு

நாமக்கல், சேலம் சாலையில் உள்ள பொம்மக்குட்டைமேட்டில், அ.தி.மு.க-வின் 51-வது வருட துவக்க விழாவை முன்னிட்டு, நாமக்கல் மாவட்ட அ.தி.மு.க கழகம் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஏற்கெனவே, இரண்டு முறை நாள் குறித்து, மழை, சட்டசபைக் கூட்டம் உள்ளிட்டக் காரணங்களால், இரண்டு தேதிகளிலும் ரத்தானது. அதைத் தொடர்ந்து, இன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் தங்கமணி இந்தப் பொதுக்கூட்ட ஏற்பாட்டை செய்ததோடு, பொதுக்கூட்டத்தில் முன்னிலை வகித்தார். பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமிக்கு பூரணகும்ப மரியாதை வழங்கப்பட்டது. இந்த பொதுக்கூட்டத்தில் … Read more