''சாலையில் வாகனம் நிறுத்த ரூ.100 கட்டணமா?'' – மதுரை கூடலழகர் கோயில் பக்தர்கள் அதிருப்தி

மதுரை: மதுரையில் கூடலழகர் பெருமாள் கோயில் செல்வதற்கு வாகங்களை சாலையில் நிறுத்துவதற்குகூட ரூ.100 கட்டணம் வசூல் செய்யப்படுவது பக்தர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. கூடலழகர் பெருமாள் கோயில் மதுரை மாநகரின் மையப் பகுதியில் பெரியார் பேருந்து நிலையம் அருகே சன்னதி தெருவில் அமைந்துள்ளது. 108 வைணவ திருத்தலங்களில் 4வது ஸ்தலமான இக்கோயிலின் உள்ள மூலவர் கருவறையில் உள்ள பெருமாள் கூடலழகர் என்று அழைக்கப்படுகிறார். பழம்பெருமை வாய்ந்த இக்கோயில் சங்க காலத்துக்கு முன்பே தோற்றுவிக்கப்பட்ட கோயிலாகும். ஆழ்வார்களால் … Read more

பால் விலை உயர்வுக்கு மத்திய அரசுதான் காரணம்… ஓரே போடாய் போட்ட திமுக கூட்டணி கட்சி!

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜவஹிருல்லா எம்எல்ஏ, திருச்சியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வருகிற 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல், நமது நாடு ஜனநாயக பாதையில் பயணிக்க வேண்டுமா அல்லது பாசிச பாதைக்கு செல்ல வேண்டுமா என்பதை நிர்ணயிக்கும் தேர்தலாக இருக்கும். மதசார்பற்ற கட்சிகள் அனைத்தும் ஒருமித்து தேர்தலை சந்திக்க வேண்டும். மதச்சார்பற்ற கட்சிகளுடன் இணைந்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தேர்தலை சந்திப்பதுடன் மத சார்பற்ற கட்சிகள் வெற்றி பெறவும் பாடுபடுவோம். … Read more

வேதாரண்யம் அருகே படகு பழுதாகி கடலில் தவித்த 5 மீனவர்கள் மீட்பு

வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே  கடலில் படகு பழுதானதால் தத்தளித்த நாகை மீனவர்கள் 5 பேரை கடலோர காவல் படையினர் மீட்டனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கோடியக்கரை உள்ளது. இங்கு தற்போது மீன்பிடி சீசன் காலமாகும். பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் இங்கு தங்கி மீன்பிடித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 3ம் தேதி நாகை கீச்சாங்குப்பத்தை சேர்ந்த அண்ணாமலை என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அதே பகுதியை சேர்ந்த 5 மீனவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடிக்க சென்றனர். … Read more

தமிழ்நாடு தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர் சங்கம் போராட்டம் வாபஸ்

சென்னை: தமிழ்நாடு தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர் சங்கம் அறிவித்த வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெற்றனர். நாளை முதல் வேலை நிறுத்தம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் திடீரென போராட்டத்தை வாபஸ் பெற்றனர். நாளை முதல் தமிழ்நாட்டில் 25,000 தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

‘நீண்ட நேரம் காத்திருக்க வேண்டாம்’ நேர ஒதுக்கீடு டிக்கெட் பெற்று ஏழுமலையானை ஒன்றரை மணி நேரத்தில் பக்தர்கள் தரிசிக்கலாம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்க நேர ஒதுக்கீடு டிக்கெட் மீண்டும் வழங்கப்படுகிறது. இந்த டிக்கெட்டுகள் திருப்பதி பஸ் நிலையம் எதிரே உள்ள சீனிவாஸ் காம்ப்ளக்ஸ், ரயில்வே ஸ்டேஷன் எதிரே உள்ள கோவிந்தராஜ் சத்திரம், அலிபிரி பூதேவி காம்ப்ளக்ஸ் ஆகிய இடங்களில் தினமும் நள்ளிரவு 12 மணி முதல் வழங்கப்படுகிறது. தினமும் 20 ஆயிரம் டிக்கெட்டுகள் வழங்கப்படுகிறது. இந்த டிக்கெட் பெற்ற பக்தர்கள் குறிப்பிட்ட நேரத்தில் சுவாமியை தரிசிக்கலாம். ஆனால் இந்த … Read more

விடுமுறை நாளில் லேத் பட்டறையில் வேலை செய்த கல்லூரி மாணவனுக்கு நேர்ந்த பரிதாபம்

ஈரோடு அருகே லேத் பட்டறையில் வேலை செய்து கொண்டிருந்த கல்லூரி மாணவன் மீது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் சிவகிரி கந்தசாமி பாளையத்தைச் சேர்ந்தவர் தூய்மை பணியாளர் ரவி. இவரது மகன் ஹரி சங்கர் (17) தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் ஞாயிற்றுக் கிழமை என்பதால் மூர்த்தி என்பவருக்குச் சொந்தமான லேத் பட்டறையில் பணிக்கு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஹரி சங்கர் மீது மின்சாரம் … Read more

'பியூட்டி போலீஸ்' உபாசனா

புள்ளினமும் பொறாமை கொள்ளும் மெல்லினமே… கொஞ்சும் தமிழும் பேச கெஞ்சும் சொல்லினமே… இல்லை என தாராளமாக சொல்லும் இடையினமே, பார்த்தாலே ஈர்க்கும் பரவச பெண்ணினமே, உன் விழிகள் இரண்டில் ஓடும் மானினமே… என தன் அழகால் அழகை ஆராதிக்கும், பிரபுதேவா உடன் பியூட்டி போலீசாக நடிக்கும் உபாசனா மனம் திறக்கிறார். உங்கள் நடிப்பில் கலக்க போகும் படங்கள்?எஸ்.பி.ராஜ்குமார் இயக்கத்தில் 'லோக்கல் சரக்கு', மணி தாமோதரன் இயக்கும் 'ஷார்ட்கட்', ஷாம் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில் 'மூசாசி' என வித்தியாசமான படங்களின் … Read more

ஏரியில் விழுந்த பயணிகள் விமானம்!!

மோசமான வானிலை காரணமாக தான்சானியாவில் பயணிகள் விமானம் ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானது. தான்சானியாவில் உள்ள டார் எஸ் சலாம் நகரில் இருந்து புகோபா நகரை நோக்கி பயணிகள் விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் 40க்கும் மேற்பட்டவர்கள் இருந்தனர். விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக விக்டோரியா ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து மோசமான வானிலை காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. விபத்து குறித்து தகவலறிந்த மீட்புப்படையினர் விரைந்து சென்று மீட்பு பணிகளில் … Read more

அடேங்கப்பா… சோலார் பம்ப்செட் அமைக்க 70% மானியம்; இப்படித்தான் விண்ணப்பிக்கணும்!

முதலமைச்சரின் சூரிய சக்தி பம்பு செட்டுகள் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் அமைக்கும் திட்டத்தில் விவசாயிகள் இணைந்து பயன்பெறுமாறு, வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வேளாண் பெருமக்களின் நலனுக்காக கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழ்நாடு அரசு, வேளாண் மின் இணைப்பு வேண்டி பல ஆண்டுகளாக காத்திருக்கும் விவசாயிகளின் வசதிக்காக கடந்த ஆண்டில் … Read more