கடலூர் | 1000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற ஆர்எஸ்எஸ் பேரணி, பொதுக்கூட்டம்: போலீஸ் குவிப்பு

கடலூர்: கடலூரில் 1000த்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்ற ஆர்எஸ்எஸ் பேரணி, பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதற்கு பாதுகாப்பிற்காக 1000 போலீஸார் குவிக்கப்பட்டனர். தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் ராமலிங்க அடிகளாரின் 200 விது பிறந்த ஆண்டு, மாகாத்மா காந்தியின் 153 வது பிறந்த ஆண்டு, பாரதம் சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்த விழா ஆகிய முப்பெரும் விழா பேரணி மற்றும் பொதுக் கூட்டம் நடத்த இருந்தனர். அதன்படி 44 இடங்களில் பேரணி,பொதுக்கூட்டம் நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியது. … Read more

கோவை கார் சிலிண்டர் வெடித்த சம்பவம்… உளறிக் கொட்டிய அர்ஜூன் சம்பத்!

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் நினைவித்தில் கடந்த 30ஆம் தேதி தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா நடைபெற்றது. இதனை தொடர்ந்து, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மறைந்த உத்திரட்டாதி நட்சத்திரத்தில் அவரது சிலைக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை, திருவாசகம் பாடல்கள் பாடி குரு பூஜை கொண்டாடப்பட்டது. இந்து மக்கள் கட்சி சார்பாக தமிழ் முறைப்படி உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு அகில பாரத சந்நியாசிகள் சங்க தலைவர் ராமானந்த சுவாமி முன்னிலையில் சந்தனம், பால், … Read more

போதிய இடவசதியின்றி இயங்கும் விக்கிரவாண்டி தீயணைப்பு நிலையம்

விக்கிரவாண்டி: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கடந்த 2021 ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தீயணைப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த தீயணைப்பு நிலைய எல்லைக்குட்பட்ட சுமார் 250க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஏற்படும் விபத்துகள் பேரிடர் மீட்பு பணிகள், தீ விபத்துகள், தேசிய நெடுஞ்சாலை விபத்துகள் போன்றவற்றில் மீட்பு பணிக்காக தினம்தோறும் தீயணைப்புத் துறையினர் சென்று வருகின்றனர். ஆனால் தீயணைப்பு நிலையம் விக்கிரவாண்டி பேரூராட்சி அலுவலக வளாகத்தில் பாதுகாப்பற்ற முறையில் அமைந்துள்ளது. மேலும் அந்த இடத்தில் தீயணைப்பு வாகனம் … Read more

43 பயணிகளுடன் சென்ற விமானம் தான்சானியா ஏரியில் விழுந்து விபத்து

தான்சானியா: 43 பயணிகளுடன் சென்ற விமானம் தான்சானியா ஏரியில் விழுந்து விபத்து ஏற்பட்டது. ஏரியில் விழுந்த விமானத்தில் இருந்து இதுவரை 26 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மோசமான வானிலை காரணமாக விமானம் தரையிறங்கும் போது விபத்தில் சிக்கியது.

முதல்வர் ஸ்டாலின், பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசியதாக பாஜக பிரமுகர் கைது

சமூக வலைதளங்களில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் பட்டியலினத்தவர் குறித்து ஆபாசமாக பேசிய புகாரில் பாஜக பிரமுகரை SC/ST வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருநின்றவூர், அடுத்த கொசவம்பாளையம், கொட்டம்மேடு பகுதியைச் சேர்ந்தவர் பூபதி (32). தொழில் நிறுவனங்களுக்கு ஆட்களை அனுப்பும் தொழில் செய்து வரும் இவர், தமிழக முதல்வர் ஸ்டாலின் பற்றி சமூக வலைதளத்தில், ஆபாச வார்த்தைகளால் திட்டி வீடியோ வெளியிட்டிருந்தார். மேலும் தனது சமூகத்தைச் சேர்ந்த உறவினர் பெண் ஒருவர் … Read more

மூன்றாவது முறையாக அஜித்தை இயக்கப் போகும் விஷ்ணுவர்தன்!

தற்போது எச் .வினோத் இயக்கியுள்ள துணிவு படத்தில் நடித்துள்ளார் அஜித்குமார். அவருக்கு ஜோடியாக மஞ்சு வாரியார் நடித்துள்ள இந்த படம் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. தற்போது அப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அஜித்குமார் தனக்கான டப்பிங்கை பேசி முடித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து விக்னேஷ்சிவன் இயக்கும் தனது 62வது படத்தில் நடிக்க போகிறார் அஜித். அந்த படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்க இருக்கிறது. இந்த நிலையில் ஏற்கனவே அஜித் நடிப்பில் பில்லா, … Read more

கட்டம், கட்டமாக அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறையும்

அரசாங்கம் நடைமுறைப்படுத்திவரும் நிதிக் கொள்கையின் அடிப்படையில் கட்டம், கட்டமாக அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். பணவீக்கம் குறைவடைவதால் மாத்திரம் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை உடனடியாக குறைக்கமுடியும் என்று தெரிவித்த அவர், செப்டெம்பர் மாதத்தில் 69.8 வீதமாக இருந்த பணவீக்கம் ஒக்டோபர் மாதத்தில் 66 வீதமாக காணப்படுகிறது. இதனால், அத்தியாவசிப் பொருட்களின் விலை உடனடியாக குறைவடையுமென குறிப்பிடமுடியாது. எவ்வாறெனினும் அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லும் நிதிக்கொள்கையின் பிரகாரம், படிப்படியாக அத்தியாவசியப் … Read more

கொசுக்களை நீதிமன்றத்திற்கு கொண்டுவந்த பிரபல தாதா!!

சிறையில் கொசு தொல்லை இருப்பதை நிரூபிக்க தாதா ஒருவர் கொசுக்களை பிடித்து பாட்டிலில் அடைத்து நீதிமன்றத்திற்கு கொண்டு வந்தார். நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராஹிமின் நெருங்கிய கூட்டாளியான இஜாஜ் லக்டாவாலா என்பவரை 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மும்பை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் தற்போது மும்பை தலோஜா சிறையில் உள்ள நிலையில், மும்பை அமர்வு நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் சிறையில் கொசு தொல்லை அதிகம் இருப்பதால், கொசுவலை … Read more

ரன்பீர் – ஆலியா பட் தம்பதிக்கு பெண் குழந்தை!!

பாலிவுட் நட்சத்திர ஜோடிகளான ரன்பீர் கபூர் – ஆலியா பட் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆலியா பட் – ரன்பீர் கபூர் ஆகிய இருவரும் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்துக் கொணடனர். ஆலியா பட் கர்ப்பமாகி, மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது எடுத்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். அவருடன் கணவர் ரன்பீர் கபூர் உடன் இருக்கும் புகைப்படம் வைரலானது. இதுகுறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட ஆலியா பட், எங்கள் குழந்தை, விரைவில் வரவிருக்கிறது என்று … Read more

மதுரை: "சீட்டு காலியா இருக்கு, ஆனா உட்காரதான் முடியாது!"- உடைந்த இருக்கைகள்; முகம்சுளிக்கும் பயணிகள்

மதுரை மாவட்டம், செக்கானூரணி – காமராசர் பல்கலைக்கழகம் – பெரியார் நிலையம் வழியாக விக்ரமங்கலம் செல்லும் `61B’ என்னும் அரசுப் பேருந்தில் இருக்கைகள் மிகவும் மோசமான நிலையில் இருக்கின்றன. அந்தப் பேருந்தின் எண் `தநா – 58 , நா – 1114′ ஆகும். இந்தப் பேருந்தில் ஓர் இருக்கையின் கம்பி முற்றிலுமாக உடைந்து கீழே விழுந்தபடி காட்சியளிக்கிறது. அரசுப் பேருந்து மற்றொரு இருக்கை பின்புறம் படுமோசாக கிழிந்த நிலையில் காட்சியளிக்கிறது. மேலும், பேருந்தின் மேற்கூரையும் ஆங்காங்கே சேதமடைந்து காணப்படுகிறது. பேருந்தின் பெரும்பாலான … Read more