தெலங்கானா | ஏரியில் நீச்சல் பழக சென்ற 5 மாணவர்கள் உயிரிழப்பு: காப்பாற்ற சென்ற ஆசிரியரும் பலி
மெட்ச்சல்: தெலங்கானாவின் மெட்ச்சல் மாவட்டம், காச்சிகூடா நேரு நகர் பகுதியில் மதரஸா பள்ளி உள்ளது. இங்கு இஸ்லாமிய மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், இங்கு படிக்கும் நேரு நகரை சேர்ந்த இஸ்மாயில் (12), ஜாபர் (13), சோஹைல் (14), அயோன் (14), ரியான் (14) ஆகிய 5 மாணவர்கள், நேற்று இதே பகுதியில் உள்ள எர்ரகுண்டா ஏரியில் நீச்சல் பழக சென்றனர். ஆனால், ஆழமான பகுதிக்கு சென்று விட்டதால், இவர்கள் தொடர்ந்து நீந்த முடியாமல் தண்ணீரில் தத்தளித்தனர். … Read more