“இதென்ன காக்கிநாடாவா?”-சினிமா ஷூட்டிங் போல பயணித்தபின் அரசை கேள்வி கேட்ட பவன் கல்யாண்

ஆந்திராவின் இப்டாம் என்ற கிராமத்தில் சாலை விரிவாக்க பணிகளுக்காக ஆந்திர அரசால் வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன. வீடுகளை இழந்த பொதுமக்களுக்கு ஆறுதல் கூற, தனது ஆதரவாளர்களுடன் ஜனசேனா கட்சித் தலைவரும் நடிகருமான பவன் கல்யாண் சென்ற காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. பவன் கல்யாண் அங்கு செல்லவுள்ளார் என்று தெரிந்ததும், அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்திருக்கிறது. அத்துடன் அவரது வருகையையொட்டி, நேற்று அதிகாலையில் இருந்தே அங்கு அவரது ஆதரவாளர்கள் இப்டாம் கூடத்தொடங்கிவிட்டனர். ஆனால் அவரது நிகழ்ச்சிக்கு … Read more

 ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆறாவது கூட்டம் – ஆட்சி, சட்டத்தின் ஆட்சி மற்றும் மனித உரிமைகள் குறித்த இலங்கை செயற்குழு

ஆட்சி, சட்டத்தின் ஆட்சி மற்றும் மனித உரிமைகள் தொடர்பான ஆறாவது செயற்குழு 2022 அக்டோபர் 28ஆந் திகதி கொழும்பில் கூடியது. 1.      இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான வழக்கமான இருதரப்புத் தொடர்புகளின் பின்னணியில் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. ஒரு நாள் முழுவதுமான நடவடிக்கைகள், ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பரப் பரிமாற்றத்தின் அடிப்படையில், கருத்துக்கள் மற்றும் அனுபவங்களின் சுமூகமான கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது. இலங்கை மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் ஏற்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றங்கள் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல் தொடர்பான உரிய நடவடிக்கை மற்றும் சட்ட முன்முயற்சிகளை நடைமுறைப்படுத்துதல் குறித்து இரு தரப்பும் கலந்துரையாடினர். நல்லிணக்கத்தில் முன்னேற்றம் குறித்து இலங்கை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு விளக்கமளித்துள்ளது. 2.      தேவையான சீர்திருத்தங்கள் மற்றும் சமூக பாதுகாப்பு நடவடிக்கைகள் உட்பட, தற்போதைய முன்னோடியில்லாத பொருளாதார நெருக்கடியை வெற்றிகரமாக சமாளிப்பதற்காக, நெருக்கடியின் பாதகமான தாக்கத்தைத் தணித்து, நாட்டை நிலையான அபிவிருத்தி மற்றும் செழிப்புக்கு இட்டுச் செல்லும் இலங்கையின் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கான உறுதிப்பாட்டை ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் உறுதிப்படுத்தியது. மனித உரிமைகள் முன்னேற்றத்தில் நீதி மற்றும் நல்லிணக்கத்தின் மூலம் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் உள்ளடக்கத்தின் முக்கியத்துவத்தை இலங்கையும் ஐரோப்பிய ஒன்றியமும் மீண்டும் வலியுறுத்தின. 3.     ஜனநாயக நிர்வாகத்தை வலுப்படுத்துவதையும் முக்கிய நிறுவனங்களின் சுயாதீன மேற்பார்வையையும், பொது ஆய்வு மற்றும் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள், அரசியலமைப்பு சபை மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்களை மீண்டும் நிறுவுவதை நோக்கமாகக் கொண்டுள்ள அரசியலமைப்பின் 21வது திருத்தம் குறித்து இலங்கை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தெரியப்படுத்தியது. இச்சூழலில், அதிகாரங்கள், கண்காணிப்புக்கள் மற்றும் சமநிலைகளை பிரிப்பதன் முக்கியத்துவம் மற்றும் சுயாதீன நிறுவனங்களின் தற்போதைய பணிகள் குறித்து இரு தரப்பும் கலந்துரையாடின. தேர்தல் சீர்திருத்த செயன்முறை குறித்தும் பணிக்குழுவிற்கு புதிய தகவல்கள் வழங்கப்பட்டன. இந்நிலையில், 2019 ஐரோப்பிய ஒன்றியத் தேர்தல் பார்வையாளர் பணியின் பணிகளை ஐரோப்பிய ஒன்றியம் நினைவு கூர்ந்தது. ஜனநாயகக் கருத்து மற்றும் கருத்துச் சுதந்திரத்தின் முக்கியத்துவத்தையும், அமைதியான முறையில் ஒன்றுகூதுவதற்கான சுதந்திரத்திற்கான உரிமைகளையும் இரு தரப்பும் மீண்டும் வலியுறுத்தின. 4.     ஐரோப்பிய ஒன்றியத்தால் நிதியளிக்கப்பட்ட நீதித்துறை சீர்திருத்தத் திட்டத்திலான முன்னேற்றத்தை வரவேற்ற ஐரோப்பிய ஒன்றியம், நீதிக்கான அணுகலை மேலும் மேம்படுத்தி மனித உரிமைகளை மேம்படுத்தவுள்ளது. இந்த விடயத்தில் ஐரோப்பிய ஒன்றியம் வழங்கிய ஆதரவை இலங்கை பாராட்டியது. 5. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை சீர்திருத்துவதற்காக மார்ச் 2022 இல் இலங்கை முன்னெடுத்த நடவடிக்கைகளை ஐரோப்பிய ஒன்றியம் அங்கீகரித்ததோடு, அதன் உறுதிமொழிகளுக்கு இணங்க மேலும் நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டியது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் சமீபத்திய பயன்பாடு குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கவலை தெரிவித்தது. பயங்கரவாதத் தடைச் சட்டம் மிகவும் அவசியமான சந்தர்ப்பங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டதாக இலங்கை உறுதியளித்துள்ளது. 2021-2022ஆம் ஆண்டில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதிகளை விடுவிப்பது குறித்த இலங்கையின் புதிய தகவல்கள் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டதுடன், குற்றம் சாட்டப்படாத பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்ய ஊக்குவித்துள்ளது. அரசியலமைப்பு, சர்வதேச நியமங்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளுக்கு இணங்க, 2023ஆம் ஆண்டில் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக ஒரு விரிவான சட்ட முன்மொழிவைத் தயாரிப்பதில் இலங்கை தனது வலுவான உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியது. 6.     இலங்கையும் ஐரோப்பிய ஒன்றியமும் சிவில் சமூகத்தை ஈடுபடுத்துவதன் மற்றும் அதன் அனைத்து பன்முகத்தன்மையிலும் செயற்படத் தேவையான இடத்தை வழங்குவதன் முக்கியத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்தியது. இந்த நடவடிக்கையில் இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது. 7.   இரு தரப்பினரும் சிறுபான்மையினரின் நிலைமை மற்றும் வெறுப்புப் பேச்சுக்கு தீர்வு காண எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடினர். பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக எடுக்கப்பட்ட சட்டமியற்றுதல் மற்றும் ஏனைய நடவடிக்கைகள், சிறுவர் தொழிலாளர் ஒழிப்பு உட்பட தொழிலாளர் உரிமைகளை மேம்படுத்துவதற்கு முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அவர்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர். ஒரே பாலின உறவுகளை குற்றமற்றதாக்குவதற்கான அழைப்பை ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் வலியுறுத்தியதுடன், இது தொடர்பான தனி உறுப்பினர் மசோதா குறித்தும் குறிப்பிட்டது. 8.      ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் ஒப்பந்த அமைப்புக்கள், சிறப்பு நடைமுறைகள் மற்றும் உலகளாவிய காலாந்தர மீளாய்வு செயன்முறை உள்ளிட்ட ஒத்துழைப்பு குறித்து இரு தரப்பும் கலந்துரையாடினர். மனித உரிமைகள் பேரவையுடனும் அதன் பொறிமுறைகளுடனும் தொடர்ந்தும் ஈடுபடுமாறு இலங்கையை ஐரோப்பிய ஒன்றியம் ஊக்குவித்தது. நிலையான அபிவிரு;ததிக்கான 2030 நிகழ்ச்சி நிரலின் கட்டமைப்பில் தமது ஒத்துழைப்பைத் தொடர இரு தரப்பும் ஒப்புக்கொண்டன. 9.  ஜ.எஸ்.பி. + கண்காணிப்பு செயன்முறை மற்றும் அதன் தேவைகள் குறித்து செயற்குழுவுக்கு புதிய தகவல்கள் வழங்கப்பட்டன. ஐரோப்பிய ஒன்றியம் அதன் ஜ.எஸ்.பி. + உறுதிமொழியில் இலங்கையின் உறுதியான முன்னேற்றத்தை ஊக்குவித்தது. இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் மத்திய ஆசியா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பொதுநலவாயப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் திருமதி. வருணி முத்துக்குமாரண மற்றும் ஐரோப்பிய வெளி நடவடிக்கை சேவையின் தெற்காசிய பிரிவின் பிரதிப் பணிப்பாளரும், தலைவருமான திருமதி. ரென்ஸ்ஜே டீரிங்க் ஆனகியோர் இச்செயற்குழுக்கான இணைத்தலைமையை வகித்தனர்.  Public Diplomacy Division Ministry of Foreign Affairs   1.      இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான வழக்கமான இருதரப்புத் தொடர்புகளின் பின்னணியில் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. ஒரு நாள் முழுவதுமான நடவடிக்கைகள், ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பரப் பரிமாற்றத்தின் அடிப்படையில், கருத்துக்கள் மற்றும் அனுபவங்களின் சுமூகமான கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது. இலங்கை மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் ஏற்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றங்கள் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல் தொடர்பான உரிய நடவடிக்கை மற்றும் சட்ட முன்முயற்சிகளை நடைமுறைப்படுத்துதல் குறித்து இரு தரப்பும் கலந்துரையாடினர். நல்லிணக்கத்தில் முன்னேற்றம் குறித்து இலங்கை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு விளக்கமளித்துள்ளது. 2.      தேவையான சீர்திருத்தங்கள் மற்றும் சமூக பாதுகாப்பு நடவடிக்கைகள் உட்பட, தற்போதைய முன்னோடியில்லாத பொருளாதார நெருக்கடியை வெற்றிகரமாக சமாளிப்பதற்காக, நெருக்கடியின் பாதகமான தாக்கத்தைத் தணித்து, நாட்டை நிலையான அபிவிருத்தி மற்றும் செழிப்புக்கு இட்டுச் செல்லும் இலங்கையின் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கான உறுதிப்பாட்டை ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் உறுதிப்படுத்தியது. மனித உரிமைகள் முன்னேற்றத்தில் நீதி மற்றும் நல்லிணக்கத்தின் மூலம் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் உள்ளடக்கத்தின் முக்கியத்துவத்தை இலங்கையும் ஐரோப்பிய ஒன்றியமும் மீண்டும் வலியுறுத்தின. 3.     ஜனநாயக நிர்வாகத்தை வலுப்படுத்துவதையும் முக்கிய நிறுவனங்களின் சுயாதீன மேற்பார்வையையும், பொது ஆய்வு மற்றும் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள், அரசியலமைப்பு சபை மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்களை மீண்டும் நிறுவுவதை நோக்கமாகக் கொண்டுள்ள அரசியலமைப்பின் 21வது திருத்தம் குறித்து இலங்கை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தெரியப்படுத்தியது. இச்சூழலில், அதிகாரங்கள், கண்காணிப்புக்கள் மற்றும் சமநிலைகளை பிரிப்பதன் முக்கியத்துவம் மற்றும் சுயாதீன நிறுவனங்களின் தற்போதைய பணிகள் குறித்து இரு தரப்பும் கலந்துரையாடின. தேர்தல் சீர்திருத்த செயன்முறை குறித்தும் பணிக்குழுவிற்கு புதிய தகவல்கள் வழங்கப்பட்டன. இந்நிலையில், 2019 ஐரோப்பிய ஒன்றியத் தேர்தல் பார்வையாளர் பணியின் பணிகளை ஐரோப்பிய ஒன்றியம் நினைவு கூர்ந்தது. ஜனநாயகக் கருத்து மற்றும் கருத்துச் சுதந்திரத்தின் முக்கியத்துவத்தையும், அமைதியான முறையில் ஒன்றுகூதுவதற்கான சுதந்திரத்திற்கான உரிமைகளையும் இரு தரப்பும் மீண்டும் வலியுறுத்தின. 4.     ஐரோப்பிய ஒன்றியத்தால் நிதியளிக்கப்பட்ட நீதித்துறை சீர்திருத்தத் திட்டத்திலான முன்னேற்றத்தை வரவேற்ற ஐரோப்பிய ஒன்றியம், நீதிக்கான அணுகலை மேலும் மேம்படுத்தி மனித உரிமைகளை மேம்படுத்தவுள்ளது. இந்த விடயத்தில் ஐரோப்பிய ஒன்றியம் வழங்கிய ஆதரவை இலங்கை பாராட்டியது. 5. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை சீர்திருத்துவதற்காக மார்ச் 2022 இல் இலங்கை முன்னெடுத்த நடவடிக்கைகளை ஐரோப்பிய ஒன்றியம் அங்கீகரித்ததோடு, அதன் உறுதிமொழிகளுக்கு இணங்க மேலும் நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டியது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் சமீபத்திய பயன்பாடு குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கவலை தெரிவித்தது. பயங்கரவாதத் தடைச் சட்டம் மிகவும் அவசியமான சந்தர்ப்பங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டதாக இலங்கை உறுதியளித்துள்ளது. 2021-2022ஆம் ஆண்டில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதிகளை விடுவிப்பது குறித்த இலங்கையின் புதிய தகவல்கள் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டதுடன், குற்றம் சாட்டப்படாத பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்ய ஊக்குவித்துள்ளது. அரசியலமைப்பு, சர்வதேச நியமங்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளுக்கு இணங்க, 2023ஆம் ஆண்டில் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக ஒரு விரிவான சட்ட முன்மொழிவைத் தயாரிப்பதில் இலங்கை தனது வலுவான உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியது. 6.     இலங்கையும் ஐரோப்பிய ஒன்றியமும் சிவில் சமூகத்தை ஈடுபடுத்துவதன் மற்றும் அதன் அனைத்து பன்முகத்தன்மையிலும் செயற்படத் தேவையான இடத்தை வழங்குவதன் முக்கியத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்தியது. இந்த நடவடிக்கையில் இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது. 7.   இரு தரப்பினரும் சிறுபான்மையினரின் நிலைமை மற்றும் வெறுப்புப் பேச்சுக்கு தீர்வு காண எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடினர். பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக எடுக்கப்பட்ட சட்டமியற்றுதல் மற்றும் ஏனைய நடவடிக்கைகள், சிறுவர் தொழிலாளர் ஒழிப்பு உட்பட தொழிலாளர் உரிமைகளை மேம்படுத்துவதற்கு முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அவர்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர். ஒரே பாலின உறவுகளை குற்றமற்றதாக்குவதற்கான அழைப்பை ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் வலியுறுத்தியதுடன், இது தொடர்பான தனி உறுப்பினர் மசோதா குறித்தும் குறிப்பிட்டது. 8.      ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் ஒப்பந்த அமைப்புக்கள், சிறப்பு நடைமுறைகள் மற்றும் உலகளாவிய காலாந்தர மீளாய்வு செயன்முறை உள்ளிட்ட ஒத்துழைப்பு குறித்து இரு தரப்பும் கலந்துரையாடினர். மனித உரிமைகள் பேரவையுடனும் அதன் பொறிமுறைகளுடனும் தொடர்ந்தும் ஈடுபடுமாறு இலங்கையை ஐரோப்பிய ஒன்றியம் ஊக்குவித்தது. நிலையான அபிவிரு;ததிக்கான 2030 நிகழ்ச்சி நிரலின் கட்டமைப்பில் தமது ஒத்துழைப்பைத் தொடர இரு தரப்பும் ஒப்புக்கொண்டன. 9.  ஜ.எஸ்.பி. + கண்காணிப்பு செயன்முறை மற்றும் அதன் தேவைகள் குறித்து செயற்குழுவுக்கு புதிய தகவல்கள் வழங்கப்பட்டன. ஐரோப்பிய ஒன்றியம் அதன் ஜ.எஸ்.பி. + உறுதிமொழியில் இலங்கையின் உறுதியான முன்னேற்றத்தை ஊக்குவித்தது. இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் மத்திய ஆசியா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பொதுநலவாயப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் திருமதி. வருணி முத்துக்குமாரண மற்றும் ஐரோப்பிய வெளி நடவடிக்கை சேவையின் தெற்காசிய பிரிவின் பிரதிப் பணிப்பாளரும், தலைவருமான திருமதி. ரென்ஸ்ஜே டீரிங்க் ஆனகியோர் இச்செயற்குழுக்கான இணைத்தலைமையை வகித்தனர்.  Public Diplomacy Division Ministry of Foreign Affairs

இன்சுலின் உற்பத்தி… காலையில் ஒரு கிளாஸ் சீரகம் தண்ணீர் குடிச்சா இவ்ளோ நன்மை இருக்கு!

இன்சுலின் உற்பத்தி… காலையில் ஒரு கிளாஸ் சீரகம் தண்ணீர் குடிச்சா இவ்ளோ நன்மை இருக்கு! Source link

கரையோர மக்களே கவனம்.. வைகையில் கூடுதல் தண்ணீர் திறப்பு..!

வைகை அணையின் பாதுகாப்பு கருதி, அணைக்கு வரும் 2320 கன அடி நீர் முழுவதுமாக வெளியேற்றப்படுகிறது. இதனால், திண்டுக்கல், மதுரை, தேனி மாவட்டங்களின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையின் மொத்த கொள்ளளவு 71 அடியாகும். கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையில் இருந்து பாசனத்துக்கும் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது அணை மீண்டும் … Read more

வாட்ஸ்அப்பில் சாதிய பதிவு; கலவரமான பள்ளிக்கூடம் – மாற்றுச் சான்றிதழ் கேட்ட பெற்றோர்… என்ன நடந்தது?

விருதுநகர் மாவட்டம், மேலப்பரளச்சியில் இரண்டு சாதிப்பிரிவின் பிரச்னையால், 169 மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாக்கப்பட்ட சம்பவம் நடந்திருக்கிறது. இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து மேலப்பரளச்சி ஊர்வாசிகளிடம் கேட்கும்போது, “செங்குளம், வடக்குநத்தம், புல்வநாயக்கன்பட்டி, பொம்மநாயக்கன்பட்டி, ராஜகோபாலபுரம் ஆகிய 5 ஊர்களில் குறிப்பிட்ட சமுதாயத்தினர் அதிக அளவு வசித்து வருகின்றனர். அதைத் தவிர்த்து பரளச்சி, மேலையூர், வடக்குநத்தம் உட்பட சுற்றுவட்டார பகுதிகளில் பட்டியலினத்தவர்கள் பெருவாரியாக வசிக்கின்றனர். மற்ற ஊர்களில் உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகள் இருந்தாலும் மேலப்பரளச்சியில் உள்ள இந்தப் பள்ளியில் ஆசிரியர்கள் அதிக … Read more

பயிர் காப்பீடு திட்டத்துக்கு ரூ.2,339 கோடி ஒதுக்கீடு: விவசாயிகள் நவ.15-க்குள் காப்பீடு செய்ய அறிவுறுத்தல்

சென்னை: தமிழக விவசாயிகள் பயன்பெறும் வகையில் பயிர் காப்பீடு திட்டத்துக்கு ரூ.2,339 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. வரும்நவ.15ம் தேதிக்குள் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யுமாறு வேளாண் உற்பத்தி ஆணையர் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக வேளாண் உற்பத்தி ஆணையர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வெள்ளம், புயல் போன்ற இயற்கைச் சீற்றங்களால் பயிர்கள் பாதிக்கப்படும்போது, தமிழக விவசாயிகளின் நிதிச்சுமையைக் குறைக்க முதல்வர் ஸ்டாலின் 2022-23-ம் ஆண்டில் பயிர் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்துவதற்காக, மாநில அரசின் காப்பீட்டுக் கட்டணமானியமாக ரூ.2,339 … Read more

வாரணாசி மாவட்ட புதிய ஆட்சியர் எஸ்.ராஜலிங்கம் – உ.பி. பாஜக ஆட்சியில் தொடர்ந்து தமிழர்களுக்கு முக்கியத்துவம்

புதுடெல்லி: பாஜக ஆளும் உ.பி.யில் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், ஐஆர்எஸ் என குடிமைப்பணி அதிகாரிகளாக சுமார் 40 தமிழர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்களை முதல்வர் யோகி ஆதித்யநாத் முக்கியப் பதவிகளில் அமர்த்தியுள்ளார். இதில் பிரதமர் நரேந்திர மோடியின் மக்களவைத் தொகுதியான வாரணாசியில் மாவட்ட ஆட்சியராக தமிழரான எஸ்.ராஜலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். 2009-ம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான இவர், தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டம், கடையநல்லூரைச் சேர்ந்தவர். திருச்சி தேசிய தொழில்நுட்பக் கல்லூரியில் (தற்போதைய என்ஐடி) வேதிப்பொறியியலில் பட்டம் பெற்றவர். … Read more

முன்பதிவு தொடங்கியது… தெற்கு ரயில்வே ஸ்பெஷல் ரயில்- அதுவும் சேலம் வழியாக!

நாடு முழுவதும் முக்கிய வழித்தடங்களில் இயங்கும் ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் அவ்வப்போது சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தெற்கு ரயில்வே சார்பில் சமீபத்தில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியிருந்தது. அதாவது, கர்நாடக மாநிலம் விஜயபுராவில் இருந்து கேரள மாநிலம் கோட்டயத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இது சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியே செல்லும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 07385 என்ற எண் கொண்ட விஜயபுரா – கோட்டயம் வாராந்திர … Read more

ஆறு மாநில இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை: முனுக்கோடில் டிஆர்எஸ் முன்னிலை!

தெலங்கானா மாநிலம் முனுக்கோடு, ஹரியானாவின் ஆதம்பூர், மகாராஷ்டிராவின் கிழக்கு அந்தேரி, ஒடிசாவின் தாம்நகர், உத்தர பிரதேசத்தின் கோலா கோகர்நாத், பீகார் மாநிலத்தின் மொகாமா, கோபால்கஞ் உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் காலியாக இருந்த ஏழு சட்டப்பேரவை தொகுதிகளுக்கு கடந்த 4ஆம் தேதி இடைதேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிகபட்சமாக முனுகோடில் 77.55 சதவீத வாக்குகள் பதிவாகின. கிழக்கு அந்தேரியில் 31.74 சதவீதமும், ஆதம்பூரில் 75.25, தாம்நகரில் 66.63, கோகர்நாத்தில் 55.68, மொகாமாவில் 53.45, கோபால்கஞ்சில் 51.48 சதவீதமும் வாக்குகள் … Read more