வடிவேலு எடுக்கும் புதிய அவதாரம்

தமிழ் சினிமாவில் காமெடியன், ஹீரோ மற்றும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்தவர் வடிவேலு. பல ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது ரீ என்ட்ரி கொடுத்திருப்பவர், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படத்தில் ஹீரோவாகவும், மாமன்னன் படத்தில் குணச்சித்திர வேடத்திலும், சந்திரமுகி- 2 படத்தில் மீண்டும் காமெடியனாகவும் நடித்து வருகிறார். இந்நிலையில் முதன்முறையாக ஒரு படத்தில் வடிவேலு நெகட்டிவ் வேடத்தில் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. சந்தானம் நடித்த தில்லுக்கு துட்டு என்ற படத்தை இயக்கிய ராம் பாலா அடுத்தபடியாக … Read more

கெஜ்ரிவாலை ஹிட்லருடன் ஒப்பிட்டு பேனர்!!

டெல்லியில் பாஜக அலுவலகம் முன்பு அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை ஹிட்லருடன் ஒப்பிட்டு பேனர் வைக்கப்பட்டுள்ளது. பாஜக பிரமுகர் தஜிந்திர பால் சிங் பாகா பாஜக அலுவலகம் முன்பு, அரவிந்த் கெஜ்ரிவாலை ஹிட்லருடன் ஒப்பிட்டு பேனர் ஒன்றை வைத்துள்ளார். அந்த பேனரில், ‘தான் வாழும் நகரினை எரிவாயு கிடங்காக மாற்றி வைத்திருக்கும் உலகின் இரண்டாவது தலைவர் கெஜ்ரிவால். முதலாவது நபர் ஹிட்லர். பொது நலன் கருதி தஜேந்திர பால் சிங் பாகா என்று தனது பெயரையும் குறிப்பிட்டுள்ளார். … Read more

பயணிகள் ரயிலில் திடீரென பற்றிய தீ!!

மேற்கு வங்கம் – மும்பை எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் பயணிகள் அச்சம் அடைந்தனர். மேற்குவங்க மாநிலம் சாலிமாரில் இருந்து மும்பையில் உள்ள லோக்மான்யா திலக் டெர்மினசுக்கு எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டு இருந்தது. இந்த ரயில் இன்று காலை 8.43 மணிக்கு நாசிக் ரோடு ரயில் நிலையத்தில் நின்று கொண்டு இருந்தது. அப்போது திடீரென ரயிலின் பார்சல் வேன் பெட்டியில் திடீரென தீப்பிடித்தது. தகவல் அறிந்து தீயணைப்பு துறையினர் விரைந்து சென்றனர். அவர்கள் … Read more

இனிமேல்தான் மழையே தொடங்க போகுது : வெதர்மேன் எச்சரிக்கை!!

நவம்பர் 9ஆம் தேதிக்கு பிறகுதான் வடகிழக்கு பருவமழை தீவிரமாக இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் என்று அழைக்கப்படும் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தகவல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கி தீவிரமடைந்து ஆங்காங்கே வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் நவம்பர் 9ஆம் தேதிக்குப் பிறகு வடகிழக்குப் பருவமழை தீவிரமாக இருக்கும் என பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். தற்போது மேலடடுக்கு சுழற்சி காரணமாக வடகிழக்குப் பருவமழை பெய்து வருகிறது என்றும் நவம்பர் 9க்குப் … Read more

என்னால் பிரிந்த அண்ணன், அண்ணி; அவர்கள் சேர்ந்து வாழ நான் வீட்டிலிருந்து விலகட்டுமா? #PennDiary90

அம்மா, அப்பா, அண்ணன், நான் என அன்பான குடும்பம் எங்களுடையது. மூன்று வருடங்களுக்கு முன் எனக்குத் திருமணம் முடித்தனர் வீட்டில். சொந்தமாக டாக்ஸி வைத்து ஓட்டிக்கொண்டிருந்தார் கணவர். விருப்பமே இல்லாமல் வாழ்வதுபோல்தான் வாழ்ந்தார் என்னுடன். நான் நான்கு மாத கர்ப்பிணியாக இருந்தபோது, வீட்டை விட்டு எங்கோ போய்விட்டார். புகுந்த வீட்டினரோ, ‘கல்யாணத்துக்கு முன்னாடியும் இப்படித்தான் வீட்டுல யார்கிட்டயும் ஒட்டாம, விட்டேத்தியா இருந்தான். கல்யாணம் பண்ணினா சரியாகிடுவான்னு நினைச்சோம். ஆனா, மாசமா இருக்குற பொண்டாட்டியக்கூட விட்டுட்டுப் போயிட்டானே’ என்றார்கள். … Read more

தமிழகத்தில் நாளை நடைபெற இருந்த ஆர்எஸ்எஸ் பேரணி ஒத்திவைப்பு: நிபந்தனைகளுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய முடிவு 

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய உள்ளதால் தமிழகத்தில் நாளை (நவ.6) நடைபெற இருந்த பேரணி ஒத்திவைக்கப்படுவதாக ஆர்எஸ்எஸ் அறிவித்துள்ளது. தமிழகத்தில் 44 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த நாளை (நவ.6) அனுமதி வழங்குமாறு காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் நேற்று (நவ.4) உத்தரவிட்டது. இந்த உத்தரவில், சுற்றுச்சுவர் பாதுகாப்புடன் கூடிய காலி மைதானம் அல்லது விளையாட்டு அரங்குகளில் மட்டும் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தை நடத்த வேண்டும். அந்த இடத்துக்குச் செல்லும் வழியில் … Read more

கும்பகர்ணன் போல் தூங்கி கொண்டிருந்தது ஏன்? – சென்னை மாநகராட்சிக்கு ஐகோர்ட் கேள்வி!

விதிமீறல் கட்டிடத்துக்கு எதிராக ஆண்டுக் கணக்கில் நடவடிக்கை எடுக்காமல் கும்பகர்ணன் போல் தூங்கி கொண்டிருந்தது ஏன் என சென்னை மாநகராட்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று விதிகளை மீறி கட்டிய கட்டுமானங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி, அந்த குடியிருப்பில் தரைத்தளம் மற்றும் முதல் மாடியின் உரிமையாளர் விஜயபாஸ்கர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 5,000 … Read more

ஒவ்வொரு நிலையிலும் உன்னை நேசிக்கிறேன்…விராட் கோலியின் பிறந்த நாளில் உருகும் அனுஷ்கா சர்மா: புகைப்படங்கள்

விராட் கோலியின் வேடிக்கையான புகைப்படங்களை வெளியிட்டு மனைவி அனுஷ்கா வாழ்த்து. ஒவ்வொரு நிலையிலும் வடிவத்திலும் வழியிலும் உன்னை நேசிக்கிறேன் என உருக்கம். விராட் கோலியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது மனைவி அனுஷ்கா சர்மா வேடிக்கையான சில புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து தனது பிறந்த நாள் வாழ்த்தினை தெரிவித்துள்ளார். ஆவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் வீராட் கோலி நவம்பர் 5ம் திகதியான இன்று தனது … Read more

மதுரை – காசி இடையே ஆன்மிக சுற்றுலா ரயில் நவம்பர் 18ந்தேதி புறப்படுகிறது…

மதுரை: மதுரையில் இருந்து காசி வரையிலான பாரத் கவுரவ் என்ற பெயரிலான சுற்றுலா ரயில் நவம்பர் 18ந்தேதி மதுரையில் புறப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கார்த்திகை அமாவாசையை முன்னிட்டு  இந்த ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஆன்மிக சுற்றுலாவுக்காக இந்தியன் ரயில்வே பாரத் கௌரவ் சுற்றுலா ரயிலை இயக்கி வருகிறது. இந்த ரயில் நவம்பர் 18ந்தேதி மதுரையில் புறப்பட்டு, காசி வரை சென்றுவிட்டு, இறுதியில் நவம்பர் 26ந்தேதி ராமேஸ்வரம் வருகை தந்து, 27ந்தேதி மீண்டும் … Read more