பள்ளி மாணவிக்கு சக மாணவன் மஞ்சள் கயிறு கட்டிய விவகாரம்; நீதிமன்றம் அதிருப்தி

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் 16 வயது மாணவிக்கு, சக மாணவர் ஒருவர் மஞ்சள் கயிற்றை கட்டுவது போன்ற காட்சிகள், சமூக வலைதளத்தில் பரவியது. கடந்த செப்டம்பர் 2ம் தேதி நடந்த இந்த சம்பவம் தொடர்பான வீடியோ பதிவுகள், 12 நாட்களுக்கு பின் சமூக வலைதளத்தில் வெளியானது. இதையடுத்து அக்டோபர் 10ம் தேதி இதுதொடர்பாக அந்த மாணவனுக்கு எதிராக சிதம்பரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதேபோல, மாவட்ட குழந்தைகள் நலக்குழு, மாணவியின் வீட்டுக்குச் சென்று அவரை அழைத்துக் … Read more

இமாச்சலப்பிரதேச காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் 300 யூனிட் இலவச மின்சாரம்.!

300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று இமாச்சலப்பிரதேச காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இமாச்சலப்பிரதேச தேர்தல் வரும் 12 ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு அக்கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் மாட்டுச்சாணம் கிலோ 2 ரூபாய்க்கு வாங்கப்படும் என்றும் பெண்களுக்கு மாதம் ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்படும் எனவும் தேர்தல் அறிக்கையில் வெளியீடு.   Source link

இரத்த ஆறு ஓடும்… கெர்சனில் இறுகும் ரஷ்ய- உக்ரைன் போர்

கெர்சனில் இருந்து வெளியேற்றப்பட்டால் அது உண்மையில் பெரும் பின்னடைவாகவே கருதப்படும் கிரிமியா தீபகற்பத்தை மீட்பதே உக்ரைனின் உறுதியான இலக்காக அவர்கள் தற்போது மாற்றிக்கொண்டுள்ளனர். உக்ரைனின் கெர்சனில் ரஷ்யா மரண அடி வாங்கும் எனவும், பிராந்தியத்தை விட்டே அவர்கள் மொத்தமாக வெளியேறுவர் எனவும் முக்கிய தளபதி ஒருவர் தெரிவித்துள்ளார். கெர்சனில் எதிர்வரும் வாரங்களில் ரத்த ஆறு ஓடும் என்றே உக்ரைன் தரப்பு கூறி வருகிறது. கெர்சன் நகரை தக்க வைத்துக்கொள்ள உக்ரைன் கடுமையாக போராடும் என்ற நிலையில், கிரிமியாவுக்கான … Read more

3 மில்லியன் வியூஸ்-களை கடந்தது விஜய் நடித்த ‘வாரிசு’ படத்தின் ரஞ்சிதமே பாடல்…

விஜய் – ராஷ்மிகா மந்தனா இருவர் நடிப்பில் வெளியாக உள்ள வாரிசு படத்தின் பர்ஸ்ட் சிங்கள் பாடல் ரஞ்சிதமே இன்று வெளியானது. தமன் இசையில் விஜய் மற்றும் மானசி பாடியுள்ள இந்த பாடலின் ப்ரோமோ நேற்று முன்தினம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இன்று மாலை இந்த பாடல் வெளியானது முதல் இதுவரை 3.1 மில்லியன் வியூஸ்-களை கடந்துள்ளது. வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரித்துள்ள இந்தப் படம் பொங்கலுக்கு வெளியாகிறது.

அமைதியாக உள்ள தமிழகத்தில் கலவரத்தை தூண்ட நினைப்பவர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் அடக்குவார்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி

பெரம்பூர்: அமைதியாக உள்ள தமிழகத்தில் மத கலவரத்தை தூண்ட நினைப்பவர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் அடக்குவார் என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார். சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளிலும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் இன்று துவங்கப்பட்டது. பட்டாளத்தில் உள்ள சென்னை உயர்நிலைப் பள்ளியில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு , மருத்துவ முகாமை துவக்கி வைத்தார். இதில், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, தாயகம் கவி எம்எல்ஏ உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த முகாமில், பொதுமக்களுக்கு … Read more

நாடார் மகாஜன சங்கத் தேர்தலை நடத்த தடையில்லை: உயர்நீதிமன்ற மதுரைகிளை ஆணை

சென்னை: நாளை நாடார் மகாஜன சங்கத் தேர்தலை நடத்த தடையில்லை  என்று உயர்நீதிமன்ற மதுரைகிளை அறிவித்துள்ளது. யாரும் எந்த பிரச்சையிலும் ஈடுபடக்கூடாது எனவும் உரிய பாதுகாப்பை மதுரை எஸ்.பி. வழங்கவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணையிட்டுள்ளது.

பண்ணை, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது தாய், தந்தை, 2 மகன்கள் கோடாரியால் வெட்டிக் கொலை: தண்ணீர் தொட்டியில் விழுந்து போதை விவசாயி தற்கொலை

ஜோத்பூர்: ராஜஸ்தானில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தாய், தந்தை, 2 மகன்களை கோடாரியால் வெட்டிக் கொன்ற போதை விவசாயி, தானும் தண்ணீர் தொட்டியில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டம் லோஹாவத் பகுதியை சேர்ந்த விவசாயி சங்கர் லால் (38). இவர் தனது தந்தை (60), தாய் சம்பா (55), மனைவி மற்றும் மகன்கள் லட்சுமணன் (14), தினேஷ் (6) ஆகியோருடன் கூட்டு குடும்பமாக வசித்து … Read more

‘தேவர்மகன், விக்ரம் என கேரக்டரின் குணநலனுக்கு ஏற்ப சண்டைக்காட்சி’ -கமலின் ஆக்‌ஷன் அவதாரம்

கமல்ஹாசன் மீது ஏராளமான பிம்பங்கள் இருந்தாலும் உடன் நினைவுக்கு வராத பிம்பம் சண்டைக் காட்சிகளில் கலக்கும் நடிகர் என்பது. தமிழ் சினிமா ரசிகர்களிடத்தில் கமல்ஹாசன் என்றாலே நல்ல நடிகர், காதல் காட்சிகளில் கலக்குபவர், நன்றாக பாடக் கூடியவர், நன்றாக நடனம் ஆடக்கூடியவர், காமெடி படங்களிலும் வல்லவர் என்ற பிம்பமே தோன்றும். ஆனால் கடந்த 30 ஆண்டுகளில் ஏராளமான வித்தியாசமான ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்தவர் யார் என்று பார்த்தால் அதில் கமலே முண்ணனியில் இருப்பார். தமிழ் சினிமா சண்டைக்காட்சிகள் … Read more

செல்லம்மா சீரியலில் மீண்டும் என்ட்ரி கொடுத்த அர்னவ்

சின்னத்திரை நடிகரான அர்னவ் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் செல்லம்மா தொடரில் கதாநாயகானாக நடித்து வந்தார். அர்னவ்வின் மனைவியும், சின்னத்திரை நடிகையுமான திவ்யா ஸ்ரீதர், அர்னவ் தன்னை அடித்து துன்புறுத்துவதாக சமீபத்தில் போலீஸில் புகார் அளித்திருந்தார். காவல்துறை அர்னவை கைது செய்த நிலையில், நீதிமன்றம் அர்னவ்வை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி உத்தரவிட்டது. இதற்கிடையில் அர்னவ் செல்லம்மா சீரியலை விட்டு விலகிவிட்டதாகவும், அவருக்கு பதில் வேறொரு நடிகர் நடிக்கப்போவதாகவும் செய்திகள் வெளியாயின. தற்போது ஜாமீன் கிடைத்து வெளிவந்துள்ள … Read more

தொடரில் இருந்து வெளியேறியது நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா!!

டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து நடப்பு சாம்பியனும், போட்டியை நடத்தும் அணியுமான ஆஸ்திரேலியா வெளியேறியது. சூப்பர்12 சுற்றில் இலங்கை – இங்கிலாந்து இடையே போட்டி நடைபெற்றது. குரூப் 1இல் நியூசிலாந்து ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் சமமான புள்ளிக்கணக்கில் இருந்தன. இந்நிலையில் இலங்கையை வீழ்த்தி இங்கிலாந்து அணி குரூப் 1இல் இருந்து அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இன்று நடைபெற்ற போட்டியில் முதல் பேட் செய்த இலங்கை அணி 20 ஓவர்கள் … Read more