சென்னை: துப்பாக்கி முனையில் சுற்றி வளைப்பு – பிரபல ரௌடி சீசிங் ராஜா சிக்கியது எப்படி?!

சென்னை, கிழக்கு தாம்பரம், ராமகிருஷ்ணாபுரம், தாங்கல்கரை தெருவைச் சேர்ந்த ராஜா என்கிற சீசிங் ராஜா (48) . சிட்லப்பாக்கம் காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு (‘A+’ பிரிவு) குற்றவாளியாவார். இவர் தன்னுடைய கூட்டாளிகளுடன் சேர்ந்து தென்சென்னை, புறநகர் மற்றும் பிற பகுதிகளில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாக காவல்துறையினருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. ஏற்கெனவே சீசிங் ராஜா மீது சென்னை, ஆந்திரா காவல் நிலையங்களில் 5 கொலை வழக்குகளும், 5 கொலை முயற்சி வழக்குகளும், … Read more

புதுச்சேரி வளர்ச்சிக்காக மத்திய அரசு ரூ.1400 கோடி சிறப்பு நிதி: எல்.முருகன் தகவல்

புதுச்சேரி: புதுச்சேரி வளர்ச்சிக்காக மத்திய அரசின் சிறப்பு நிதியாக ரூ.1400 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். 2 நாள் பயணமாக புதுச்சேரிக்கு வருகை தந்துள்ள அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். இன்று கட்சி தலைமை அலுவலகத்தில் பாஜக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: ‘‘புதுச்சேரி வளர்ச்சிக்காக மத்திய அரசின் சிறப்பு நிதியாக ரூ.1400 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியானது நமக்கு வரபிரசாதமாக இருக்கக்கூடும். … Read more

நீட் பயிற்சிக்கு 'ஹைடெக் ஆய்வகங்கள்'.? அதெல்லாம் சும்மா டம்மி – அரசை தாக்கும் அன்புமணி

அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சியை ஏதோ கடமைக்கு வழங்கப்படும் ஒன்றாக கருதாமல், தொழில் முறையானதாக மாற்ற வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது; தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11, 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நீட், ஐ.ஐ.டி நுழைவுத்தேர்வு ஆகியவற்றை எதிர்கொள்வதற்கான பயிற்சி வகுப்புகள் வரும் 19ம் தேதி தொடங்கி ஒவ்வொரு சனிக்கிழமையும் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருக்கிறது. அரசு … Read more

சபரிமலை பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ் – கேரள அரசு செம ஏற்பாடு!

சபரிமலைக்கு பெரு வழிப் பாதை வழியாக வரும் பக்தர்கள் வசதிக்காக புதிய செயலி உருவாக்கப்பட்டு உள்ளதாக கேரள மாநில வனத் துறை அமைச்சர் ஏ.கே.சசீந்திரன் தெரிவித்து உள்ளார். கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் உலக புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலுக்கு, உள்ளூரில் இருந்தும், உள்நாட்டில் இருந்தும், வெளி நாடுகளிலும் இருந்தும் லட்சக் கணக்கான பக்தர்கள் வருவர். இந்நிலையில், சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடப்பு மண்டல மகர விளக்கு சீசன் வரும் 16 … Read more

தமிழகம் முழுவதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 412 மையங்களில் இலவச நீட் பயிற்சி: நவம்பர் 3வது வாரத்தில் தொடக்கம்

வேலூர்: தமிழகத்தில் உள்ள அரசு, நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இந்தாண்டுக்கான இலவச நீட், ஜேஇஇ பயிற்சி வகுப்பு 412 மையங்களில் நவம்பர் 3வது வாரம் முதல் நடைபெறும் என பள்ளி கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் தெரிவித்தார். இதுகுறித்து அவர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: நடப்பு கல்வியாண்டில் அரசு, நிதியுதவிபெறும் பள்ளிகளில் மேல்நிலைப்பள்ளி (பிளஸ்1, பிளஸ்2) பயிலும் விருப்பம் உள்ள மாணவர்களுக்கு உயர்கல்வி போட்டி தேர்வுகளுக்கு தயார் செய்யும் வகையில் … Read more

சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறியதாக இதுவரை ரூ.1.41 கோடி அபராதம்

சென்னை: சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறியதாக இதுவரை ரூ.1.41 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின் படி கடந்த 10 நாட்களில் விதிக்கப்பட்ட அபராதத்தில் அதிகபட்சமாக ஹெல்மெட் அணியாத 5,096 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவின் சிபிஐ அதிகாரிகள் எனக்கூறிக் கொண்டு ஜெர்மன் பெண்ணிடம் கொள்ளையடித்த ஈரான் நாட்டு தந்தை, மகன் கைது: தலைநகர் டெல்லியில் நூதன மோசடி அம்பலம்

புதுடெல்லி: டெல்லியில் மருத்துவ சிகிச்சைக்கு சென்ற பெண்ணிடம் கொள்ளையடித்த ஈரானிய தந்தை, மகன் மற்றும் 4 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தலைநகர் டெல்லியில் தங்களை சிபிஐ அதிகாரிகள் எனக்கூறிக் கொண்டு ஜெர்மனி பெண் உள்ளிட்ட சிலரிடம் கொள்ளையடித்த கும்பலில் ஈரான் நாட்டை சேர்ந்த தந்தை மற்றும் மகனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும், அவர்களுக்கு போலி அடையாள அட்டைகளை தயாரித்து கொடுத்த 4 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். … Read more

பிளாஸ்டிக் பாட்டில்களில் மதுபானம் விற்பனை? – பதிலளித்த டாஸ்மாக் நிறுவனம்

மதுபானங்களை பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்யும் திட்டம் ஏதும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிறுவனம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், பிரதாப் என்பவர் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவில், டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை கண்ணாடி பாட்டில்களுக்கு பதில் பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்ய முடிவு செய்து தமிழ்நாடு அரசு கடந்த 1996ம் ஆண்டு அரசாணை பிறப்பித்துள்ளதாக தெரிவித்திருந்தார். மதுவை கண்ணாடி பாட்டில்களுக்கு பதில் பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்தால் சுற்றுச்சூழல் பாதிக்கும், ஏற்கனவே … Read more

மோர்பி பாலம் புனரமைப்பில் இத்தனை கோடிகள் ஊழலா? – விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!

குஜராத் மோர்பி பாலம் இடிந்து விழுந்த சம்பவத்தில், நடத்தப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகி உள்ளன. விசாரணையில், பாலம் புனரமைப்பு பணிகளுக்காக 2 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் ரூ.12 லட்சத்தை மட்டும் தான் செலவிட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே 100 ஆண்டுகள் பழமையான தொங்கு பாலம் அமைக்கப்பட்டிருந்து. இந்த பாலத்தை சீரமைக்கும் பணி 6 மாதங்களாக நடைப்பெற்று, கடந்த 26ஆம் தேதி திறக்கப்பட்டது. பாலம் சீரமைக்கப்பட்டு திறக்கப்பட்டது முதல் … Read more

சர்ச்சையில் கேரள பெண் ஐ.ஏ.எஸ்.,| Dinamalar

திருவனந்தபுரம் :கேரளாவில் பொது நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கலெக்டர் திவ்யா, தன் குழந்தையுடன் வந்ததும், குழந்தையை துாக்கி வைத்தபடி மேடையில் பேசியதும், சர்ச்சையையும், விவாதத்தையும் ஏற்படுத்தி உள்ளது. கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள பத்தனம்திட்டா மாவட்ட கலெக்டராக இருப்பவர், திவ்யா எஸ் அய்யர். சமீபத்தில் பத்தனம்திட்டாவில் தனியார் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த திரைப்பட விழா நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற திவ்யா, … Read more