பவன் கல்யாணை பின்தொடரும் மர்ம நபர்கள் : போலீசில் புகார்

தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் தற்போது தனது புதிய படமான ஹரிஹர வீர மல்லு என்ற படத்தில் நடித்து வருகிறார். கடந்த சில நாட்களாகவே யாரோ சில மர்ம நபர்கள் பவன் கல்யாணை பின் தொடர்ந்து நோட்டம் பார்த்து வருவதாக டோலிவுட் மீடியாக்களில் ஒரு பரபரப்பு செய்தி வெளியாகியுள்ளது. அதோடு, கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ஜூபிலி ஹில்சில் உள்ள பவன் கல்யாண் வீட்டிற்கு வந்த இருவர் அவரது பாதுகாவலரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்கள். அதையடுத்து ஐதராபாத் … Read more

பாம்புக்கு பயந்து அசைவம் சாப்பிடாத வினோத கிராமம்!!

ஒடிசாவில் மாநிலம் தேன்கனல் மாவட்டம் பென்டசாலியா கிராம மக்கள் பாம்பு கடிக்கு பயந்து அசைவ உணவே சாப்பிடுவதில்லை. அதன் பின்னணி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. இக்கிராம மக்கள் அசைவ உணவு சாப்பிட்டால் பாம்பு கடிக்கும் என்று நம்புவதாக தெரிவிக்கின்றனர். காலம், காலமாக இதனை கடைபிடித்து வருவதாகவும் அவர்கள் கூறினர். கிராமத்தின் நம்பிக்கைக்கு எதிராக யாராவது அசைவ உணவு சாப்பிட்டால் அவர்களுக்கு கண்பாதிப்பு ஏற்படும், உடல் நலக்குறைபாடுகள் உருவாகும் என்றும் முன்னோர் கூறியுள்ளதாக தெரிவித்தனர். இதனால் அந்த கிராமத்தில் … Read more

உஷார்! வரும் 9ஆம் தேதி உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி!!

இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 9ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், வரும் 9ஆம் தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி வட மேற்கு திசையில் அடுத்த 48 மணிநேரத்தில் நகரக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குமரிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நாளை, செங்கல்பட்டு, … Read more

Coffee with Kadhal விமர்சனம்: இதில் காதலும் இல்லை; காமெடியும் இல்லை!

மூன்று சகோதரர்களும் சிக்கல்கள் நிறைந்த அவர்களின் காதல் கதைகளும்தான் இந்த `காஃபி வித் காதல்’. `அரண்மனை’, `கலகலப்பு’ படங்களிருந்து வெளியே வந்து காமெடியை விடக் காதல் கொஞ்சம் அதிகமாக இருக்கும் ஒரு ரொமான்டிக் காமெடி படத்தைக் கொடுக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் சுந்தர்.சி. மூத்த அண்ணன் ஸ்ரீகாந்த் இசை கற்றுத்தரும் ஆசிரியர். வாலிபம் ஓய்ந்த திருமண வாழ்க்கையால் சலிப்படைந்து கிடக்கும் கணவர். அதிகம் பணம் ஈட்டும் வேலை, லிவ்-இன் ரிலேஷன்ஷிப் என பெருநகர வாழ்க்கையில் வெற்றிகொண்ட இளைஞனாக … Read more

ஆளுநரை மாற்றுவது நடக்காத ஒன்று: மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்

புதுச்சேரி: “ஆளுநரை மாற்றும் விஷயங்கள் நடக்காத ஒன்று. திமுக அரசு நீட்டுகிற கோப்புகளில் கையெழுத்திடும் கைப்பாவையாக ஆளுநர் இல்லை” என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார். 2 நாள் பயணமாக புதுச்சேரிக்கு வருகை தந்துள்ள அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். இன்று கட்சி தலைமை அலுவலகத்தில் பாஜக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “இந்திய அரசியல் சட்டப்படி தமிழக ஆளுநருக்கு கருத்து கூற உரிமையும், சுதந்திரமும் உள்ளது. … Read more

பள்ளி மாணவர்களுக்கு ஷாக் நியூஸ் – தமிழக அரசு இப்படியொரு அறிவிப்பு!

மழையால் விடுமுறை அளிக்கும் நாட்களை ஈடு செய்ய சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும் என, தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்து உள்ளார். திருச்சி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில், திருச்சி அரியமங்கலம் எஸ்.ஐ.டியில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் இன்று நடைபெற்றது. இந்த முகாமை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தொழிலாளர் நலத் துறை அமைச்சர் கணேசன் ஆகியோர் … Read more

பெண்களுக்கு மாதம் ரூ.1,500: காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி!

இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவையின் பதவிக்காலம் 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் தேதியுடன் முடிவடைகிறது. மொத்தம் 68 தொகுதிகளை கொண்ட இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் ஒரே கட்டமாக நவம்பர் 12ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும், டிசம்பர் 8ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து, அம்மாநிலத்தில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன. அம்மாநிலத்தில் பாஜக ஆட்சியில் உள்ள நிலையில், மீண்டும் ஆட்சியை பிடிக்க அக்கட்சி … Read more

சிவகார்த்திகேயனின் மாவீரன் சூட்டிங் நிறுத்தப்பட்டது ஏன்?

தமிழ் திரைப்படத்தின் உட்ச நட்சத்திரமாக மாறியிருக்கும் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படம் தீபாவளிக்கு வெளியாகி தோல்வியை சந்தித்தது. இதனால் அடுத்தபடத்தில் கம்பேக் கொடுக்கும் கட்டாயத்தில் இருக்கும் அவர், மாவீரன் படத்தின் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். இந்தப் படத்தை மண்டேலா படத்தை இயக்கி தேசிய விருது பெற்ற இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கிக் கொண்டிருக்கிறார். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இயக்குநர் சங்கரின் மகள் அதிதி சங்கர் நடிக்கிறார்.  ஆகஸ்ட் மாதம் பூஜையுடன் தொடங்கிய ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. படத்தின் … Read more

கென்யாவில் 40 ஆண்டுகளில் இல்லாத வறட்சியினால் 205 யானைகள் இறப்பு..!

கென்யா நாட்டில் நிலவும் வறட்சியினால் 205 யானைகள் இறந்துள்ளன. 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அங்கு வறட்சி நிலவுவதால் அம்போசெலி, சம்புரு, டைட்டா டிவிட்டா பகுதிகளில் உள்ள காடுகளில் யானை உள்ளிட்ட விலங்குகளுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை. கடந்த 9 மாதத்தில் 205 யானைகள் இறந்ததாக கென்யா அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இறந்த குட்டியை தாய் யானை பரிதவிப்போடு பார்க்கும் காட்சி, எழுந்து நிற்க முடியாத யானையை வனத்துறையினர் கயிறு கட்டி இழுத்த போதும் அந்த யானை நிலைகுலைந்து … Read more

2023ஆம் ஆண்டில் பிரான்சில் நிகழவிருக்கும் இரண்டு மிக முக்கிய மாற்றங்கள்

பிரான்ஸ் நாட்டில் 2023ஆம் ஆண்டில் இரண்டு மிக முக்கிய மாற்றங்கள் நிகழவிருக்கின்றன. குறிப்பாக பிரான்சில் வீடு வைத்திருக்கும் வெளிநாட்டவர்கள் மீது இந்த மாற்றங்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த இருக்கின்றன. 2023ஆம் ஆண்டு அமுலுக்கு வரும், ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய உள்நுழைவு மற்றும் வெளியேற்ற அமைப்பு (EU’s new Entry and Exit System – EES) குறித்து ஒருவேளை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். நீங்கள் second-home owner in France என்னும் பிரான்சில் வீடு வைத்திருக்கும் வெளிநாட்டவராக இருப்பீர்களானால், … Read more