தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு: செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 500 கனஅடி உபரிநீர் திறப்பு; கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

குன்றத்தூர்: காஞ்சிபுரம் கலெக்டர் உத்தரவையடுத்து செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வினாடிக்கு 500 கன  அடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.இதனால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப் பட்டுள்ளது. சென்னை புறநகர் பகுதிகளில் சில நாட்களாக தொடர்ந்து பெய்த மழையால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கடந்த 4 தினங்களுக்கு முன்பு இந்த ஏரியில் இருந்து 100 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து மழைநீர் வரத்து உள்ளதாலும், ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து கொண்டிருப்பதாலும் உபரிநீர் திறப்பதை 500 கன அடியாக … Read more

தமிழ்நாடு முஸ்லிம் முனேற்றக்கழகத்தின் தலைமை நிர்வாகிகள் தேர்வு: தலைவராக எம்.எச்.ஜீவாஹிருல்லா

திருச்சி: தமிழ்நாடு முஸ்லிம் முனேற்றக்கழகத்தின் தலைமை நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தலைவராக எம்.எச்.ஜீவாஹிருல்லா, பொதுசெயலாளராக ஜெ.ஹாஜா கனி, பொருளாராக என்.ஷஃபியுல்லாஹ் கான் தேர்வு செய்துள்ளனர். திருச்சி சமயபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த தலைமை பொதுக்குழு தேர்தலில் நிர்வாகிககளை தேர்வு செய்துள்ளனர்.

அரசியல் சாசன அமர்வு விசாரித்த உயர்சாதி ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீட்டுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் நவ.7-ல் தீர்ப்பு

டெல்லி: அரசியல் சாசன அமர்வு விசாரித்த உயர்சாதி ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீட்டுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில்  நவ.7-ல் தீர்ப்பு அளிக்கிறது. நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு 10% இடஒதுக்கீட்டை உயர்சாதியினருக்கு 2019-ம் ஆண்டு அறிவித்தது

விவசாயி அடித்துக் கொலை – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர்மீது பாய்ந்த குண்டாஸ்!

தேனியில் கட்டையால் அடித்து விவசாயியை கொலைசெய்த வழக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. தேனி மாவட்டம் போடி அருகே தேவாரம் பேருந்து நிலைய பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி யோக ஈஸ்வரன் (35). இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த மணிகண்டன் (50) என்பவருக்கும் நில பிரச்னை தொடர்பாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த முன் விரோதம் காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் மணிகண்டன், இவரது மனைவி சுந்தர லட்சுமி (47), மகன் … Read more

‘படப்பிடிப்பில் எனக்கு ஆச்சர்யமளித்தது இது’ – பொன்னியின் செல்வன் வெற்றிவிழாவில் மணிரத்னம்

‘பொன்னியின் செல்வன்’ படம் வெளியாகி வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சென்னை தாஜ் கோரமண்டலில் படக்குழுவினர் இன்று சந்தித்தனர். இந்நிகழ்வில் இயக்குநர் மணிரத்னம், நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, பார்த்திபன், தயாரிப்பாளர் சுபாஷ்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் பார்த்திபன் பேசியபோது, “குதிரைகள் நன்றாக ஓடும். ஒருவேளை இந்தப் படத்தை குதிரைகள் பார்த்தால், ‘என்ன இந்தப் படம் நம்மை விட வேகமாய் ஓடுகிறது!’ என ஆச்சர்யப்பட வாய்ப்பு உண்டு. என்னுடைய சந்தோஷம் என்ன என்றால் இப்படி ஒரு படத்தை … Read more

நவ. 14-ல் ஏவ நாசா முடிவு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கேப் கனாவெரல் : நிலவுக்கு மனிதனை அனுப்பும், , ‘ஆர்டெமிஸ்’ திட்டத்தின் சோதனை முயற்சி, இயந்திர கோளாறு காரணமாக மூன்று முறை ஒத்தி வைக்கப்பட்டதையடுத்து. வரும் 14-ம் தேதி சோதனை நடத்திட நாசா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா 1969ல் முதன்முறையாக மனிதர்களை நிலவுக்கு அனுப்பி சாதனை படைத்தது. இந்நிலையில், மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்புவதற்கான, ‘ஆர்டெமிஸ்’ திட்டத்தை நாசா துவங்கியது. அது, … Read more

ஆயிஷா தப்பானவரா? நடிகர் விஷ்ணு விளக்கம்

டிக் டாக் மூலம் பிரபலமான ஆயிஷா இன்று சின்னத்திரையில் நடிகையாக பெரும் புகழை சம்பாதித்துள்ளார். தற்போது பிக்பாஸ் சீசன் 6-லும் போட்டியாளராக களமிறங்கி விளையாடி வருகிறார். இந்நிலையில், ஆயிஷாவின் காதலர் என்று சொல்லி வரும் தேவ் என்கிற நபர் ஊடகங்களில் ஆயிஷா தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் ஆயிஷாவுக்கு பல காதலர்கள் இருப்பதாகவும் கூறி வருகிறார். ஜீ தமிழ் 'சத்யா' சீரியலில் ஆயிஷாவுடன் இணைந்து ஹீரோவாக நடித்த விஷ்ணு மீதும் தேவ் குற்றம் சுமத்தியிருந்தார். இதனையடுத்து தன் மீது வைக்கப்பட்டுள்ள … Read more

இந்தியாவை பாருங்கள்; திறமையால் முன்னேறுகின்றனர்: புடின் புகழாரம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மாஸ்கோ: இந்தியர்கள் திறமைசாலிகள், முயற்சி செய்பவர்கள் எனக்கூறியுள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், வளர்ச்சியில் இந்தியா சிறப்பான இடத்தை அடையும் ஆற்றல் உள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை எனக்கூறியுள்ளார். ரஷ்ய ஒற்றுமை தினம் (நவ.,4) முன்னிட்டு, நடந்த நிகழ்ச்சியில் புடின் பேசியதாவது: நாட்டின் வளர்ச்சிக்கு உந்து சக்தியாக இந்தியர்கள் உள்ளனர். அவர்கள் திறமைசாலிகளாகவும், முயற்சி செய்பவர்களாகவும் உள்ளனர். இதன் மூலம் இந்தியா சிறப்பான இடத்தை அடையும். வளர்ச்சி அடிப்படையில், … Read more

மாணவிக்கு மஞ்சள்கயிறு கட்டிய விவகாரம் : கைது செய்த போலிசுக்கு நீதிபதிகள் கண்டனம்.! 

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த மாணவிக்கு சக மாணவர் பேருந்து நிலையத்தில் வைத்து மஞ்சள் கயிறு கட்டிய வீடியோ வைரலானதை தொடர்ந்து இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.  இதைத் தொடர்ந்து, அக்டோபர் 10ஆம் தேதி அந்த மாணவனுக்கு எதிராக சிதம்பரம் நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து மாணவனை கைது செய்தனர். தொடர்ந்து, மாணவியின் வீட்டிற்கு சென்று அவரை அழைத்துக்கொண்டு அரசுபெண்கள் காப்பகத்தில் சேர்த்தனர். இது குறித்து மாணவியின் பெற்றோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் … Read more

ரஷ்யாவுக்கு ட்ரோன்கள் வழங்கியதை ஒப்புக்கொண்ட ஈரான்… உலகச் செய்திகள்

ரஷ்யாவுக்கு ட்ரோன்கள் வழங்கியதை ஒப்புக்கொண்ட ஈரான்… உலகச் செய்திகள் Source link