வெளியானது விஜய் பாடியுள்ள ரஞ்சிதமே பாடல்!!

வம்சி இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தின் முதல் சிங்கிள் ட்ராக் ரஞ்சிதமே வெளியாகியுள்ளது. விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாரிசு படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் … Read more

காஞ்சிபுரம் விவசாயிகளுக்கு 1 லட்சம் இலவச மரக்கன்றுகள்! வேளாண்துறை அறிவிப்பு

காஞ்சிபுர விவசாயிகள் அதிக வருமானம் ஈட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் ஒரு லட்ச மரக்கன்றுகள் வழங்க வேளாண்துறை இலக்கு வைத்துள்ளது. மர விவசாயம் ஆவின் ஆரஞ்ச் பாக்கெட் பால் விலை உயர்வு: `பொதுமக்களுக்கு பாதிப்பில்லை!’ – சொல்கிறார் அமைச்சர் நாசர் காஞ்சிபுரத்தில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் உள்ளது. இதில் விவசாயிகள் அதிகமாக நெல் மற்றும் காய்கறிகளையே பயிரிடுகின்றனர். இந்த விவசாயிகளை மாற்றுப்பயிர்கள் பயிரிட ஊக்குவிப்பதற்கு, விதை, உரங்கள், தார்பாய், வேளாண் கருவிகள் ஆகியவற்றை அரசு … Read more

“திராவிட மாடல் இதுதானா?” – பால் விலை உயர்வுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் எதிர்ப்பு

சென்னை: ”நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு இன்னும் எத்தனை கொடுமைகளை “திராவிட மாடல்” அரசு செய்ய உள்ளதோ? தேர்தலின்போது சொல்வதையும் செய்வோம் சொல்லாததையும் செய்வோம் என்று கூறினார்கள். அதன் அர்த்தம் இது தானோ?” என்று என்று ஆவின் பால் விலை உயர்வுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கேள்வி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி தலைவர் யுவராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தேர்தலின்போது மாதந்தோறும் மின் கட்டணம் அளவிடும் முறையை அமல்படுத்துவோம் என்று … Read more

பஞ்சாபில் இந்து அமைப்பின் தலைவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை

அமிர்தசரஸ்: பஞ்சாபில் இந்து உரிமை அமைப்பின் தலைவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் சிவசேனா என்ற பெயரில் இந்து உரிமை அமைப்பை சுதிர்சூரி என்பவர் நடத்தி வந்தார். இந்துத்துவா கொள்கைகளை வலியுறுத்தி அவர் பல்வேறு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை நடத்தி வந்தார். இந்நிலையில் அமிர்தசரஸ் நகரிலுள்ள ஒரு கோயிலின் சிலைகள் அண்மையில் சேதப்படுத்தப்பட்டன. கோயில் வளாகத்துக்கு வெளியே குப்பையில் உடைக்கப்பட்ட சிலைகள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து சுதிர் சூரி தலைமையில் சிவசேனா அமைப்பினர் நேற்று போராட்டம் … Read more

நெற்பயிர் காப்பீடு: தமிழக அரசு கடைசி தேதி அறிவிப்பு!

பயிர்களில் உற்பத்தியை பெருக்குவதற்கு மட்டுமல்லாது, இயற்கைச் சீற்றங்களினால் பயிர் பாதிப்பு ஏற்பட்டாலும், தமிழக வேளாண் பெருமக்களை பாதுகாக்கவும் தமிழக அரசு ல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில், வெள்ளம், புயல் போன்ற இயற்கைச் சீற்றங்களினால் பயிர்கள் பாதிக்கப்படும்போது, தமிழக விவசாயிகளின் நிதிச்சுமையை குறைக்கும் வகையில், 2022-23 ஆம் ஆண்டில் பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக, மாநில அரசின் காப்பீட்டுக் கட்டண மானியமாக ரூ.2,339 கோடி நிதியினை ஒதுக்கீடு செய்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தற்போது அனைத்து மாவட்டங்களிலும் … Read more

இதுதான் காங்கிரஸ் உத்தி: பிரதமர் மோடி பொளேர்!

மொத்தம் 68 தொகுதிகளை கொண்ட இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் ஒரே கட்டமாக நவம்பர் 12ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும், டிசம்பர் 8ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து, அம்மாநிலத்தில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன. அந்தவகையில், இமாச்சலப் பிரதேசத்தின் மாண்டி நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “இமாச்சலப் பிரதேசத்தின் சட்டமன்றத் தேர்தல் … Read more

மொச்ச கொட்ட பல்லழகி பாட்டு காபியா வாரிசு ஃபர்ஸ்ட் சிங்கிள்? டிவிட்டர் ரியாக்ஷனில் நடக்கும் களேபரம்

விஜய் நடிப்பில் பொங்கல் விருந்தாக வர இருக்கும் வாரிசு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகியுள்ளது. பெரிய எதிர்பார்ப்புக்கு இடையே வெளியாகியிருக்கும் வாரிசு படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ‘ரஞ்சிதமே..ரஞ்சிதமே’ பாடல் சூப்பராக இருப்பதாக ரசிகர்கள் ரியாக்ட் செய்துள்ளனர். விஜய் பாடியிருக்கும் இந்த பாடல் செம குத்து பாடலாக இருப்பதால், பொங்கலன்று தியேட்டர் கிழியப்போகுது என தெரிவித்துள்ளனர். பாடலை ரசித்து ரசித்து இசையமைப்பாளர் தமன் உருவாக்கியிருப்பதாக தெரிவித்திருக்கும் விஜய் ரசிகர்கள், சாதாரணமாகவே பாடலுக்கு குத்தாட்டம் போடும் பேன்ஸ், விஜய் பாடியிருக்கும் … Read more

ஆளுநரை மாற்றுவதா?… நெவர்… எல். முருகன் உறுதி

மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இரண்டு நாள்கள் பயணமாக புதுச்சேரிக்கு வந்திருக்கிறார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அவர் இன்று கட்சி தலைமை அலுவலகத்தில் பாஜக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்திய அரசியல் சட்டப்படி தமிழக ஆளுநருக்கு கருத்து கூற உரிமையும், சுதந்திரமும் உள்ளது. ஆகவே, திமுக அரசு நீட்டுகிற கோப்புகளில் கையெழுத்திடும் கைப்பாவையாக ஆளுநர் இல்லை. கோப்புகளில் சந்தேகம் எழுந்தால் கேள்வி கேட்கிறார். அதனாலேயே தமிழக ஆளுநரின் செயல்பாட்டை … Read more

சிலி நாட்டில் நடந்த ருசிகரம்.. நேரலையில் திருட்டு அதிகம் என்று கூறிய நிருபரின் இயர்பேடை கவ்விச் சென்ற கிளி..!

தென்அமெரிக்க நாடான சிலியின் சான்டியகோ பகுதியில் தொலைக்காட்சி நிருபர் ஒருவர் அப்பகுதியில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதாக நேரலையில் செய்தி வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது, பறந்து வந்த ஒரு கிளி அவரது தோள்பட்டையில் அமர்ந்தது. அந்த நிருபரோ, பாதுகாப்பு நிறைந்த இந்த பகுதியில் என்ற சொல்லும் போதே அந்த கிளி நிருபரின் காதில் மாட்டியிருந்த இயர்பேடை கவ்விக் கொண்டு பறந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த அந்த நிருபர் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் அந்த கிளியை பிடிக்க முயற்சித்த போது கிளியோ … Read more

தமிழகத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற  கிரிக்கெட் வீரர்களுக்கு மாதம் ரூ.10ஆயிரம்  ஓய்வூதியம்! புதிய தலைவர் அசோக் சிகாமணி அறிவிப்பு

சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற  கிரிக்கெட் வீரர்களுக்கு மாதம் ரூ.10ஆயிரம்  வழங்கப்படும் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அமைச்சர் பொன்முடியின் இளையமகன் டாக்டர் அசோக் சிகாமணி அறிவித்து உள்ளார். தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக இருந்த ரூபா, கடந்த 2021 செப்டம்பர் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதன் பின் தலைவர் பதவி நிரப்பப்படாமலே இருந்தது. இதையடுத்து, துணைத்தலைவராக இருந்த தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் மகன் மருத்துவர் அசோக் … Read more