செம்புண்டி ஊராட்சியில் மக்களுக்கு இலவசமாக முருங்கை மரக் கன்று

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட செம்புண்டி ஊராட்சியில் அனைத்து குடும்பங்களுக்கும் முருங்கை  மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி அங்குள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளி வளாகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பழனிவேல் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் விமலா முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் பாலகிருஷ்ணன் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளர்களாக அச்சிரப்பாக்கம் ஒன்றியக்குழு தலைவர் ஒரத்தி கண்ணன், ஒன்றிய கவுன்சிலர் செம்பூண்டி சிவா, அச்சிரப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர் சசிகலா, பள்ளி தலைமை … Read more

விதிமீறல் கட்டடம் மீது நடவடிக்கை எடுக்காமல் கும்பகர்ணன் போல் தூங்கி கொண்டிருந்தது ஏன்: ஐகோர்ட் கேள்வி

சென்னை: விதிமீறல் கட்டடம் மீது நடவடிக்கை எடுக்காமல் கும்பகர்ணன் போல் தூங்கி கொண்டிருந்தது ஏன் என்று  ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. விஜயபாஸ்கர் என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை மாநரகராட்சிக்கு சென்னை உயர்நிதிமன்றம் கேள்வி எழுப்பியது. கோட்டூர்புரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் விதிகளை மீறி கட்டிய கட்டுமானங்களுக்கு எதிராக நடவடிக்கை கோரி வழக்கு தொடரப்பட்டது. கட்டிடத்தை சீல் வைத்தபோது இருந்த மாநகராட்சி அதிகாரிகள் யார்? காவல்துறை அதிகாரிகள் யார் என்று நீதிபதிக்கள் கேள்வி கேட்டுள்ளனர்.  விவரங்களை சேகரித்து நவ – … Read more

மத்திய பிரதேசத்தை தொடர்ந்து உத்தரகாண்டில் இந்தியில் மருத்துவ படிப்பு: மாநில அமைச்சர் தகவல்

டேராடூன்: மத்திய பிரதேச மாநிலத்தை தொடர்ந்து உத்தரகாண்ட் மாநிலத்தில் அடுத்த கல்வியாண்டு முதல் மருத்துவப் படிப்புகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் கற்பிக்கப்படும் என்று அம்மாநில அமைச்சர் தன் சிங் ராவத் தெரிவித்தார். மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெறுகிறது. இந்தி மொழியை ஊக்குவிக்கம் வகையில், நாட்டிலேயே முதன் முறையாக மத்திய பிரதேச மாநிலத்தில் மருத்துவப் பட்டப் படிப்பை (எம்பிபிஎஸ்) இந்தியில் படிப்பதற்கான திட்டம் தொடங்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பிலும் கண்டனங்களும், … Read more

‘காரணம் கண்டுபிடிப்பதில் திமுக அமைச்சர்கள் விஞ்ஞானிகள்’ – ஆர்பி உதயகுமார் விமர்சனம்

அனைத்து விதமான பால் பாக்கெட்டுகளின் விலையை உயர்த்த திமுக அரசு காரணம் கண்டுபிடித்துவிட்டது என்றும், காரணம் கண்டுபிடிப்பதில் அமைச்சர்கள் விஞ்ஞானிகளாக உள்ளனர் எனவும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரை சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக அரங்கத்தில், அதிமுக சார்பில் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது. இதனை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “பல்வேறு இடங்களில் நீர் தேங்கி இன்றைக்கு தமிழகமே தத்தளித்து … Read more

20வது படம் : 11 ஆண்டுகளுக்கு பின் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் ரஜினி

ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா இயக்கும் படம் லால் சலாம். இதில் விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிக்கிறார்கள், ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்கிறார். லைகா நிறுவனத்தின் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார். இந்த படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக இன்று(நவ.,5) அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது சிறப்பு தோற்றத்தில் ரஜினி நடிக்கும் 20வது படமாகும். 5 ஹிந்தி படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள ரஜினி கடைசியாக 2011ம் ஆண்டு வெளிவந்த ரா ஒன் என்ற படத்தில் … Read more

பிரிவினைவாத தலைவர் சொத்து முடக்கம்| Dinamalar

புதுடில்லி, பயங்கரவாத செயல்களுக்கு சட்டவிரோதமாக நிதி திரட்டிய ஜம்மு – காஷ்மீர் பிரிவினைவாத தலைவரின் வீட்டை அமலாக்கத் துறை கையகப்படுத்தியது. ஜம்மு – காஷ்மீரின் பிரிவினைவாத தலைவர் சபீர் அஹமது ஷா, பயங்கரவாத செயல்களை செய்வதற்காக, நம் அண்டை நாடான பாகிஸ்தானின் லஷ்கர் – இ – தொய்பா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளிடம் இருந்து கோடிக்கணக்கில் சட்டவிரோதமாக நிதி திரட்டினார். இதுதொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு சபீர் மீது 2017ல் வழக்குப் பதிவு செய்துள்ளது. இதே குற்றச்சாட்டு … Read more

டி-20 உலக கோப்பை: அரையிறுதியில் இங்கிலாந்து| Dinamalar

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் நடக்கும் டி- 20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதிக்கு 2வது அணியாக இங்கிலாந்து முன்னேறியது. குருப் 1 பிரிவில் சூப்பர் 12 சுற்றின் கடைசி போட்டியில் இலங்கைக்கு அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து ரன் ரேட் அடிப்படையில் 2வது இடம் பிடித்து அரையிறுதிக்கு அந்த அணி முன்னேறியது. இதனால், நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, தொடரில் இருந்து வெளியேறியது.நாளை நடக்கும் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் இந்திய … Read more

கோவையில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்திற்கு ஆதரவாக 50 இளைஞர்கள் – அதிரவைக்கும் பரபரப்பு தகவல்!

கடந்த மாதம் 23ஆம் தேதி (தீபாவளிக்கு முதல் நாள்) கோவை கோட்டை ஈஸ்வரன் என்ற இந்து கோவிலுக்கு முன்னால், முபின் என்ற நபர் ஒட்டி வந்த கார் வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் முபின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். இந்த வழக்கு தற்போது என்ஐஏ அதிகாரிகளால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதே சமயத்தில் தமிழக  போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து பிரபல மாலை நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் … Read more

விமானத்தில் திடீரென அலறிய அலாரம்… காரணம் இதுதான்!!

இஸ்ரேலில் டெல் அவிவ் நகரிலிருந்து பாங்காக்குக்கு விமானம் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது விமானத்தில் பயணி ஒருவர் கழிவறைக்கு சென்று சிகரெட்டை பற்ற வைத்துள்ளார். அப்போது திடீரென அலாரம் அடித்ததால் பதறிப்போன பயணி சிகரெட்டை அணைக்காமல் குப்பை தொட்டியில் போட்டுவிட்டு கழிவறையில் இருந்து வெளியேறினார். குப்பை தொட்டியில் போடப்பட்ட சிகரெட்டால் அங்கிருந்த டிஸ்யூ பேப்பர்களில் தீ பற்றிக்கொள்ள அலாரம் தொடர்ந்து அலறியது. இதனையடுத்து விமான ஊழியர்கள் உடனடியாக கழிவறைக்குச் சென்று, எரிந்துகொண்டிருந்த தீயை அணைத்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் … Read more