“நிதிஷ் குமார் மீது காலணி வீசிய கிராமம்… இதனால் 15 ஆண்டுகளாக சாலையில்லை" – பிரசாந்த் கிஷோர் சாடல்

பீகாரில் கூட்டணி ஆட்சி மாறியதிலிருந்து முதல்வர் நிதிஷ் குமாரை ஒருபக்கம் பா.ஜ.க சாடிவர, மறுபக்கம் பிரசாந்த் கிஷோரும், நிதிஷ் குமாரும் ஒருவரையொருவர் விமர்சித்து வருகின்றனர். இதனால் இவர்களுக்கிடையே வார்த்தைப் போர் நீண்டு வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு கூட, `நிதிஷ் குமார் இன்னும் பா.ஜ.க-வுடன் தொடர்பில் தான் இருக்கிறார் என பிரசாந்த் கிஷோர் குற்றம்சாட்ட, `அவரைப்பற்றி என்னிடம் எதுவும் கேட்காதீர்கள்’ என பத்திரிகையாளர்கள் முன்னிலையில் பேசினார் நிதிஷ் குமார். பிரசாந்த் கிஷோர் – நிதிஷ் குமார் … Read more

கனமழை முன்னெச்சரிக்கை | நவ.9-க்குள் முடிக்க வேண்டிய பணிகள் – சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவு

சென்னை: சென்னையில் அடுத்த கனமழை 9-ம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்குள் அனைத்து பணிகளையும் முடிக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கடந்த மாதம் 29-ம் தேதி வடகிழக்குப் பருவமழை தொடங்கியது. இதனைத் தொடர்ந்து 31-ம் தேதி முதல் 3 வரை வரை சென்னையில் கனமழை பெய்தது. குறிப்பாக, சென்னையின் ஒரு சில பகுதிகளில் 48 மணிநேரத்திற்குள் 15 செ.மீ. முதல் 35 செ.மீ. வரை மழை பெய்தது. இந்நிலையில், … Read more

ஆந்திரா, தெலங்கானா, டெல்லி, ராஜஸ்தான் மாநில ஆட்சிகளை கவிழ்க்க சதி – பாஜக மீது முதல்வர் சந்திரசேகர ராவ் குற்றச்சாட்டு

ஹைதராபாத்: ஆந்திரா, தெலங்கானா, டெல்லி மற்றும் ராஜஸ்தான் ஆகிய 4 மாநில ஆட்சிகளை கவிழ்க்க சதி நடக்கிறது. இதற்கு பாஜகதான் காரணம் என தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் குற்றம் சாட்டியுள்ளார். ஹைதராபாத்தில் தெலங்கானா பவனில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் சந்திரசேகர ராவ் கூறியதாவது: தெலங்கானாவில் ஆளும் கட்சியை சேர்ந்த 4 எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க பாஜகவினர் முயற்சித்த வீடியோ பதிவுகளை பார்க்கும் போது நம்நாட்டின் ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்பட்டதைப் போல் உணர்ந்தேன். இந்த … Read more

ஆக்ஷனில் இறங்கிய அண்ணாமலை… ஆட்டம் காணும் அமைச்சர்கள்..!

திமுக அமைச்சர்களின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வரும் அண்ணாமலை நேரம் வரும்போது ஆவணங்களை வெளியிடுவேன் என்று பகிரங்கமாக பேசி வருவதையும் பார்க்கமுடிகிறது. காவல்துறையில் பணியாற்றிய அனுபவம் இருப்பதால் கேள்விகளை எதிர்கொள்ளும் விதமும் கருத்துக்களை சொல்லும் பாணியும் கண்டிஷனான அரசியலை வெளிப்படுத்துகிறது. குறிப்பாக அமைச்சர் செந்தில்பாலாஜி விஷயத்தில் அனல் பறந்து வருகிறது. இந்த நிலையில், மத்திய அரசு பாலுக்கு ஜிஎஸ்டி வரி விதித்துள்ளதாக தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியது தற்போது விவாதமாகியுள்ளது. அமைச்சர் நாசர் … Read more

பாஜக சீக்ரெட் டீல்: பப்ளிக்கில் போட்டுடைத்த அரவிந்த் கெஜ்ரிவால்!

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடாமல் விலகினால், சத்யேந்திர ஜெயின், மணீஷ் சிசோடியா ஆகியோரை, வழக்கு விசாரணையில் இருந்து விடுவிப்பதாக, பாஜக பேரம் பேசியதாக, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டி உள்ளார். டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லியில், தனியார் ஆங்கில தொலைக்காட்சி நடத்திய கருத்தரங்கில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: பாஜகவும், காங்கிரசும் கணவன் – மனைவி / சகோதரர் – சகோதரி உறவை கொண்டுள்ளன. தேர்தலில் … Read more

ரஞ்சிதமே ரஞ்சிதமே – வெளியானது வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்

நடிகர் விஜய் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த ஜூலை  மாதம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.படத்தில் விஜய் ஆப் டெவலப்பராக நடிப்பதாக கூறப்படுகிறது. சென்னை, விசாகப்பட்டினம், ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்புகள்  நிறைவடைந்த நிலையில் மற்ற பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. படத்தில் பிரபு, சரத்குமார், ஷ்யாம் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தில்ராஜூ படத்தை தயாரிக்கிறார். படத்துக்கு தமன் இசையமைக்கிறார். இந்தச் சூழலில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்போது வெளியாகுமென்று ரசிகர்கள் காத்திருந்தனர். … Read more

குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு; பாதுகாப்பு கருதி குளிக்க தடை!

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்க பருவ மழை பரவலாக பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று தென்காசி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கன மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் பரிதவித்தனர்.  இரவு வரை மழை நீடித்ததால் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இன்று காலையில் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது . இதனால், குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய … Read more

பொய் வாக்குறுதிகள், உறுதிமொழிகளை அளித்து ஏமாற்றுவது காங்கிரசின் பழைய தந்திரம்..!

பொய் வாக்குறுதிகள், உறுதிமொழிகளை அளித்து ஏமாற்றுவது காங்கிரஸ் கட்சியின் பழைய தந்திரம் என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். இமாசல பிரதேச மாநிலம் மாண்டியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர்,  பாஜக அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ளது என்றும் தெரிவித்தார். இந்த முறை அளிக்கப்படும் ஒவ்வொரு வாக்கும், அடுத்த 25 ஆண்டுகால இமாசல பிரதேச வளர்ச்சி பயணத்தை முடிவு செய்யும் என  தெரிவித்தார். Source link

Love Today: "உங்களைப் போன்ற திறமைசாலிக்கு வாய்ப்பளித்ததில் மகிழ்ச்சி!" – ரவீனா ரவி குறித்து பிரதீப்

‘கோமாளி’ படத்தின் மூலம் அறிமுகமான இயக்குநர் பிரதீப் ரங்கநாதன், இயக்கி நடித்துள்ளத் திரைப்படம் ‘லவ் டுடே’. சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு, இவானா, ரவீனா ரவி உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமகால காதல் திரைப்படமான இப்படம் நவம்பர் 4-ம்தேதி (நேற்று) திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் நடித்துள்ள நடிகை ரவீனா, இயக்குநர் பிரதீப் ரங்கநாதனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார். … Read more

கரகாட்டத்தில் ஆபாசம் கட்சி, மதம், சமூகம் அல்லது சாதியை சார்ந்த பாடல் இருக்கக் கூடாது! உயர் நீதிமன்றம்

மதுரை: கரகாட்டத்தில் ஆபாசம், இரட்டை அர்த்த பாடல்கள் மற்றும் கட்சி, மதம், சமூகம் அல்லது சாதியை சார்ந்த பாடல் இருக்கக் கூடாது என உயர் நீதிமன்றம் மதுரை கிளை கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளது. பாரம்பரிய கலைகளான கரகாட்டம், பொம்மலாட்டம் போன்ற பழங்கால கலைகள் புறக்கணிக்கப்பட்து வருகிறது. மேலும், மக்களை மகிழ்விக்கும் வகையில், காலத்திற்கு ஏற்றார்போல, இதுபோன்ற பழமையான கலைகளிலும் ஆபாசம் தலைதூக்கி வருகிறது. இதனால் கரகாட்டம் நடத்த மாவட்ட நிர்வாகங்கள் தடை விதித்து வருகின்றனர். இந்த நிலையில்,  … Read more