Netflix App விலை குறைந்த சந்தா திட்டம்! Disney மற்றும் Amazon போலவே!

உலகளவில் ஆன்லைன் மூலம் திரைப்படங்கள், வெப் சீரிஸ் போன்றவற்றை பார்த்து ரசிக்க ஸ்ட்ரீமிங் ஆப் என்பது மிகவும் பிரபலம். அதில் முன்னணி நிறுவனமாக இருப்பது Netflix நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தின் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ் போன்றவை உலகம் முழுவதும் மிகவும் பிரபலம். அதில் சிலவற்றை குறிப்பிடவேண்டும் என்றால் Game Of Thrones, money heist போன்றவை மிகவும் பிரபலமானவை. ஆனால் இவற்றின் சந்தா என்பது மிகவும் அதிகம். இதன் காரணமாகவே இந்தியா போன்ற மக்கள் … Read more

சிறப்பு தோற்றத்தில் ரஜினி – லால் சலாமுக்கு பூஜை போடப்பட்டது

ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் இருவரும் பிரிந்தனர். அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இதற்கிடையே, தனுஷை வைத்து 3 படத்தை ஐஸ்வர்யா இயக்கினார். கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் ஸ்ருதி ஹாசன் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அனிருத் இசையமைத்திருந்தார். இதில் இடம்பெற்ற ஒய் திஸ் கொலை வெறி என்ற பாடல் உலக அளவில் ஹிட்டடித்தது. படமும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து … Read more

விமானம் முதல் 5 ஸ்டார் ஹோட்டல்வரை – பெண் குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றிய ரவுண்ட் டேபிள் இந்தியா

இந்தியா முழுவதும் ஃப்ளைட் ஆஃப் ஃபேன்டஸி எனும் நிகழ்ச்சி மூலம் ஆதரவற்ற மாணவர்களின் விமானத்தில் பறக்கும் ஆசையை ரவுண்ட் டேபிள் இந்தியா அமைப்பு நிறைவேற்றி வருகிறது. அதன் ஒரு பகுதியாக  எஸ்.ஆர்.எஸ்  சர்வோதயா பெண்கள் விடுதியில்  உள்ள 15 மாணவர்களின் கனவான விமானத்தில் பறக்கும் ஆசை இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை விமானநிலையத்தில் இருந்து இந்த 15 மாணவிகளும் விமானத்தில் கோயம்புத்தூருக்கு அழைத்து செல்லப்பட்டு, அங்கு ஜி.டி.கார் மியூசியத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.  பின்னர் ரெசிடென்சி  நட்சத்திர விடுதியில் அவர்களுக்கு … Read more

தமிழக கிரிக்கெட் சங்க தலைவராக அமைச்சர் பொன்முடி மகன் அசோக் சிகாமணி தேர்வு – முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து…

சென்னை: தமிழக கிரிக்கெட் சங்க தலைவராக அசோக் சிகாமணி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இவர் தமிழகஅமைச்சர் பொன்முடியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் இதுவரை இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் சீனிவாசன் குடும்பத்தினரிடம் இருந்து வந்தது. இதை கைப்பற்ற பலர் முயற்சித்த நிலையில், கடந்த கிரிக்கெட் சங்க தேர்தலிலும் அமைச்சர் பொன்முடியின் இளையமகன் அசோக் சிகாமணி கடந்த ஆண்டும் போட்டியிட்டார். ஆனால், தலைவர் பதவியை சினிவாசன் … Read more

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 7ம் தேதி அன்னாபிஷேக விழா தரிசன நேரத்தில் மாற்றம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மாதந்தோறும் பவுர்ணமியன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுகின்றனர். அதன்படி, ஐப்பசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் வரும் 7ம் தேதி மாலை 4.44 மணிக்கு தொடங்கி, 8ம் தேதி மாலை 4.48 மணிக்கு நிறைவடைகிறது. எனவே, 7ம் தேதி இரவு பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்தது என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஐப்பசி மாதம் அஸ்வினி நட்சத்திரத்தன்று, சிவபெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வது வழக்கம். அதன்படி, அண்ணாமலையார் கோயிலில் … Read more

பருவ நெற்பயிரை நவ.15-க்குள் காப்பீடு செய்துகொள்ள விவசாயிகளுக்கு உழவர் நலத்துறை வேண்டுகோள்

சென்னை: சம்பா, தாளடி, பிசானப் பருவ நெற்பயிரை நவ.15-க்குள் காப்பீடு செய்துகொள்ள விவசாயிகளுக்கு உழவர் நலத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் உள்ளிட்ட 27 மாவட்ட விவசாயிகள் நெற்பயிரை நவம்பர் 15-க்குள் காப்பீடு செய்ய வேண்டும். கன்னியாகுமரி, திண்டுக்கல், விருதுநகர், நாமக்கல், நெல்லை, தென்காசி மாவட்ட விவசாயிகளுக்கு டிசம்பர் 15ம் தேதி கடைசி நாள் ஆகும். 2-ம் போக நெல் நடவு சற்று தாமதமாக மேற்கொள்ளப்பட்டு உள்ளதால் 6 மாவட்ட விவசாயிகளுக்கு டிசம்பர் 15ம் … Read more

மாணவர் ஷாரோன் கொலைக்கு ஜோதிடர் கூறியதுதான் காரணமா?.. கிரீஷ்மா உள்பட 3 பேரிடம் கிடுக்கிப்பிடி

திருவனந்தபுரம்: கல்லூரி மாணவர் ஷாரோனை கொலை செய்ததற்கு மூடநம்பிக்கை தான் காரணம் என்று அவரது பெற்றோர் தெரிவித்திருந்ததால், அது உண்மைதானா? என்று கண்டறிவதற்காக கிரீஷ்மா, அவரது தாய் மற்றும் மாமாவிடம் ஒன்றாக விசாரணை நடத்த குற்றப்பிரிவு போலீசார் தீர்மானித்துள்ளனர். குமரி மாவட்டம், நெய்யூர் கல்லூரி மாணவர் ஷாரோன் கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்து கொல்லப்பட்ட சம்பவத்தில், அவரது காதலி கிரீஷ்மா, தாய் சிந்து மற்றும் மாமா நிர்மல்குமார் ஆகியோர் தற்போது போலீஸ் காவலில் உள்ளனர். சிந்து மற்றும் … Read more

பேரணி நடத்தி ஒற்றுமையை சீர்குலைக்க ஆர்.எஸ்.எஸ். திட்டமிட்டுள்ளது – அமைச்சர் சேகர்பாபு

பருவ மழை நேரத்தில் மக்கள் மீது அக்கறை இல்லாமல் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்தி ஒற்றுமையை சீர்குலைக்க திட்டமிடுவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். பருவ மழை தொடங்கி இருக்கக்கூடிய நிலையில், பொதுமக்களின் மருத்துவ வசதிக்காக இன்று சென்னை முழுவதும் 200 வார்டுகளில் மருத்துவ முகாம் தொடங்கி இருக்கிறது. வடசென்னை திரு.வி.க நகர் சட்டமன்ற தொகுதியில் மருத்துவ முகாமை தொடங்கி வைத்த அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது… சென்னையில் மழைநீர் தேக்கம் 98 சதவீதம் பணி முடிந்து பாதிப்பு … Read more

சர்வம் தாளமயம் ஒளிபரப்பாகிறது

சில நல்ல படங்கள் மக்களின் கவனத்தை பெறாமலேயே கடந்து சென்று விடும். அப்படியான படங்களில் ஒன்று சர்வம் தாளமயம். சாதாரண ஏழை குடும்பத்தை சேர்ந்த ஒரு இளைஞன் மிகப்பெரிய மிருதங்க ஜாம்பவானிடம் இசை கற்று எப்படி அதில் பெரிய இடத்தை பிடிக்கிறான் என்பதுதான் படத்தின் கதை. இசைக்கு மிகப்பெரிய முக்கியத்துவம் கொண்ட படம். ஏ.ஆர்.ரகுமானின் இசை, ரவி யாதவின் ஒளிப்பதிவு, ராஜீவ் மேனனின் இயக்கம், நெடுமுடி வேணு எனும் மகா கலைஞன் என பெரிய கூட்டணி இருந்தும் … Read more

பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டம் தொடர்பான 9 ஆயிரம் பக்க ஆவணங்களை மாட்டுவண்டியில் ஏற்றி சென்ற ஆர்டிஐ ஆர்வலர்

போபால், மத்தியபிரதேச சிவபுரி மாவட்டம் பைடர் பகுதியை சேர்ந்த ஆர்.டி.ஐ. ஆர்வலர் மகான் தகட். இவர் பைடர் நகராட்சியில் பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டம் தொடர்பான ஆவணங்களை தரும்படி தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பித்தார். இது தொடர்பான ஆவணங்களை பெற நகராட்சி நிர்வாகம் ரூ.25 ஆயிரம் கட்டணம் செலுத்தும்படி தெரிவித்தது. இதையடுத்து, ரூ.25 ஆயிரம் பணத்தை மகான் தகட் நகராட்சிக்கு செலுத்தினார். ஆனால், பணம் செலுத்த பின்னரும் கடந்த 2 மாதங்களாக கேட்ட ஆவணங்களை … Read more