இந்திய அணிக்கு சாதகமாக ஐசிசி செயல்படுகிறதா? பிசிசிஐ தலைவர் பதில்

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் நவம்பர் 2-ந் தேதி நடந்த ஆட்டத்தில் இந்தியா-வங்காளதேசம் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி கோலி, ராகுல் சூர்யகுமார் ஆகியோரின் அதிரடியால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் களமிறங்கியது. அப்போது இடையில் மழை குறுக்கிட்டதால் போட்டி பாதிக்கப்பட்டது. இதனால் டக்ஒர்த் லூயிஸ் முறைப்படி, வங்காளதேச அணி 16 … Read more

'ஆப்பிரிக்காவுக்கு திரும்பி செல்லுங்கள்' என கூறிய எம்.பி. 15 நாட்கள் சஸ்பெண்ட்

பாரிஸ், ஆப்பிரிக்காவின் பல்வேறு நாடுகளை சேர்ந்த அகதிகள் ஆயிரக்கணக்கானோர் ஆண்டு தோறும் மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்குள் சட்டவிரோதமாக நுழைவது வழக்கம். மத்திய தரைக்கடலில் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும்போது படகு விபத்து ஏற்பட்டு நூற்றுக்கணக்கான உயிரிழப்பு சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய தரைக்கடல் வழியாக அகதிகள் ஐரோப்பாவுக்குள் நுழைய முற்பட்டனர். அப்போது, அவர்கள் பயணித்த படகு விபத்துக்குள்ளானது. அப்போது, தரைக்கடல் பகுதியில் இருந்த தன்னார்வு தொண்டு அமைப்பை சேர்ந்த … Read more

பொள்ளாச்சி சம்பவத்தை படமாக எடுப்பதாக கூறி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது..!

கோயம்புத்தூரில், பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கும் படத்தில் நடிக்க வைப்பதாக கூறி கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து தலைமறைவான நபர் கைது செய்யப்பட்டார். கடந்த 2019ஆம் ஆண்டு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த மாணவி முகநூலில் வந்த நேர்காணல் விளம்பரத்தைப் பார்த்து பொள்ளாச்சியில் உள்ள ஒரு மேன்ஷனில் தங்கியிருந்த கரூரைச் சேர்ந்த பார்த்திபன் என்பவரை சந்தித்திருக்கிறார். தான் எடுக்கும் படத்தில் மாணவிக்கு முக்கிய கதாப்பாத்திரம் இருப்பதாக கூறியவர், பாலில் மயக்க மருந்து … Read more

சென்னை மக்கள் மழை வெள்ளத்தில் அல்லாமல் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்கின்றனர்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: சென்னை மக்கள் மழை வெள்ளத்தில் மிதக்காமல், மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னையில் இன்று (நவ.5) மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்களை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “சென்னையில் கடந்த 4 நாட்களில் மிகப் பெரிய மழை பெய்துள்ளது. 48 மணி நேரத்தில் 45 செ,மீ மழை பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் 10 … Read more

பெண்களுக்கு மாதம் ரூ.1,500 – இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் வாக்குறுதிகளின் முக்கிய அம்சங்கள்

சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, 300 யூனிட் இலவச மின்சாரம், பெண்களுக்கு மாதாந்திர உதவித்தொகை உள்ளிட்ட வாக்குறுதிகளுடன் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை சனிக்கிழமை வெளியிட்டது. இமாச்சப் பிரதேச சட்டப்பேரவைக்கு இந்த மாதம் 12-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. மாநிலத்தில் தேர்தலைச் சந்திக்க அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்தநிலையில், காங்கிரஸ் கட்சி தங்களது வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை சனிக்கிழமை (நவ.5) சிம்லாவில் உள்ள மாநில கட்சித் தலைமை அலுவலகத்தில் … Read more

பொய்களைப் பரப்பவே ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கியுள்ளார்: பைடன் விமர்சனம்

வாஷிங்டன்: பொய்களைப் பரப்புவதற்காகவே எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கியுள்ளார் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து ஜோ பைடன் பேசும்போது, “இப்போது நாம் அனைவரும் எதைப் பற்றி கவலைப்படுகிறோம் என்றால், எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கி இருப்பதை பற்றிதான். ட்விட்டர் மூலம் பொய்களைப் பரப்பவே அவர் அதனை வாங்கியுள்ளார். ட்விட்டருக்கான எடிட்டர்கள் இனி அமெரிக்காவில் இருக்கப்போவது இல்லை. இந்த நிலையில், சமூக வலைதளங்களில் குழந்தைகள் ஆபத்தில் இருப்பதை எப்படி புரிந்துகொள்ள முடியும்” என்றார். … Read more

தமிழகத்தை நோக்கி வரும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தமிழகத்தில் இன்று பதினைந்து மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த அறிவிப்பில், “இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் 09.11.2022 அன்று ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி வட மேற்கு திசையில் அடுத்த 48 மணிநேரத்தில் நகரக்கூடும். குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (05.11.2022) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் … Read more

வெறி கொண்டு துரத்திய குரங்கு கூட்டம்… மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்த நபர்!

உத்திரப்பிரதேசம் பரேலியில், நடந்த ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில், 40 வயதுடைய விவசாயி, தனது வீட்டின் மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டிருக்கையில், குரங்குகள் கூட்டம் துரத்தியதில்,  மொட்டை மாடியில் இருந்து விழுந்து இறந்தார். தன்னைத் தாக்கிய குரங்குகளின் கூட்டத்திடமிருந்து தப்பிக்க முயன்றபோது தவறுதலாக மொட்டை மாடியில் இருந்து விழுந்து இறந்தார்.  இறந்த நபர் முகேஷ் குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார். உடனடியாக பரேலி நகரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை மாலை உயிரிழந்தார். … Read more

வருங்கால கணவரின் முதல் திருமணத்திலேயே நடனமாடிய ஹன்சிகா… வைரலாகும் வீடியோ

நடிகை ஹன்சிகா மௌத்வானி, தொலைக்காட்சி தொடர்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் ஆரம்பத்தில் நடித்து வந்தார். 2011ஆம் ஆண்டில், தனுஷ் நடிப்பில் வெளியான ‘மாப்பிள்ளை’ திரைப்படம் மூலம் அறிமுகமான அவர், அந்த ஆண்டே ஜெயம் ரவியுடன் ‘எங்கேயும் எப்போதும்’, விஜயுடன் ‘வேலாயுதம்’ ஆகிய திரைப்படங்களில் நடித்தார்.  தொடர்ந்து, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘சேட்டை’, ‘தீயா வேலை செய்யனும் குமாரு’ போன்ற காமெடி படங்களிலும் கலக்கினார். சூர்யாவின் பிளாக்பஸ்டர்களில் ஒன்றான ‘சிங்கம் … Read more