ஆர்எஸ்எஸ் அணிவகுப்பில் பாடல்கள் பாடவோ, சாதி, மதம் குறித்து தவறாக பேசவோ கூடாது – உயர் நீதிமன்றம் நிபந்தனை

சென்னை: ஆர்எஸ்எஸ் அணிவகுப்பில் பாடல்கள் பாடவோ, சாதி, மதம் குறித்து தவறாக பேசவோ கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது. கோவை, நாகர்கோவில், பல்லடம் உள்ளிட்ட ஆறு இடங்கள் தவிர, தமிழகம் முழுவதும் 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு மற்றும் கூட்டத்தை சுற்றுச்சுவருடன் கூடிய மைதானங்களில் நடத்த அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், நிகழ்ச்சியின் போது பாடல்கள் பாடவோ, தனிப்பட்ட நபர்கள், மதம், ஜாதி குறித்து தவறாக பேசவோ கூடாது எனவும், … Read more

எம்எல்எஸ் குழுமத்திற்கு சொந்தமான நிறுவனங்களை 4-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை

விழுப்புரம்: விழுப்புரம் எம்எல்எஸ் குழுமத்திற்கு சொந்தமான நிறுவனங்களை 4-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். கிரீன்ஸ் வணிக வளாகம், 3 திரையரங்குகள், ஜவுளி கடை, மகாலட்சுமி கல்வி நிறுவனம், மளிகை கடையில் வருமான வரித்துறையினர் 4-வது நாளாக சோதனையை தொடர்கின்றனர். விழுப்புரத்தில் 10 இடங்களில் 40க்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் இருந்து மேலும் 10 பேர் தனுஷ்கோடி வந்தனர்

ராமநாதபுரம்: பொருளாதார நெருக்கடியால் சிக்கித்தவிக்கும் இலங்கையில் இருந்து மேலும் 10 பேர் தனுஷ்கோடி வந்தடைந்துள்ளார். இலங்கையின் மன்னார் பகுதியிலிருந்து 3 குடும்பங்களை சேர்ந்த 10 பேர் படகு மூலம் தனுஷ்கோடி வந்தனர். தனுஷ்கோடி 10 பேரிடமும் கடலோர பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வடமாநிலங்களில் மோசமான நிலையை எட்டிய காற்று மாசு!

டெல்லி: வடமாநிலங்களில் காற்று மாசு தரக்குறியீடு அளவு, மிக மோசமான நிலையை எட்டியுள்ளது. பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் அறுவடை முடிந்த நிலையில், விவசாயிகள் வைக்கோலை எரிப்பதால் காற்று மாசு அதிகரித்து வருகிறது. நொய்டாவில் (உ.பி) 539, குருகிராமில் (ஹரியானா) 478, தீர்பூரில் 534, டெல்லியில் 431 ஆக காற்று மாசு தரக்குறியீடு அளவு உள்ளது.

ஓசூர்: குடியிருப்புக்குள் புகுந்த கரடி – சிசிடிவி காட்சியால் பொதுமக்கள் அச்சம்

குடியிருப்புக்குள் கரடி புகுந்த சிசிடிவி காட்சிகள் வெளியானதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். ஓசூர் அருகே கர்நாடக எல்லையில் உள்ள ஆனேக்கல் தாலுகா ஜிகினியில், நந்தனவனா லே-அவுட் என்ற குடியிருப்பு பகுதிக்குள் நேற்றிரவு கரடி ஒன்று புகுந்தது. அந்த கரடி வீடுகளையொட்டி சர்வ சாதாரணமாக நடமாடி வருகிறது. இந்த காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளன. குடியிருப்புக்குள் கரடி புகுந்துள்ளதால் அந்த பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கரடியின் நடமாட்டம் குறித்து வனத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு … Read more

குடும்பம் என்றால் பிரச்னைகள் வரும்: நடிகர் விஜய் குறித்து இயக்குனர் எஸ்ஏசி மறைமுக பேச்சு

ஒரு குடும்பத்தில் பிள்ளை மனைவி என்று இருக்கும் போதே பல பிரச்னைகள் வரும் அதனை சமாளிப்பதே கடினம் என தனக்கும் தன் மகன் நடிகர் விஜய்க்கும் இடையே இருக்கும் பிரச்னைகள் பற்றி இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் மறைமுகமாக பேசினார். எம்.ஜி.ஆர் கிரியேஷன்ஸ் எனும் பெயரில் தொடங்கப்பட்டுள்ள தொண்டு நிறுவனத்தின் தொடக்க நிகழ்ச்சி, சென்னை தியாகராய நகரில் உள்ள வாணி மகாலில் நடைபெற்றது. இதில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, திரைப்பட இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் பேசிய … Read more

அடுக்குமாடி குடியிருப்புகள் டொலர்களில் விற்பனை

நகர அபிவிருத்தி அதிகாரசபையால் (UDA) நிர்மாணிக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளை இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களுக்கு டொலர்களில் விற்பனை செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் மேலும் மூன்று வீடுகள் விற்கப்பட்டுள்ளன. இந்த மூன்று அடுக்குமாடி குடியிருப்புகளும் 1 இலட்சத்து 43 ஆயிரத்து 700 அமெரிக்க டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இவை பன்னிபிட்டிய, கொட்டாவ மற்றும் மாலபே பிரதேசங்களில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. நடுத்தர வருமானம் பெறும் குடும்பங்களுக்காக கட்டப்பட்ட இந்த அடுக்குமாடி குடியிருப்புகளில் மேலும் 10 வீடுகளை வாங்குவதற்கு விண்ணப்பங்கள் ஏற்கனவே பெறப்பட்டுள்ளன. அமெரிக்கா, … Read more

தமிழகத்தில் நாளை ஆர்எஸ்எஸ் பேரணி.. முக்கிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 2ம் தேதி ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க மறுத்த காவல்துறை உத்தரவை எதிர்த்து ஆர்எஸ்எஸ் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் நவம்பர் 6ஆம் தேதி அன்று ஊர்வலத்தை நடத்த அனுமதிக்குமாறு உத்தரவிட்டது. மேலும் காவல்துறையினர் அதற்கான நிபந்தனைகளையும் வரையறைகளையும் வகுத்து அனுமதி அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.  ஆனால் கடலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. இதனையடுத்து ஆர்எஸ்எஸ் சார்பில் காவல் துறைக்கு … Read more

ஆப்கானிஸ்தான் பதவியிலிருந்து முகமது நபி விலகல்..!!

உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணி 5 போட்டிகளில் 3 தோல்வி அடைந்துள்ளது. அந்த அணியின் 2 போட்டிகள் மழையால் கைவிடப்பட்டதால் அந்த அணி புள்ளி பட்டியலில் 2 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் நிறைவு செய்துள்ளது. இதன் மூலம் உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணியின் பயணம் நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ளதை தொடர்ந்து ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து முகமது நபி விலகியுள்ளார். இது தொடர்பாக முகமது நபி தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: ஆப்கானிஸ்தான் … Read more