பிக்பாஸ் சீசன் 6 தமிழ் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த வார எலிமினேஷனில் ஜனனி மற்றும் ஏடிகே உள்ளிட்ட போட்டியாளர்கள் இடம்பெற்றிருந்தனர். ஆனால், குறைவான வாக்குகளை பெற்ற ஜனனி போட்டியில் இருந்து வெளியேறியிருக்கிறார். அவர் வெளியேறியதை ஜனனி ஆர்மியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவரைவிட குறைவான வாக்குகளை பெற்ற ஏடிகே தான் வெளியேற்றப்பட்டிருக்க வேண்டும் என்றெல்லாம் கமெண்ட் அடித்து வருகின்றனர். இன்னும் சிலர், டிஆர்பிக்காக ஜனனி பிக்பாஸ் டீம் வெளியேற்றியிருப்பதாகவும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.
இதில் ஜனனி வெளியேற்றப்பட்டிருப்பதற்கு 2 முக்கியமான காரணங்கள் சுட்டிக்காட்டப்படுகிறது. முதலாவது, ஜனனி பிக்பாஸ் விதியை மீறியிருக்கிறார். பிக்பாஸ் வீட்டில் வாரம்தோறும் நடைபெறும் நாமினேஷன் குறித்து முன்கூட்டியே பேசக்கூடாது, அதாவது தான் யாரை நாமினேட் செய்யப்போகிறோம் என்று மற்ற போட்டியாளர்களிடம் சொல்லக்கூடாது. மற்றொன்று, தான் நாமினேட் செய்ய இருக்கும் போட்டியாளரை நாமினேஷன் செய்யுமாறு மற்ற போட்டியாளர்களை வற்புறுத்தவும் கூடாது. இந்த இரண்டு விதிகளையும் ஜனனி கடந்த வாரம் மீறியிருக்கிறார். அமுதவாணனிடம் தான் ஷிவினை நாமினேட் செய்ய இருப்பதாகவும், நீங்களும் நாமினேட் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இந்தவார நிகழ்ச்சியிலும் கமல்ஹாசன் இது குறித்து ஜனனி, அமுதவாணன், தனலட்சுமி ஆகியோரிடம் விசாரித்தார். இது ஒருபுறம் இருக்க சொர்க்கம், நரகம் டாஸ்கில் விக்ரமன் வெற்றியை பொய் சொல்லி அவரிடம் இருந்து பறித்துக் கொண்டார். விக்ரமன் வெற்றி பெற்றபோதும் தான் தான் முதலில் கோட்டை தொட்டதாக கூறி, அதற்காக சக போட்டியாளர்களையும் சப்போர்ட்டுக்கு இழுத்துக் கொண்டார். இதனை குறும்படம் போட்டு கமல்ஹாசன் காட்டி ஜனனி மற்றும் மற்ற போட்டியாளர்களின் முகத்திரையை அம்பலப்படுத்தினார். ஏற்கனவே செம கடுப்பில் இருந்த ரசிகர்கள் ஜனனிக்கு வாக்களிக்காமல் போனதற்கு இதுவும் ஒரு காரணம் என இப்போது அடிகோடு இடுகின்றனர் விக்ரமன் ஆர்மி.