மும்பை மதுபான பாரில் ரகசிய அறையில் வைக்கப்பட்டிருந்த 17 பெண்களை மீட்ட காவல்துறையினர்..!

மும்பையில்  நடனத்துடன் நடைபெற்று வரும் பார் ஒன்றின் ரகசிய அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 17 பெண்களை போலீசார் வெளியேற்றினர்.

மும்பை தஹிசார் பகுதியில் உள்ள ஓட்டலுடன் அமைந்துள்ள பார் ஒன்றில் காவல்துறையினர் திடீர் ஆய்வு நடத்தினர். அப்போது 19 வாடிக்கையாளர்களும் உணவகத்தின் மேலாளர் உள்ளிட்ட 6 ஊழியர்களும் கைது செய்யப்பட்டனர்.

இந்த அரங்கில் 4 பெண்கள் இருப்பதை கண்ட போலீசார், அங்கு ரகசியமாக அமைக்கப்பட்டிருந்த அறை ஒன்றையும் ஆய்வு செய்து அதில்  பதுங்கி இருந்த 17  இளம் பெண்களையும் வெளியேற்றியதாக தெரிவித்துள்ளனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.