#GetOutRavi: 'கெட் அவுட் ரவி'.. ட்விட்டரில் தேசிய அளவில் முதலிடத்தை பிடித்துள்ள ஹாஷ்டேக்..!

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அரசுக்கு எதிராக செயல்படுவதாக திமுகவும் அதன் கூட்டணியில் உள்ள கட்சிகளும் தொடர் குற்றசாட்டுகளை பதிவு செய்து வருகின்றன. குறிப்பாக சட்டசபையில் கொண்டு வரப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமலும் சில சட்டத்துக்கு காலம் தாழ்த்தி ஒப்புதல் அளிப்பதுமாக ஆளுநரின் செயல்பாடு இருப்பதாக விமர்சிக்கப்படுகிறது. மேலும், திமுகவுக்கு எதிர்க்கட்சி போல செயல்பட்டு போக்கு காட்டி வருவதாக ஆளுநர் மீது புகார் வைக்கப்படுகிறது. இந்த நிலையில், தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டத்தடை மசோதாவுக்கு கையெழுத்திடாமல் … Read more

டெல்லியில் மூன்று நாட்களுக்கு சரக்கு கிடைக்காது.!

டெல்லியில் மாநகராட்சியில் உள்ள 250 வார்டுகளுக்கான தேர்தல் டிசம்பர் 4ஆம் தேதி நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 7ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கடந்த நவம்பர் 4ஆம் தேதி வேட்புமனு தாக்கல் நிறைவடைந்ததை அடுத்து, அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குஜராத் சட்டமன்ற தேர்தலைப்போல் டெல்லி மாநகராட்சி தேர்தலிலும் பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. அதனால் டெல்லி மாநகராட்சி தேர்தலும் பெரும் … Read more

தீவிரமாக பரவும் மற்றுமொரு நோய் தொற்று! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கோவிட் தொற்று பரவும் நிலையில், மறுபுறம் எலிக்காய்ச்சல் இலங்கையில் பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகின்றது. எனினும் எலிக்காய்ச்சல் குறித்த அவதானம் மக்கள் மத்தியில் குறைவாகவே காணப்படுகின்றது.  எலிக்காய்ச்சல்  மழையுடனான வானிலை காரணமாக விவசாயப் பகுதிகளை அண்மித்த பிரதேசங்களில் எலிக்காய்ச்சல் பரவும் வீதம் அதிகரித்துள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நெற்செய்கையில் ஈடுபடும் போது சிறுநீரக நோயாளர்கள் மற்றும் கல்லீரலுடன் தொடர்புடைய நோய் தொற்றுக்குள்ளானவர்கள் இந்த விடயம் தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என பிரதி சுகாதார சேவைகள் … Read more

40க்கு 40 என்று வெற்றி பெற வேண்டும் – மா.செ கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சு

சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுகவின் புதிய நிர்வாகிகள் நியமனத்திற்குப் பின் முதன் முறையாக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், டிபிஐ வளாகம் இனி பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம் என்று அழைக்கப்படும் என்று அறிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தும், அன்பழகனின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, டிசம்பர் 15ஆம் தேதியன்று தமிழ்நாடு முழுவதும் 100 இடங்களில் சிறப்பு பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என்றும் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. … Read more

வலையில் சிக்கிய அரியவகை டால்பின்கள்., மீண்டும் கடலில் விட்ட மீனவர்களுக்கு பரிசு!

தமிழக மீனவர்களின் வலையில் சிக்கிய இரண்டு டால்பின்கள் மீண்டும் பத்திரமாக கடலில் விடப்பட்டன. டால்பின்களை பத்திரமாக மீண்டும் கடலில் விட்ட மீனவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு டால்பின்கள் ராமநாதபுரம் கீழக்கரையில் செவ்வாய்கிழமை அங்குள்ள மீனவர்கள் ஒன்றிணைந்து கரைவலையை கடலில் வீசி கரைக்கு இழுத்தனர். அப்போது சுமார் 4 மற்றும் 6 வயதுடைய டால்பின் மீன்கள் வலையில் சிக்கின. Twitter screengrab @supriyasahuias வலைக்குள் சிக்கி போராடிக் கொண்டிருந்த டால்பின்களை, மீனவர்கள் உயிருடன் மீட்டு மீண்டும் கடலில் … Read more

தமிழக மருத்துவ கல்லூரிகளில் 892 எம்.பி.பி.எஸ். இடங்கள் காலி! மத்தியஅரசின் கொள்கையால் தமிழக மாணவர்களின் வாய்ப்பு வீண்…

சென்னை: தமிழக மருத்துவ கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று முடிந்துள்ள நிலையில் 892 எம்.பி.பி.எஸ். இடங்கள் காலியாக இருப்பதாக தெரிவித்த உள்ளது. மத்திய, மாநில அரசுகளின் இடஒதுக்கீடு கொள்கைகளால், இடங்கள் முழுமையாக ஒதுக்கீடு செய்வதில் ஏற்படும் பிரச்சினையால் தமிழக மாணாக்கர்களுக்கு கிடைக்க வாய்ப்பு வீணடிக்கப்படுகிறது. மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு மூலமே மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அதன்படி, தமிழ்நாட்டில்  அரசு மற்றும் தனியார் சுயநிதி கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள் 7,378 உள்ளன. … Read more

கிறிஸ்துமஸ் கேரல் பாடும் நிகழ்ச்சிகள் துவக்கம்: வீடுகளில் ஸ்டார்கள் கட்டி அலங்காரம்

களியக்காவிளை: குமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான ஆயத்தங்கள்  துவங்கிய நிலையில், கேரல் பாடும் நிகழ்ச்சிகள் துவங்கின. டிசம்பர் மாதம் பிறந்தவுடன் கிறிஸ்துமஸ் பண்டிகை சார்ந்த ஆயத்தப்பணிகள் துவங்குவது வழக்கம். டிசம்பர் மாதம் துவங்கியவுடன் வீடுகளில் ஸ்டார் கட்டி மின் அலங்காரங்கள் செய்யப்படுகின்றன. குமரி மாவட்டத்தில் கிறிஸ்தவர்களின் வீடுகளில் மட்டுமல்லாமல், அனைத்து சமய மக்களும் ஸ்டார் கட்டுவதை வழக்கமாக பின்பற்றி வருகின்றனர். இதற்காக மாவட்டத்தின் பெரும்பாலான கடைகளில் விதவிதமான ஸ்டார்கள் விற்பனைக்கு வந்துள்ளன. அதோடு வீடுகள் மற்றும் வீடுகளின் … Read more

தமிழகத்தில் கொரோனாவுக்கு பிறகு வரி செலுத்துவோர் எண்ணிக்கை 30% அதிகரிப்பு: வருமான வரித்துறை தகவல்

சென்னை: தமிழகத்தில் கொரோனாவுக்கு பிறகு வரி செலுத்துவோர் எண்ணிக்கை 30% அதிகரித்துள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. அதிகளவு வரி வசூலில் தமிழகம் – புதுச்சேரி 3ம் இடத்தில் உள்ளது. தமிழகத்தில் வருமான வரி வசூல் இலக்கில் இதுவரை 53% வசூலிக்கப்பட்டுள்ளது எனவும் என முதன்மை தலைமை வருமான வரி ஆணையர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மேடையில் முத்தம் கொடுத்தது தப்பா?.. போலீசில் புகார் அளித்த மணப்பெண்

லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் சம்பல் அடுத்த பவாச கிராமத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. மணமக்கள் இருவரும் மேடையில் அமர்ந்திருந்தனர். சுமார் 300க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் விழா மேடையின் முன் அமர்ந்திருந்தனர். அப்போது திடீரென மணமகன் மணமகளை முத்தமிட்டார். இதனால் ஆத்திரமடைந்த மணமகள், விழா மேடையை விட்டு வெளியேறி தனது அறைக்கு சென்றார். உறவினர்கள் அவரை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் அவர் சமாதானம் அடையவில்லை. மீண்டும் வரவேற்பு விழா மேடைக்கு செல்ல மறுத்துவிட்டு, காவல் நிலையத்திற்கு சென்று … Read more

”20% கூட வரி கட்டல” – விஜயபாஸ்கர் சொத்து முடக்கம் குறித்து வருமான வரித்துறை விளக்கம்!

வரி பாக்கியில் 20 சதவீதத்தை மட்டும் செலுத்தும்படி கடிதம் அனுப்பியும் செலுத்தாததால் தான் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் சொத்துகளும், வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வருமான வரித் துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், 2011-12ஆம் ஆண்டு முதல் 2018-19ஆம் ஆண்டு வரைக்குமான காலத்துக்கு 206 கோடியே 42 … Read more