லாலுவுக்கு 5ம் தேதி சிங்கப்பூரில் ஆபரேஷன்

பாட்னா: பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவருமான லாலு பிரசாத் யாதவுக்கு சிறுநீரக கோளாறு உள்ளது. அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டி உள்ளதால், அவரது மகளே தந்தைக்கு சிறுநீரகம் தானமாக வழங்க முன் வந்துள்ளார். அதையடுத்து லாலுவுக்கு வருகிற 5ம் தேதி சிங்கப்பூரில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடக்க உள்ளது. இதுகுறித்து லாலுவின் மகனும், துணை முதல்வருமான தேஜஸ்வி, குரானி சட்டசபை இடைத்தேர்தல் பிரசாரத்தில் கூறுகையில், ‘சிறுநீரக மாற்று அறுவை … Read more

”தங்கம் வாங்கிட்டேன்; காட்டுவதற்கு அப்பா இல்லையே” – தமிழக வீராங்கனைக்கு இப்படியொரு துயரமா!

நியூசிலாந்து காமன்வெல்த் போட்டியில் தங்க மெடல் வாங்கிய இளம் பளுதூக்கும் வீராங்கனை, அந்த மெடலை சொந்த ஊருக்கு வந்து தனது தந்தையிடம் காட்ட இருந்தநிலையில், அவர் உயிரிழந்த செய்திதான் கிடைத்துள்ளது. இந்த சம்பவம் கேட்பவர்களையும், பார்ப்பவர்களையும் கண்கலங்க வைத்துள்ளது. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நியூசிலாந்து ஆக்லாண்டில் நடந்து வருகிறது. இதில் பளுதூக்கும் போட்டிகளில் பங்கேற்க தமிழ்நாட்டிலிருந்து 11 வீரர்கள் – வீராங்கனைகள் சென்றுள்ளனர். தமிழக அரசு சார்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வீரர்கள் – வீராங்கனைகளுக்கு வாழ்த்து … Read more

காந்தாரா படம் பேசியிருக்கும் அரசியலில் இத்தனை ஆபத்துகளா? மேக்கிங்கில் புதைந்த உண்மைமுகம்!

சமீபத்திய திரைப்படங்களில் அதிகம் பேசப்பட்ட படம் காந்தாரா! சிறப்பான மேக்கிங் காட்சிகளால் பெரும்பாலன மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ஒரு நல்ல படத்திற்கு சிறப்பான மேக்கிங் மட்டும் போதுமா? அது பேசியிருக்கும் அரசியல் குறித்து பொருட்படுத்த தேவையில்லையா?  காந்தாரா படத்தின் இயக்குநரும், நாயகனுமான ரிஷப் ஷெட்டியின் இயக்கமும், நடிப்பும் நிச்சயம் பாராட்டுக்குரியது தான். அதற்காக ஒரு துளி விஷம் தானே என்று செரித்துகொள்ள முடியுமா என்ன?  எப்போது ஒரு படம் சிறுபான்மையினரையும், விளிம்பு நிலை மக்களை பற்றி பேசும் போது அதில் அறமும், அக்கறையும் இருக்க வேண்டியது அடிப்படையான தார்மீகம். … Read more

தேசிய திரைப்பட கழகத்துக்காக படம் தயாரிக்கிறார் லிங்குசாமி

இயக்குனர் லிங்குசாமி கடைசியாக ராம் பொத்தனேனி நடிப்பில் தி வாரியர் படத்தை இயக்கினார். அந்த படம் எதிர்பார்த்த பலனை கொடுக்கவில்லை. இந்த நிலையில் என்எப்டிசி எனப்படும் தேசிய திரைப்பட கழகத்திற்கு 2 படங்களை தயாரித்து கொடுக்கிறார். இதில் ஒரு படத்தை ரேணிகுண்டா, வயது 18 படங்களை இயக்கிய பன்னீர் செல்வமும், ஒரு கல்லூரியின் கதை, மாத்தியோசி, அழகன் அழகி, ஆனந்தம் விளையாடும் வீடு படங்களை இயக்கிய நந்தா பெரியசாமி இன்னொரு படத்தையும் இயக்குகிறார்கள். “என்.எப்.டி.சிக்கு 2 படங்களை … Read more

அசாமை தொடர்ந்து, உத்தரகாண்டில் கொடூரம்… நிர்வாணப்படுத்தி, மதுகுடிக்க வைத்து ராகிங் கொடுமை

டேராடூன், நாட்டில் பல்கலை கழகங்கள் உள்ளிட்ட உயர் கல்வி நிலையங்களில் ராகிங்கை கட்டுப்படுத்த 2009-ம் ஆண்டு, பல்கலைக்கழக மானிய குழு சார்பில் ஒழுங்கு விதிமுறைகள் கொண்டு வரப்பட்டன. ராகிங்கை தடுக்க கடுமையான சட்டங்கள் நடைமுறையில் உள்ளபோதும், சமீப நாட்களாக ராகிங் கொடுமைகள் வடமாநிலங்களில் அதிகரித்து வருவது தெரிய வந்துள்ளது. அசாமில் திப்ரூகார் பல்கலை கழகத்தில் எம்.காம் படித்து வந்த ஆனந்த் சர்மா என்ற மாணவர் கடந்த 27-ந்தேதி விடுதியின் 2-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். … Read more

அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜனநாயகக் கட்சி தலைவர் பதவிக்கு முதல்முறையாக கறுப்பின எம்.பி. தேர்வு!

வாஷிங்டன், அமெரிக்காவில் நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் (கீழ்சபை) மொத்தம் உள்ள 435 இடங்களுக்கும், செனட் சபையில் (மேல்சபை) 105 இடங்களில் 35 இடங்களுக்கும் கடந்த மாதம் 8-ந் தேதி தேர்தல் நடந்தது. அதில் ஜனாதிபதி ஜோ பைடனின் ஜனநாயகக் கட்சி செனட் சபையை கைப்பற்றியது. பிரதிநிதிகள் சபையில் குடியரசுக் கட்சியினர் மெலிதான பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றார்கள். (கீழ்சபை)பிரதிநிதிகள் சபையை குடியரசு கட்சி கைப்பற்றி விட்ட நிலையில், பிரதிநிதிகள் சபை சபாநாயகர் மற்றும் ஜனநாயக கட்சி தலைவர் பதவியில் … Read more

எனது பந்துவீச்சில் விராட் கோலியை தவிர யாராலும் அந்த சிக்சர்களை அடித்திருக்க முடியாது : ஹரிஸ் ரவுப்

புதுடெல்லி, டி20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று முடிந்தது. இதில் இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியது. இருப்பினும் இந்த தொடரில் விராட் கோலி 4 அரை சதங்களுடன் 296 ரன்களை எடுத்து டி20 உலக கோப்பையில் அதிக ரன் எடுத்த வீரர் என்ற பெருமையை பெற்றார். சூப்பர் 12 சுற்றின் முதல் போட்டியில், பாகிஸ்தான் அணியை இந்தியா சந்தித்தது. இதில் கோலி … Read more

யாழ்ப்பாண மாவட்டத்தில் அங்கவீனமுற்றவர்களுக்கு மாவட்ட அமைப்பு  

அங்கவீனமுற்ற நபர்களுக்கான மாவட்ட மட்ட அமைப்பினை நிறுவுதல் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்று (01) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அங்கவீனமுற்ற நபர்களுக்கான அமைப்பினை மாவட்ட மட்டத்தில் நிறுவும் வகையில் பிரதேச செயலக மட்டத்தில் இயங்கி வருகின்ற மாற்றுவலுவுள்ளோா் அமைப்பின் அங்கத்தவர்களை உள்ளடக்கி யாப்பின் விளக்கம் மற்றும் செயற்பாடுகள் தொடர்பாகவும் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டன. இந்த நிகழ்வின் இறுதி நாள் கலாச்சார … Read more

டாஸ்மாக் கடைகளில் வெளி ஆட்கள் வேலை செய்கிறார்களா? ‘செக்’ வைக்கும் அரசு

டாஸ்மாக் கடைகளில் வெளி ஆட்கள் வேலை செய்கிறார்களா? ‘செக்’ வைக்கும் அரசு Source link

லிப்டில் சிக்கிய அமைச்சர் சுப்பிரமணியன் – என்ஜினீயர்கள் இடைநீக்கம்.!

நேற்று முன்தினம் சென்னையில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிறப்பு மற்றும் அறுவை சிகிச்சை துறை கட்டிடத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவமனைக்கு சென்றார்.  அங்கு நிகழ்ச்சி நிறைவடைந்த பின்னர் மூன்றாவது தளத்திலிருந்து தரை தளத்திற்கு  மின் தூக்கியின் மூலம் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் வந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று  மின் தூக்கியின் இயக்கம் தடைபட்டது. இதனால் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் உடன் வந்த அதிகாரிகள் அனைவரும் … Read more