சீன மாஜி அதிபர் ஜியாங் ஜெமின் மறைவு – இந்தியா இரங்கல்

சீன நாட்டின் முன்னாள் அதிபர் ஜியாங் ஜெமின் மறைவுக்கு இந்தியா இரங்கல் தெரிவித்து உள்ளது. சீனாவில் கடந்த 1989 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராகவும், 1993 ஆம் ஆண்டு முதல் 2003 ஆம் ஆண்டு வரை அந்த நாட்டின் அதிபராகவும் பதவி வகித்தவர் ஜியாங் ஜெமின். 1989 ஆம் ஆண்டு சீனாவை உலுக்கிய தியான்மென் போராட்டங்கள் ஒடுக்கப்பட்ட பின்னர் அதிகாரத்துக்கு வந்த ஜியாங் ஜெமின், … Read more

மின் கட்டணம் அதிகரிக்கப்படுமா! வெளியான முக்கிய அறிவிப்பு

மின்சாரக் கட்டணத்தை திருத்துமாறு மின்சார சபை கோரவில்லை எனவும் தற்போது கட்டண திருத்தம் தேவையில்லை எனவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்னாயக்க தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.  மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பில் மின்சார சபை மற்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பல்வேறு முரண்பாடாக கருத்துக்களை முன்வைத்து வந்தன. இது தொடர்பான விளக்கத்தை வழங்க இன்றைய ஊடக சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. மின்கட்டணத் திருத்த பொறிமுறையொன்று அவசியம்  … Read more

அவதார் 2 வெளியாவதில் சிக்கல்…. ரசிகர்கள் அதிர்ச்சி

டைட்டானிக்,  டெர்மினேட்டர் உள்ளிட்ட படங்களை இயக்கிய ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான படம் அவதார். இப்படத்திற்கு உலகம் முழுக்க ரசிகர்கள் இருக்கின்றனர். மேலும் இப்படம் வசூல் ரீதியாக பல சாதனைகளை படைத்திருக்கிறது. இதனையடுத்து அவதார் படத்தின் இரண்டாம் பாகத்துக்கான பணிகளை கேமரூன் தொடங்கினார். ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்திருந்த இப்படம் டிசம்பர் 16ஆம் தேதி வெளியாக இருக்கிறது. டால்பி ப்ரீமியம் 4k உடன் 3டி தொழில்நுட்பத்தில் தயாராகியிருக்கும் இப்படமானது உலகம் முழுவதும், 160 … Read more

சனிக்கிழமை ஸ்கூல் உண்டு – பள்ளி மாணவர்களுக்கான அறிவிப்பு

தமிழ்நாட்டில் கடந்த மாதம் பல்வேறு மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது. இதனால் பல ஏரிகளும், குளங்களும் நிரம்பியுள்ளன. மேலும் தீவிரமாக மழை பெய்ததால் மாணவர்கள் பள்ளிகளுக்கு வருவதற்கு கடினமான சூழல் ஏற்பட்டது. எனவே அவர்களுக்கு வசதியாக மழையின்போது பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. அந்தவகையில் சென்னை மாவட்டத்தில் கனமழை பெய்ததால் அங்கு பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. ஆனால் அதனை ஈடு செய்யும் விதமாக ஏதேனும் சனிக்கிழமை வேலை நாளாக எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி வரும் சனிக்கிழமை … Read more

விபத்தில் மனைவி இறந்ததாக நாடகமாடிய நபர்: அம்பலமான உண்மை

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் காப்பீடு தொகையை பெறுவதற்காக மனைவியை கூலிப்படை ஏவி கொலை செய்ததாக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். சாலை விபத்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர் மகேஷ் சந்த். இவரது மனைவி ஷாலு தேவி(32) கடந்த 5ஆம் திகதி தனது சகோதரருடன் இருசக்கர வாகனத்தில் கோவிலுக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது வேகமாக வந்த கார் ஒன்று அவர்களின் வாகனத்தின் மீது வேகமாக மோதியதில், சம்பவ இடத்திலேயே ஷாலு தேவி மற்றும் அவரது சகோதரர் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். … Read more

பிரதமர் மோடியின் கொள்கைகள் அரசியல் சர்வாதிகாரத்தை உருவாக்கும் – நாட்டை உடைக்கும்! ஜெய்ராம் ரமேஷ்

நாக்பூர்: பிரதமர் மோடியின் கொள்கைகள் பொருளாதார ஏற்றத்தாழ்வு, சமூக விரோதம் மற்றும் அரசியல் சர்வாதிகாரத்தை உருவாக்கும்  நாட்டை உடைக்கும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், கட்சியின் பொதுச்செயலாளருமான  ஜெய்ராம் ரமேஷ் கடுமையாக விமர்சித்துள்ளார்.  ராகுலின் இன்றைய யாத்திரையில் பிரியங்கா காந்தி மற்றும் முன்னாள் முதல்வர் கமல்நாத் உள்பட மூத்த காங்கிரஸ் தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர். காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பு, விளம்பரம் மற்றும் ஊடகத் துறையின் பொதுச் செயலாளரான ஜெய்ராம்  ரமேஷ், ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ … Read more

குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை வெளிநாடுகளுக்கு பதிவேற்றம் செய்த திருச்சி வியாபாரி வீட்டில் சிபிஐ சோதனை: கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தது அம்பலம்

திருச்சி: பெண் குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள், புகைப்படங்களை வெளிநாடுகளுக்கு பதிவேற்றம் செய்து கோடிக்கணக்கில் சம்பாதித்து வந்த மணப்பாறை வியாபாரி ராஜா வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பூமாலைப்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணியன்(60). ஓய்வுபெற்ற சுகாதாரத்துறை அலுவலர். இவரது மகன் ராஜா(44). விவசாயியான இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் வெளிநாட்டில் தனியார் நிறுவனத்தில் கணக்காளர் பிரிவில் ஓராண்டு வேலை பார்த்து வந்தார். இதைதொடர்ந்து சொந்த ஊர் திரும்பிய அவர், திருப்பூரில் துணி … Read more

வெலிங்டன் நீர்த்தேக்கத்திலிருந்து 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு ஆணை

சென்னை: கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், வெலிங்டன் நீர்த்தேக்கத்திலிருந்து 2022-2023 ஆம் ஆண்டு பாசனத்திற்கு 02.12.2022 முதல் 120 நாட்களுக்கு வினாடிக்கு 175 கன அடி  வீதம் (ஒரு நாளைக்கு 15.12 மில்லியன் கன அடி) தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. இதனால் கடலூர் மாவட்டத்தில் 24059 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

திருப்பதியில் புதிதாக திறக்கப்பட்ட கவுன்டரில் ரூ10 ஆயிரம் நன்கொடை செலுத்தும் பக்தர்கள் ஏழுமலையானை அருகில் சென்று தரிசிக்கலாம்

திருமலை: திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஸ்ரீவாணி அறக்கட்டளை இயங்கி வருகிறது. இந்த அறக்கட்டளை மூலம் கிடைக்கும் நிதியை கொண்டு பழுதடைந்த கோயில்கள் புதுப்பிக்கப்படுகிறது. இந்த அறக்கட்டளைக்கு ரூ10 ஆயிரம் நன்கொடை வழங்கும் பக்தருக்கு விஐபி தரிசனத்தில் செல்வதற்கான முன்னுரிமை வழங்கப்படுகிறது. இதற்காக அந்த பக்தரிடம் ரூ500 பெறப்பட்டு அவர் விரும்பும் நாளில் தரிசிக்க விஐபி பிரேக் டிக்கெட் தரப்படுகிறது. அதன்மூலம் சுவாமியின் கருவறை அருகே அதாவது குலசேகரபடி (மூலவர் சிலைக்கு 10 அடி தொலைவில் நின்று) பகுதியில் … Read more

வணிகநோக்கில் ரிசார்ட்டுகள் செயற்கை நீர் வீழ்ச்சிகளை உருவாக்குவதா?-நீதிமன்றம் புதிய உத்தரவு

தனியார் ரிசார்ட்டுகளில் செயற்கை அருவிகள் குறித்து ஆய்வுசெய்ய சுற்றுலாத்துறை இயக்குனர் தலைமையில், நில நிர்வாக ஆணையர், தலைமை வனக்காப்பாளர் உள்ளிட்ட 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என தமிழக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த வினோத் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினை தாக்கல் செய்திருந்தார். அதில், “நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள குற்றாலம் அருவி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து உருவாகிறது. கடந்த 2019 தென்காசி மாவட்டம் தனியாக பிரிக்கப்பட்டது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் … Read more