பிரேசில் ராணுவ தளபதி அதிரடி நீக்கம்| Brazil military commander fired

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

பிரேசிலியா, : தென் அமெரிக்க நாடான பிரேசிலின் தலைநகரில் சமீபத்தில் நடந்த கிளர்ச்சியை தடுக்க தவறிய, அந்நாட்டு ராணுவ தளபதியை, அதிபர் லுாயிஸ் இனாசியோ லுலா டா சில்வா அதிரடியாக பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

வன்முறை

பிரேசிலில் கடந்த அக்டோபரில் நடந்த அதிபர் தேர்தலில் லுலா வெற்றி பெற்றார். முன்னாள் அதிபர் ஜெயிர் போல்சனாரோ, தன் தோல்வியை ஏற்க மறுத்து, ஓட்டு எண்ணிக்கையில் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டினார்.

இந்நிலையில், கடந்த 1ம் தேதி லுலா அதிபராக பொறுப்பேற்றார். லுலா அதிகாரத்திற்கு வருவதைத் தடுக்க ராணுவ கிளர்ச்சியை போல்சனாரோ துாண்டி விட்டார்.

மேலும் அவரதுஆதரவாளர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்ததுடன், 8ம் தேதி பார்லிமென்ட், உச்ச நீதிமன்றம், அதிபர் மாளிகை உள்ளிட்ட பகுதிகளில் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர்.

அச்சுறுத்தல்

இதைத்தொடர்ந்து ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகவும், போல்சனாரோவின் ஆதரவாளர்களின் வன்முறையை கட்டுப்படுத்த தவறியதாகவும் கூறி, ஜெனரல் ஜூலியோ சீசர் அர்ருடா ராணுவ தளபதி பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.

அவருக்கு பதிலாக தென்கிழக்கு ராணுவ கமாண்டோ தலைவராகஇருந்த ஜெனரல் டோமஸ் மிகுவல் ரிபேரோ பைவா, புதிய தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.